சென்னை: நிதி தொடர்பான அனைத்து பரிவர்தனைகளுக்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருப்பது பான் கார்டு. உங்களது பான் கார்டை யாரேனும் தவறாக பயன்படுத்துகிறார்களா? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று பார்ப்போம்.
இன்றைய இன்டர்நெட் உலகில் பல ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதேபோல், மற்றவர்களின் பான் கார்டை வைத்தும் தொடர்ந்து மோசடிகள் நடக்கின்றன. மத்திய அரசு எப்படி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயம் என அறிவுறுத்தியதோ, அதே போல் உங்களது பான் கார்டும் வங்கிக் கணக்கும் கட்டாயம் இணைந்திருக்க வேண்டும். பான் கார்டு, வங்கிகளில் உங்களது அனைத்து பரிவர்த்தனைக்கும் தேவைப்படும் ஆவணமாக இருக்கிறது. இதனால் சில கும்பல் பான் கார்டை தவறாக பயன்படுத்தி பணரீதியாக பல மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

கடந்த வருடம் முன்னணி கிரிக்கெட் வீரரான எம் எஸ் தோனி மற்றும் நடிகர்கள் இம்ரான் ஹாஷ்மி, அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி ஆகியோரின் பான் கார்டு விவரங்களை திருடி ஆன்லைன் மோசடி கும்பல் கிரெடிட் கார்டை வாங்கியது என தகவல் வெளியானது.
இதே போல் பல மோசடிகள் பான் கார்டை வைத்து நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, உங்களது பான் கார்டை மற்றவர்கள் மோசடி செய்யும் நோக்கில் பயன்படுத்துகிறார்களா? என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம், என்று பார்ப்போம்.
பான் கார்டு வருமானவரித்துறையினரால் வழங்கப்படும் ஆவணம் ஆகும். இது 10 இலக்க பான் நம்பரை கொண்டிருக்கும். இந்த பான் நம்பர் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
உங்களுடைய பான் கார்டை மற்றவர்கள் மோசடிக்காக பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் அதற்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் சிபில் ஸ்கோரை கண்காணிக்க வேண்டும்: சிபில் ஸ்கோரை வைத்து உங்களது அனைத்து வங்கி சார்ந்த பரிவர்த்தனைகள், நீங்கள் வாங்கிய கடன், நிலுவையில் உள்ள கடன், முடிக்கப்பட்ட கடன், போன்ற கடன் சார்ந்த விஷயங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். எனவே உங்கள் கிரெடிட் அறிக்கையைப் பெற்று, அதனை நன்கு செக் செய்யும் போது, யாரேனும் மோசடியாக உங்களது பான் கார்டை பயன்படுத்துகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வங்கிகளுக்கு தெரிவித்தல்: உங்கள் பான் கார்டை மோசடியாக பயன்படுத்தி பரிவர்த்தனைகள் நடப்பது போல் சந்தேகம் இருந்தால், உடனே உங்களது வங்கி கிளையை அணுகவும், அவர்கள் உங்களது அக்கவுண்ட்டை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவார்கள்.
போலீசில் புகார் செய்யலாம்: உங்களிடம் மோசடியாக பணம் பெற்றவர்களின் ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் நீங்கள் அதனை வைத்து போலீசில் புகார் செய்யலாம்.
வருமான வரித்துறை கணக்கை சரி பார்ப்பது: வருமானவரித்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று உங்கள் அக்கவுண்டில் லாகின் செய்யவும். உங்களது வரி தாக்கல்கள் போன்றவற்றை நீங்கள் ஆய்வு செய்யலாம். அதில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை சரி பார்க்கலாம்.
மேலும், பான் கார்டு அதிகாரப்பூர்வ இணையதளமான TIN NSDL போற்றலுக்கு செல்லவும். அதன் பின் Customer Care என்பதை கிளிக் செய்யவும். அங்கு உள்ள மெனு வில் Complaint and Queries என்பதை கிளிக் செய்யும். தற்போது, வெப்சைட்டில் இன்னொரு பேஜ் ஓபன் ஆகும். அதில் ஒரு புகார் படிவம் இருக்கும், அதனை தேவையான விவரங்களை சேர்த்து பூர்த்தி செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications