சென்னை: தமிழ்நாட்டினை பொறுத்தவரை நிலம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு விட்டன. இதனால் ஒரு நிலத்தின் பட்டா, சிட்டா, வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவற்றை நாம் எளிதாக ஆன்லைன் வாயிலாகவே பார்த்துக் கொள்ள முடிகிறது.
ஒரு நிலத்தை வாங்குவதற்கு முன்பாக அதன் பட்டா, சிட்டா மற்றும் வில்லங்க சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரி பார்ப்பது அவசியம். முன்பெல்லாம் இது போன்ற பட்டா சிட்டா ஆவணங்களை பெற வேண்டும் என்றால் நாம் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும் .

ஆனால் தற்போது நிலைமை அப்படி கிடையாது. நம் செல்போனிலேயே நாம் எளிதாக குறிப்பிட்ட நிலத்தின் பட்டா சிட்டா ஆவணங்களை பெற்றுக் கொள்ள முடியும். அது எப்படி என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம். தமிழக அரசு இதற்காகவே எங்கிருந்தும் எந்த நேரத்திலும் என்ற இணைய சேவையை கொண்டு வந்திருக்கிறது.
https://eservices.tn.gov.in/eservicesnew/home.html இது தான் அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம். இந்த இணையதளம் வாயிலாக பொதுமக்கள் எளிதாக ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பட்டா, சிட்டா உள்ளிட தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். திரையில் தோன்று பக்கத்திற்கு சென்று பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து அதில் உங்களுடைய மாவட்டம், வட்டம், கிராமம் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனை அடுத்து அடுத்ததாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை பதிவிட வேண்டும் அல்லது புல எண் தெரிந்தால் புல எண்ணை பதிவிட வேண்டும். இதனை உள்ளீடு செய்த உடனே எந்த வகையான நிலம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அடுத்து பதிவு செய்யப்பட்ட உங்களின் செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலையும் உள்ளிட்டு சப்மிட் கொடுக்க வேண்டும்.
நீங்கள் கேட்ட நிலத்திற்கான பட்டா, சிட்டா விவரங்கள் திரையில் தோன்றும் அவற்றை நீங்கள் சரிபார்த்து கொண்டு பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இதே இணையதளத்தில் நீங்கள் பட்டா சிட்டா விவரங்களை சரி பார்க்கவும் முடியும் .
அதற்கு பட்டா சிட்டா விவரங்களை சரி பார்க்க என்ற லிங்கை கிளிக் செய்து குறிப்பு எண்ணை உள்ளீடு செய்து 10 இலக்க தொலைபேசி எண்ணை உள்ளிட்டால் எளிதாக சரிபார்க்கலாம். இந்த இணையதளம் வாயிலாக பல்வேறு நிலம் சார்ந்த சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அ பதிவேடு விவரங்களை பார்வையிடுவது, அரசு புறம்போக்கு நிலம் தொடர்பான விவரங்களை பார்வையிடுவது, புலப்பட விவரங்களை பார்வையிடுவது, பட்டா நகலை பார்வையிடுவது என அனைத்து தகவல்களையும் நாம் இங்கே எளிதாக பெறலாம்.


Click it and Unblock the Notifications