பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. அப்போ உடனே இதை செஞ்சிடுங்க.. இல்லைன்னா அரசு திட்டங்கள் கிடைக்காது!

சென்னை: அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளைப் பெற உங்களுடைய ஆதார் கார்டு கட்டாயம் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உதவித்தொகைகள், ஓய்வூதியங்கள் மற்றும் அரசாங்க மானியங்கள் போன்ற பலன்களை பெறுவதற்கு, இந்த இணைப்பு கட்டாயமாகிறது. சிலர் ஆன்லைனில் தங்களது ஆதார் கார்டு எண்ணை, வங்கி கணக்குடன் இணைத்து இருப்பீர்கள். ஆனால் சிலருக்கு தங்களுடைய ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைந்திருக்கிறதா? என்பது பற்றி தெரியாமல் இருக்கிறது. அவர்களுக்குத் தான் இந்தப் பதிவு. எளிய முறையில் எப்படி ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைந்திருப்பதைக் கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம்.

ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைந்திருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?: இதனை நீங்கள் மூன்று வழிகளைக் கொண்டு கண்டு பிடிக்க முடியும். முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.

பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. அப்போ உடனே இதை செஞ்சிடுங்க.. இல்லைன்னா அரசு திட்டங்கள் கிடைக்காது!

ஸ்டெப் 1: முதலில் யூஐடிஏஐ-இன் https://uidai.gov.in/en/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: "My Aadhaar" என்பதைக் கிளிக் செய்து, பின்னர் "Bank Seeding Status" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: தற்போது உங்களுடைய ஆதார் எண் மற்றும் OTP-ஐ என்டர் செய்து "Login" செய்யவும்.
ஸ்டெப் 4: அதன் பிறகு "Bank Seeding Status" என்ற மெனுவை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: அடுத்து வரும் ஸ்கிரீனில், உங்கள் ஆதார் அட்டை மூலம் இணைக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளையும் உடனடியாகப் பார்க்கலாம்.

மொபைல் மூலம் ஆதார் வங்கி இணைப்பை சரிபார்ப்பது எப்படி?
உங்கள் மொபைல் ஃபோன் மூலம், USSD குறியீட்டைப் பயன்படுத்தி, ஆதார் வங்கி இணைப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்டெப் 1: உங்கள் UIDAI-ல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி *99*99*1# என்ற எண்ணில் அழைக்கவும்.
ஸ்டெப் 2: முடிந்ததும், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை துல்லியமாக என்டர் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் ரீ-என்டர் செய்து 'Send' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, உங்கள் மொபைல் ஸ்கிரீனில், உங்கள் வங்கிக் கணக்கு காட்டப்படும். இருப்பினும், இந்தச் செயல்முறைக்கு உங்களின் UIDAI-ல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி நிலவரப்படி, இந்த முறையை பயன்படுத்தும் போது தற்காலிகமாக சில நாட்களுக்கு, இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்பது போன்ற மெசேஜ் வருகிறது. எனவே சில நாட்களுக்கு பின் இந்த முறையை பயன்படுத்துங்கள். இது மிகவும் எளிய முறையில் தெரிந்து கொள்ளும் முறை ஆகும்.

மூன்றாவது முறையாக உங்கள் ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு இணைந்திருக்கிறதா என்பதை உங்களது வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி நீங்கள் அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு மட்டுமே ஆதார் மற்றும் மொபைல் நம்பரை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+