Free..! Free..! ஏர்டெல் நம்பர் இருந்தா போதும்.. 17000 ரூபாய் கிடைக்கும்..!! #AI

இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தனது கோடிக்கணக்காக வாடிக்கையாளர்களுக்கு 17000 ரூபாய் மதிப்பிலான சேவையை இலவசமாக கொடுக்க தயாராகியுள்ளது. இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் பெரும்பாலும் Netflix, Amazon Prime போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களை தான் தனது வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு சேவையாகவும், காம்போ ஆஃபர் ஆகவும் வழங்கி வந்தது.

ஆனால் ஏர்டெல் இப்போது முதல் முறையாக AI சாட்பாட் சேவையில் கவனம் செலுத்தியுள்ளது. மேலும் கூகுள், ஓபன்ஏஐ நிறுவனங்கள் செய்யாத ஒரு புதுமையை தமிழரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையில் இயங்கும் Perplexity AI நிறுவனம் செய்துள்ளது. ஏர்டெல் உடன் இணைந்தது மூலம் Perplexity சுமார் 39 கோடி வாடிக்கையாளர்களை பெற உள்ளது.

Free..! Free..! ஏர்டெல் நம்பர் இருந்தா போதும்.. 17000 ரூபாய் கிடைக்கும்..!! #AI

ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஆண்டு இலவச Perplexity Pro சந்தா வழங்கி வருகிறது. இது சுமார் ரூ.17,000 மதிப்புள்ள சேவையாகும். உலகமே ஏஐ பக்கம் சென்று கொண்டு இருக்கும் போது ஏர்டெல் மற்றும் Perplexity ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் Perplexity Pro பெறுவது எப்படி?:
இந்த இலவச Perplexity Pro சந்தாவை பெறுவது மிகவும் எளிது. முதலில் உங்கள் ஏர்டெல் Thanks ஆப்-ஐ திறந்து, 'Rewards' பகுதிக்கு செல்லுங்கள்.

அங்கு "Get 12 months of Perplexity Pro worth Rs 17,000 FREE" என்ற பேனரை-ஐ கண்டுபிடித்து அதை தட்டவும். பின்னர் 'Claim Now' என்ற பட்டனை அழுத்தி, Perplexity இணையதளத்தில் உள்நுழைய அல்லது பதிவு செய்யுங்கள்.

இது இலவச சந்தாதலால், கிரெடிட் கார்ட் அல்லது பிற பணம் செலுத்தும் விவரங்களை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. இந்த படியை பின்பற்றினால் உங்களுக்கு ஒரு ஆண்டு சந்தா கிடைக்கும்.

மேலும் லாக்இன் செய்யும் போது உங்கள் ஜிமெயில் ஐடி-யில் இருந்து கூட லாக்இன் செய்ய முடியும் என்பதால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த Perplexity Pro சேவையை ஆப் வாயிலாக மொபைலிலும், கம்பியூட்டர், லேப்டாப் வாயிலாகவும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

Free..! Free..! ஏர்டெல் நம்பர் இருந்தா போதும்.. 17000 ரூபாய் கிடைக்கும்..!! #AI

Perplexity Pro-வின் சிறப்பு அம்சங்கள்:
Perplexity Pro என்பது ஒரு AI சக்திவாய்ந்த தேடல் மற்றும் பதிலளிக்கும் கருவியாகும், இந்த சேவை மூலம் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 300 AI தேடல்களை செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் நீங்கள் டாகுமென்ட் மற்றும் இதர வகையான FILES-களை பதிவேற்றம் செய்து அவற்றை பகுப்பாய்வு செய்லாம்.

மேலும், DALL-E போன்ற டெக்ஸ்ட்-டு-இமேஜ் ஜெனரேட்டர்களை பயன்படுத்தலாம், இதனால் உங்கள் வேலைகள் எளிதாகும், மேம்படும். இந்த அம்சங்கள் பள்ளி மாணவர்களுக்கு படிப்பு உதவி முதல் டெக் ஊழியர்கள் வரையில் அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படும்.

புதிய மாற்றம்:
இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் பெரும்பாலும் Netflix, Amazon Prime போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களை இணைக்க பல கவனம் செலுத்தி வந்தன. ஆனால், ஏர்டெல் இப்போது முதல் முறையாக AI சாட்பாட்-இன் வழங்குகிறது, இது இந்தியாவில் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+