சென்னை: தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகையை வழங்கி வருகிறது. கலைஞர் உரிமைத்தொகை என்ற இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறையில் இருக்கிறது.
இதன்படி குடும்ப அட்டை அடிப்படையில் குடும்பத்தின் மொத்த வருமானம் கணக்கிடப்பட்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு 1000 ரூபாய் பெறுவதற்கு பலர் விண்ணப்பம் செய்து இருந்தாலும் மிகுந்த கவனத்துடனே பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான உரிமை தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தகுதி இல்லாத சிலரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு மாதந்தோறும் 1000 ரூபாயை பெற்று வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் அவர்களுக்கு தெரிந்து யாராவது தகுதி அல்லாத நபர்கள் மாதந்தோறும் 1000 ரூபாயை வாங்குகிறார்கள் என்பது தெரிந்தால் அதனை ஆன்லைன் வாயிலாகவே எளிதாக புகார் அளிக்க முடியும். இதற்கு https://kmut.tn.gov.in/public_complaints.html பக்கத்திற்கு செல்ல வேண்டும் . அதில் புகார் தெரிவிக்கும் நபர் அவருடைய பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியை உள்ளிட வேண்டும் . இதில் பெயரும் தொலைபேசியும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தகுதியற்ற நபர் யார் என்பது குறித்த விவரங்களை குறிப்பிடுவது கட்டாயம். அந்த தகுதியற்ற நபரின் பெயர் ,அவர் வசிக்கும் மாவட்டம், வட்டம் ஆகிய மூன்றையும் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். இது தவிர அந்த நபரின் கைபேசி எண், வருவாய் கிராமம் ,ரேஷன் கடை, முகவரி ஆகியவை தெரிந்தால் உள்ளீடு செய்யலாம் தெரியவில்லையெனில் விட்டுவிடலாம்.
இதனை அடுத்து அந்த நபர் ஏன் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தகுதி இல்லாதவர் என நீங்கள் கருதுகிறீர்கள் என்பது குறித்து 500 எழுத்துக்களுக்கு மிகாமல் பதிவிட வேண்டும். தகுதையின்மைக்கு என்னென்ன காரணம் இருக்கிறது என்பது குறித்த ஆப்ஷன்களும் இந்த இணைய பக்கத்திலேயே வழங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளது, குடும்பத்தில் அரசு ஊழியர்கள் /அரசு ஓய்வூதியம் பெறும் நபர்கள் உள்ளனர், குடும்பத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் அல்லது வருமான வரி செலுத்துபவர் உள்ளனர், குடும்பத்தில் சொந்த பயன்பாட்டுக்கான நான்கு சக்கர வாகனம் உள்ளது என்பன உள்ளிட்டவற்றில் எது பொருத்தமானதோ அதையும் தேர்வு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர், குடும்பத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து பிற ஓய்வூதியம் பெறுபவர் உள்ளனர், ஒரே குடும்பத்தில் இரண்டு நபர்கள் உரிமைத் தொகை பெறுகின்றனர் என்பன உள்ளிட்ட ஆப்ஷன்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் ஒன்றை தேர்வு செய்த பிறகு புகார் பதிவு செய்யும் நபரின் கைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அதனை உள்ளீடு செய்தால் உங்களுடைய புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் . அவர்கள் அங்கே வந்து ஆய்வு நடத்தி உண்மையாகவே அந்த நபர் தகுதியற்றவர் என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை ரத்து செய்வார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications