மெட்டா நிறுவனம் தங்களுடைய சமூக ஊடக தளங்களில் Fact Checking பிரிவினை நீக்கி இருப்பது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பல்வேறு பயனாளர்களும் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை டெலிட் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் போலியான தகவல்கள் பரவி அதன்மூலம் பல்வேறு வன்முறைகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டதை அடுத்து சமூக ஊடகங்கள் வழியாக போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க ஃபேக்ட் செக்கிங் எனப்படும் உண்மை கண்டறியும் நடைமுறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் பிரபலமாகி வருகின்றன.

இந்த நிலையில் மெட்டா நிறுவனம் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் ஜனவரி 7ஆம் தேதியிலிருந்து ஃபேக்ட் செக்கிங் எனப்படும் உண்மை கண்டறியும் நடைமுறைகள் செயல்படாது என தெரிவித்துள்ளது.
இது பேஸ்புக்கின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது எனக்கூறி பல்வேறு பயனாளர்களும் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை டெலிட் செய்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற காலங்களில் போலியான தகவல்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக எளிதாக பரவின. இது வன்முறைகளை தூண்டிவிட்டது அதோடு மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நிகழ்வுகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
எனவே தான் சமூக ஊடகங்களில் இதுபோன்ற போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க உண்மை கண்டறியும் கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. முதன்முறையாக மெட்டா நிறுவனம் தங்களுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த உண்மை கண்டறியும் கருவிகளை ஒருங்கிணைத்தது. இதனால் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக்கூடிய தகவல்கள் நம்பகத்தன்மை கொண்டவை என்ற நம்பிக்கை மக்களிடையே பிறந்தது.
இந்த நிலையில் மார்க் ஸக்கர்பர்க் இந்த உண்மை கண்டறியும் கருவிகளை அகற்றுவதாக அறிவித்துள்ளார். எனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது என பயனாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பல்வேறு வாடிக்கையாளர்களும் உண்மையான தகவல்களை வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக ஊடகங்களை நோக்கி மாறி வருகின்றனர் என டெக் கிரஞ்ச் என்ற தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பலரும் கூகுளில் பேஸ்புக் பக்கத்தை நிரந்தரமாக எப்படி டெலிட் செய்வது என்பது குறித்து தேடி இருப்பதும் தெரியவந்துள்ளது. பேஸ்புக்கில் இருக்கும் போட்டோக்களை எப்படி டெலிட் செய்வது, பேஸ்புக்கிற்கு மாற்றாக அதே வேளையில் நம்பகமான சமூக ஊடக தளம் எது என்பன உள்ளிட்ட தேடுதல்கள் கூகுள் ட்ரெண்டில் அதிகரித்திருப்பதாக செய்தி குறிப்பிடுகிறது.
சமூக ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் உண்மையான மக்களுக்கு பலன் தரும் தகவல்கள் பரவுவதை உறுதி செய்வது அதன் உரிமையாளர்களின் கடமை. ஆனால் மெடா அதில் இருந்து சற்றே விலகி இருப்பது பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications