மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பான் எண்-ஐ தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31ஆம் தேதி இறுதி நாளாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே பலரும் ஆதார் - பான் எண்-ஐ வருமான வரி செலுத்தும் போது இணைத்திற்க வாய்ப்பு உள்ளது, ஆனால் சரியாக உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதாக என்பதைச் செக் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இதற்கு முக்கியக் காரணம் மார்ச் 31க்குள் ஆதார் - பான் எண் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே அனைவரும் ஆதார் - பான் எண் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..?
1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home
2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.
5. இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும்.


Click it and Unblock the Notifications