5 லட்சத்தை 10 லட்சமாக்கும் பார்முலா.. சிம்பிள் கணக்கு..!!

ஒவ்வொருவரும் குறுகிய காலத்தில் அதிகப்படியான பணத்தை சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என கனவுடன் தான் உள்ளோம், ஆனால் எது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கான விடையை கண்டுப்பிடிப்பதில் ஒருவரின் திறமை உள்ளது. என்னதான் வருடம் முழுவதும் கடினமான உழைத்தாலும் ஒட்டுறது தான் ஒட்டும் என்ற சலித்துக்கொள்ளும் பலர் ஸ்மார்ட் ஆக பணத்தை சம்பாதிக்க பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

இப்படி செய்யப்படும் முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பதை எப்படி கணக்கிட முடியும். பொதுவாக முதலீட்டு உலகில் 5 சதவீதம் 25 சதவீதம் லாபத்தை எல்லாம் யாரும் பொருட்படுத்துவதே கிடையாது டபுள் தான் டார்கெட். பெரும் முதலீட்டாளர்கள் எல்லாம் தாங்கள் செய்யும் முதலீட்டை எப்போது இரட்டிப்பாக்க முடியும் என்பதை யோசித்து தான் முதலீடு செய்கிறார்கள்.

5 லட்சத்தை 10 லட்சமாக்கும் பார்முலா.. சிம்பிள் கணக்கு..!!

நாம் செய்யப்படும் முதலீடு இரட்டிப்பாக வேண்டுமெனில் சில வருடங்கள் கட்டாயம் தேவை, இதேபோல் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் போது தற்காலிக தடுமாற்றம் முதலீட்டாளர்களை பாதிக்காது. இதனாலேயே பெரும் முதலீட்டாளர்கள் பெரும் பணத்தை சம்பாதிக்க சில காலம் எடுத்துக்கொண்டாலும் உறுதியான லாபத்தை எடுக்கின்றனர்.

சரி நீங்கள் செய்யும் முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்பதை கணக்கிட ஒரு பார்முலா உள்ளது, இது தான் நம்முடைய முதலீட்டுக்கு அடிப்படையாக அமைய உள்ளது. இந்த பார்முலா-வுக்கு பெயர் Rule 72, இதில் இருந்து எப்படி நம்முடைய முதலீடு இரட்டிப்பாகும் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

கிஷோர் என்பவர் 10 லட்சம் ரூபாயை 100 சதவீதம் பாதுகாப்பான நிலையான லாபம் தரக்கூடிய வங்கி வைப்பு நிதியில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். கிஷோர் முதலீடு செய்யும் வைப்பு நிதிக்கு 6.25 சதவீதம் வருடாந்திர வட்டி வருமானம் வருகிறது என வைத்துக்கொண்டால் 11 வருடம் 6 மாதத்தில் இரட்டிப்பாகும்.

இது எப்படி கணக்கிடப்படுகிறது..? 72 என்பதை உங்களுடைய வட்டி வருமான அளவீட்டை வைத்து வகுக்க வேண்டும். அதானது 72 / 6.25 வட்டி = 11.52 வருடம், இதை வருடத்தை இலக்காக கொண்டு கூட திட்டமிடலாம். அதாவது 72 / 5 வருடம் = 14.4 சதவீத வட்டி தரும் திட்டத்தில் முதலீடு செய்தால் 5 வருடத்தில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.

வங்கி வைப்பு நிதி பொறுத்த வரையில் வருடாந்திர அடிப்படையில் பல்வேறு வங்கிகள் நமக்கு வட்டி வருமானத்தை செலுத்தும் அப்படி இதை பெற்றால் 11 வருடம் 6 மாதத்தில் நமக்கு 5 லட்சம் முதலீடு + 3.6 லட்சம் என 8.6 லட்சம் மட்டுமே கிடைக்கும். வட்டி வருமானத்தையும் திரும்பவும் முதலீடு செய்யும் சேவைகளை பல வங்கிகள் அளிக்கிறது.

வங்கி வைப்பு நிதியை தாண்டி நிறுவன பங்குகள், மியூச்சவல் பண்ட், தங்க பத்திரம், அரசு பத்திரங்கள் ஆகியவற்றிலும் முதலீடு செய்யலாம். ஆனால் நிறுவன பங்குகள், மியூச்சவல் பண்ட்களில் முதலீடு செய்யும் போது சந்தை நிலவரம், நிறுவனத்தின் முன் நிதியியல் முடிவுகள், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள், நிர்வாக குழு, போர்ட்போலியோ மேனேஜர், Diversification, துறை கலப்பினம், முதலீட்டு துறை கலப்பினம் என பலவற்றை தெரிந்துக்கொண்டு கணக்கிட வேண்டும்.

எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு வருடத்திற்கு சராசரியாக குறிப்பிட்ட அளவிலான வளர்ச்சி அடையும் என ஒரு முடிவுக்கு வருவீர்கள், அதை வைத்து Rule 72 பார்முலா வைத்து கணக்கிட்டால் போதும். உங்கள் பணத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+