பல நேரங்களில் மக்கள் பட்ஜெட் இல்லை என்றாலும் தங்களுக்கு பிடித்தவற்றை வாங்குவதற்காக கடன் பெறுகின்றனர். ஆனால் அதன் பின்பு ஒவ்வொரு மாதமும் EMI செலுத்த சிரமப்படுகின்றனர். எனவே நீங்கள் எந்தப் பொருளை வாங்கினாலும் அதற்கான பட்ஜெட்டை முன்கூட்டியே தீர்மானிப்பது நல்லது. இந்த பதிவில் கார் வாங்குவதற்கு உங்களின் சம்பளத்திற்கு ஏற்ற பட்ஜெட் எவ்வளவு? என்பதையும், அதை தெரிந்து கொள்வதற்கான ஃபார்முலா என்ன? என்பது குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில் கார் ஒரு அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது. புதிய கார் வாங்குவதற்கு அதிக அளவிலான மக்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் தற்போது கார்களுக்கு பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகள் கிடைத்து வருகிறது. பொதுவாகவே புத்தாண்டு நெருங்கி விட்டால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவிலான சலுகைகளை மக்களுக்கு வழங்கும். இதுபோன்ற சலுகைகளின் காரணமாக மக்கள் பலர் தங்களின் பட்ஜெட்டை மீறி கார் வாங்குவதற்கு கடன் பெற்று விடுவார்கள். எனவே உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற காரைத் தேர்வு செய்வது எப்படி? என்பதைப் பார்ப்போம்.

மக்கள் சிலர் கடனில் தானே கார் வாங்குகிறோம். எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் வாங்கி விடுகின்றனர். ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் ஈஎம்ஐ செலுத்தும் போதுதான் சிரமம் ஏற்படுகிறது. எனவே காரின் பட்ஜெட்டை முன்கூட்டியே தீர்மானிப்பதற்கு ஒரு பார்முலாவை பயன்படுத்த வேண்டும். வங்கியில் கடன் வாங்கி கார் வாங்க திட்டமிட்டால் முதலில் அனைத்து வங்கிகளுக்கும் சென்று மலிவான விலையில் கடன் வழங்குவது எந்த வங்கி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கார் வாங்க பட்ஜெட்டை தீர்மானிக்கும் ஃபார்முலா: கடன் வாங்கி கார் வாங்க திட்டமிட்டிருந்தால் 50/20/4/10 என்ற ஃபார்முலாவை பயன்படுத்தலாம். இதில் முதலில் உள்ள 50 என்பது உங்கள் ஆண்டு வருமானத்தில் 50 சதவீதத்தை குறிக்கிறது. உதாரணமாக நீங்கள் கார் வாங்க திட்டமிட்டிருந்தால் உங்கள் ஆண்டு வருமானத்தில் பாதியை கொடுத்து கார் வாங்கலாம். நீங்கள் ஆண்டு வருமானமாக ரூ.12 லட்சத்தை பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் நீங்கள் 6 லட்சம் மதிப்பிலான காரை வாங்க வேண்டும். இதைவிட அதிக விலை கொண்ட கார் வாங்குவது உங்கள் பட்ஜெட்டை சீர்குலைக்கலாம்.
அடுத்ததாக ஃபார்முலாவில் உள்ள 20 என்பது 20 சதவீத முன்பணம் செலுத்துவதைக் குறிக்கிறது. நீங்கள் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் ரூ.6 லட்சத்திற்கு 20 சதவீதம். அதாவது ரூ.1,20,000 ரூபாயை முன்பணமாக செலுத்த வேண்டும். இதற்கு மேலும் உங்களால் கொடுக்க முடியும் என்றால் நல்லது தான். ஆனால் குறைவாக கொடுக்காதீர்கள்.
அதன் பிறகு பார்முலாவில் வரும் 4 என்பது கடன் காலத்தை குறிக்கிறது. நீங்கள் கடன் வாங்கிய பிறகு கடனின் காலம் 4 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. அடுத்ததாக 10 என்பது உங்கள் EMI தொகையைக் குறிக்கிறது. உங்கள் EMI தொகை 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது.
எவ்வளவு லோன் வாங்கலாம்?: நீங்கள் ரூ.6 லட்ச ரூபாய் மதிப்பிலான காரை வாங்க இருக்கிறீர்கள் என்றால் அதற்கு ரூ.1,20,000 ரூபாயை முன்பணமாக செலுத்த வேண்டும் என்று முன்பே பார்த்தோம். அத்தகைய சூழ்நிலையில் ரூ.4,80,000 ரூபாயை கடனாகப் பெறலாம். எஸ்பிஐ வங்கியிலும் வாகனக் கடன்கள் கிடைக்கிறது. அதற்கு தற்போது 9.2 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதற்கான கடன் காலம் 4 ஆண்டுகள் ஆகும். எனவே மாத மாதம் EMI-யாக நீங்கள் ரூ.11,990-ஐ செலுத்த வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள ஃபார்முலாவை வைத்து உங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை எளிதில் தீர்மானிக்க முடியும். இதே பார்முலாவை பயன்படுத்தி உங்கள் வருமானத்திற்கு கணக்கிட்டு கடன் பெறலாம். இதனால் கடன் சுமையில் சிக்காமல் பிடித்த விஷயத்திற்கு செலவு செய்ய முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications