கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல்.. கிராமப்புறங்களிலும் தற்போது விரிவடைந்துள்ளது. பல நிறுவனங்கள் கிரெடிட் கார்டுகளை இலவசமாக வழங்கி மக்களை கவர்கின்றன. மேலும் நீங்கள் குறிப்பிட்ட வரம்பு வரை செலவு செய்தால் வருடாந்திர கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த சலுகைகள் மற்றும் ரிவார்ட் பாய்ண்டுகள் நல்லதாக தோன்றினாலும், கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதிலிருந்து தப்பிப்பது எப்படி? ஏன் மக்கள் கிரெடிட் கார்டு கடனின் வலையில் விழுகிறார்கள்? என்பதை விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
கிரெடிட் கார்டு கடனில் மக்கள் எப்படி விழுகிறார்கள்?: இன்றைய சமூகத்தில் கிரெடிட் கார்டுகள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறிவிட்டன. அவை பல நன்மைகளை வழங்கினாலும், சில தீமைகளும் கிரெடிட் கார்டுகளில் இருக்கிறது. குறிப்பாக அதிக வட்டி விகிதங்கள். உதாரணமாக, தனிநபர் கடன்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து 10 முதல் 16 சதவீதம் வரை வட்டி விகிதங்களைக் கொண்டிருக்கும். மாறாக, கிரெடிட் கார்டு வட்டி விகிதங்கள் 30 முதல் 42 சதவிகிதம் வரை உயரலாம்.

கிரெடிட் கார்டு கடன்களில் சிக்கினால் என்ன நடக்கும்?: கிரெடிட் கார்டு வழங்குனர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி பலரும் கிரெடிட் கார்டுகளை வாங்குகின்றனர். அதன் பின் கிரெடிட் கார்டுகளை வைத்து அதிகமாகச் செலவழித்து தங்கள் பில்களை முழுமையாகச் செலுத்தத் தவறிவிடுகின்றனர்.
பில்லின் ஒரு பகுதியை செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டும் என்று சிலர் தவறாக நம்புகிறார்கள். அனால் அப்படி கிடையாது. நீங்கள் முழுத் தொகையையும் செலுத்தவில்லை என்றால், முழு நிலுவைத் தொகைக்கும் வட்டி விதிக்கப்படும்.
உதாரணமாக, உங்கள் பில் ரூ. 50,000 மற்றும் நீங்கள் ரூ. 40,000 செலுத்தினால், நீங்கள் ரூ. 50,000 முழுவதற்கும் வட்டி செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி விகிதங்கள் 42 சதவீதம் வரை அதிகமாக இருப்பதால், இது காலப்போக்கில் தாமதக் கட்டணங்கள் உட்பட குறிப்பிடத்தக்க கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும்.
கிரெடிட் கார்டு வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?:
கிரெடிட் கார்டு உபயோகத்தை குறைத்து தனிநபர் கடனைக் கருத்தில் கொள்ளவும்: கிரெடிட் கார்டு கடனில் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், முதல் படி உங்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டைக் குறைப்பதாகும்.
கிரெடிட் கார்டுகளில் அதிக நிலுவை தொகையைக் கொண்டிருந்தாலும், தனிநபர் கடனை எடுத்து கிரெடிட் கார்டு கடன்களை அடைக்க முயற்சிக்கலாம். ஏனெனில் கிரெடிட் கார்டுகளுக்கு 30 முதல் 42 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் தனிநபர் கடன்கள் பொதுவாக குறைந்த வட்டி விகிதங்களை கொண்டுள்ளன. தனி நபர் கடன்களுக்கு சுமார் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்கலாம்.
உங்கள் கடனை EMI-களாக மாற்றவும்: உங்கள் நிலுவைத் தொகையை மாதாந்திர தவணைகளாக (EMIகள்) மாற்றுவது பற்றி உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்துடன் பேசுவது மற்றொரு விருப்பமாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ரூ. 100,000 செலுத்த வேண்டியிருந்தால், அதை முழுமையாகச் செலுத்த முடியாவிட்டால், நீங்கள் EMI திட்டத்தைத் தேர்வுசெய்யலாம்.
கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளை வழங்கினாலும், ஒரு சிறிய தவறு கூட நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும். கிரெடிட் கார்டு பெறுவதற்கு அவசியம் இருந்தால் மட்டுமே கிரெடிட் கார்டுகளைப் பற்றி செலவு செய்யவும்.


Click it and Unblock the Notifications