சென்னை: PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டமாகும். இது பிரபலமான மூதலீட்டு திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் திட்டத்தினைப் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
2024-2025 ஆம் புதிய நிதியாண்தில் ஏதேனும் நல்ல முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால், பொது வருங்கால வைப்பு நிதி, உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் நல்ல வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள் மற்றும் குறைந்த ஆபத்து உள்ளதால், நாட்டில் உள்ள பல முதலீட்டாளர்களுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.

தற்போது, இந்த PPF திட்டம் வரி விலக்கு மற்றும் 7.1 % வருடாந்திர வட்டி விகிதங்களை வழங்குகிறது. PPF-இல் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ரூ. 1 கோடிக்கும் அதிகமான வருமானத்தைப் பெற முடியும்.
பெரும்பாலான வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில், நீங்கள் PPF கணக்கைத் தொடங்கலாம். இதற்கு எந்த வயது வரம்பும் இல்லை. இந்தத் திட்டத்திற்கு சுமார் 15 ஆண்டுகள் லாக் இன் காலம் உண்டு. அதாவது 15 ஆண்டுகளுக்கு நீங்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாது.
யாரால் திறக்க முடியும்: எந்தவொரு இந்திய குடிமகனும் PPF கணக்கைத் திறக்கலாம்.
குறைந்தபட்ச வயது: மைனருக்கு குறைந்தபட்ச வயது தேவை இல்லை. கைக்குழந்தைகள் கூட பிபிஎஃப் கணக்கு வைத்திருக்கலாம். மைனர் 18 வயதாகும் வரை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை நிர்வகிக்கலாம். அதன் பின் அந்தந்த குழந்தைகளே நிர்வகிக்கலாம்.
PPF திட்டம் தொடங்குதல் என்பது மிகவும் எளிதான ஒன்றாகும். குறைந்தபட்சம் ரூ. 500 ரூபாயில் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கலாம், மேலும், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்தினைப் பயன்படுத்தி ரூ. 1 கோடி எவ்வாறு ஈட்டலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
PPF திட்டத்தின் மூலம் 1 கோடி ரூபாய் திரட்ட, 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இவ்வாறு முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 25 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 37,50,000 ரூபாயாக இருக்கும். மேலும், முதலீடு செய்த காலம் முதல் 7.1 % வட்டியைப் பெறுகிறீர்கள் என்றால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு வழங்கப்படும் வட்டி மட்டும் ரூ. 65,58,015 ரூபாயாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 1,03,08,015 ரூபாய் பெறுவீர்கள்.
நீங்கள் மாதம் மாதம் ரூ.10,000 ரூபாய், 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் தோராயமாக ரூ.81.76 லட்சத்தை ஈட்டலாம். எனவே முதலீடு செய்வதற்கு முன் உங்களின் நிதி ஆலோசகரை அணுகி சுய விருப்பத்துடன் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications