சென்னை: EPF பாஸ்புக் என்பது ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்புகள் மற்றும் பரிவர்த்தனைகளின் டிஜிட்டல் பதிவு ஆகும். இது PF டெபாசிட்கள், வட்டி மற்றும் பிற விவரங்களை வழங்குகிறது. இந்தப் பதிவில் EPF பாஸ்புக்கை எப்படி டவுன்லோட் செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
EPF அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு அரசாங்கத் திட்டமாகும், இது அனைத்து ஊழியர்களும் தங்கள் எதிர்காலத்திற்குத் தேவையானதைச் சேமிக்க உதவும் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தில், நீங்கள் முதலீடு செய்யும்போது ஓய்வுபெறும் காலங்களில் உதவியானதாக இருக்கும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 1952 இல் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

ஊழியர்கள் மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனம் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 12% கட்டாயமாக EPF க்கு வழங்க வேண்டும். இந்த சேமிப்பு தொகை, பணியாளர் ஓய்வு பெறும்போது அல்லது அவசரகால சூழ்நிலைகளில் திரும்பப் பெறப்படலாம். EPFக்கு தவறாமல் பங்களிப்பதன் முக்கிய நோக்கம், ஊழியர்களின் பணி ஓய்வுக்கான ஒரு கார்பஸை உருவாக்குவதே.
EPF பாஸ்புக் என்றால் என்ன?
EPF பாஸ்புக் என்பது ஒரு கம்பெனியும், ஊழியரும் சேர்ந்து செய்த பங்களிப்புகளின் விவரங்களைக் கொண்ட ஆவணமாகும். இது PF டெபாசிட்கள், வட்டி மற்றும் பிற தொடர்புடைய விவரங்களை கொண்டிருக்கும். இன்னும் எளிதாக சொல்லப் போனால், இது பேங்க் பாஸ்புக் போல் அனைத்து விவரங்களையும் கொண்டிருக்கும்.
EPF பாஸ்புக் எப்படி டவுன்லோட் செய்வது?
ஸ்டெப் 1: முதலில் EPFO-இன் அதிகாரபூர்வ இணையதளத்தைத் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: 'Member Passbook' என்ற பக்கத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: UAN மற்றும் EPF உறுப்பினர் போர்ட்டலின் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் இதர விவரங்களை என்டர் செய்த பிறகு, 'Login' பட்டனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: இப்போது உங்கள் UAN உடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து EPF கணக்குகளின் உறுப்பினர் ஐடிகளைக் காண்பிக்கும்.
ஸ்டெப் 6: 'Select Member ID to view Passbook' என்பதன் கீழ் தெரியும் 'EPF Member ID' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: புதிய டேப்-இல் உங்கள் EPF பாஸ்புக், PDF வடிவத்தில் திறக்கப்படும்.
தற்போது உங்கள் பாஸ்புக்கை 'டவுன்லோட்' அல்லது 'பிரிண்ட்' செய்ய முடியும்.
UMANG ஆப் பயன்படுத்தி EPF பாஸ்புக்கை எவ்வாறு டவுன்லோட் செய்வது?
உங்கள் மொபைலில் UMANG ஆப்-ஐ பயன்படுத்தி இபிஎஃப் பாஸ்புக்கை நீங்கள் டவுன்லோட் செய்யலாம்.
ஸ்டெப் 1: UMANG ஆப்-இல் 'Login' செய்யவும்.
ஸ்டெப் 2: 'All Services' என்பதன் கீழ் உள்ள, 'EPFO' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: 'Employee Centric Service' விருப்பத்தின் கீழ் 'View Passbook' என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் UAN ஐ என்டர் செய்யவும். உங்கள் UAN உடன் இணைக்கப்பட்ட உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: OTP-ஐ என்டர் செய்யவும்.
உங்கள் UAN உடன் இணைக்கப்பட்ட அனைத்து EPF கணக்குகளின் உறுப்பினர் ஐடிகளின் பட்டியல் காட்டப்படும். நீங்கள் பாஸ்புக்கைப் பதிவிறக்க விரும்பும் EPF உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுத்து, 'டவுன்லோட்' என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் EPF பாஸ்புக் UMANG செயலியில் இருந்து டவுன்லோட் செய்யப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications