தமிழ் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் தங்கம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நம் முன்னோர்கள் நமக்கு உணர்ச்சிபூர்வமான பொக்கிஷங்களை விட்டுச் சென்றது மட்டுமல்லாமல், கடினமான சமயங்களில் உயிர்வாழ்வதற்கான ஒரு வழியையும் காட்டியுள்ளனர். எந்த நிதி நெருக்கடியின் போதும், பொதுவாக நிதி சுமையிலிருந்து வெளியேறுவதற்காக தங்கத்தை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். கடினமான நேரங்களில் பண பற்றாக்குறையின் காரணமாக தங்கத்தை விற்பது அல்லது கடன் வாங்குவது ஒரு குடும்பத்தில் அடிக்கடி நடப்பது தான். இந்த கட்டுரையில் தங்கத்தின் மீதான கடனை பல்வேறு இடங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
தங்கக் கடன் தொகையை எதற்காகப் பயன்படுத்தலாம்?: இந்த தங்க கடனின் உதவியால் நீங்கள் பல்வேறு செலவுகளைத் தீர்க்க முடியும். இது ஒரு பாதுகாப்பான கடன் என்பதால், அதை வாங்குவது எளிதானது. இது போன்ற கடன் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சூழ்நிலைகள் வரும்போது, நீங்கள் தங்கக் கடனைப் பயன்படுத்தி நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கலாம். ஆனால் தங்கக் கடன்களுக்கும் வட்டி உள்ளது எனவே இது போன்று கடன்களை வீண் செலவு செய்ய பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கல்விச் செலவுகள்: உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு கூடுதல் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளலாம். இது உங்கள் கல்வியை மேம்படுத்த உதவும் அல்லது உங்கள் பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு விருப்பப்பட்டால் படிக்க வைக்கலாம்.
மருத்துவ செலவுகள்: துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது பிற கடுமையான சிகிச்சைச் செலவுகளை ஈடுகட்ட நீங்கள் தங்கக் கடனைத் தேர்வுசெய்யலாம். தங்க கடனை பெறுவது மிகவும் சுலபம். தொந்தரவு இல்லாத கடன் என்றால் அது தங்கத்தை வைத்து கடன் வாங்குவதுதான்.
வீடு புதுப்பித்தல்: வீட்டு கடனை பெறுவதன் மூலம் உங்கள் வீட்டை புதுப்பிக்க முடியும், அதைப்போல் தங்கக் கடனை வைத்தும் இதை செய்யலாம். உங்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தங்க கடனை பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய தொகையை கடன் வாங்க விரும்பினால் இந்த முறை சிறந்தது.
சிறு தொழில்: நீங்கள் ஒரு சொந்த தொழிலை தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளீர்கள் என்றால், அந்த தொழிலுக்கு தேவையான பணத்தை தயார் செய்ய பல்வேறு வழிகளைத் தேட வேண்டும். அதில் சிறந்தது தங்கக் கடனை பெறுவது தான். தங்கக் கடன் மூலம் உங்களுக்கு தேவைப்படும் தொகையை உடனடியாக பெற முடியும். தங்கத்தை வைத்து பணத்தை பெறும் பொழுது நமது விருப்பத்திற்கு ஏற்ப சிறிய அல்லது பெரிய தொகையை பெற முடியும். இது உங்கள் வணிக தேவைக்கு சிறந்த நிதியை வழங்கும். உங்கள் வணிகத்தை தொடங்குவதற்கு புதிய பணியிடம், உபகரணங்கள் போன்ற தேவைகளை பூர்த்தி செய்ய இவை உதவுகிறது.
திருமணம் மற்றும் பிற நிகழ்வுகள்: ஒரு நபரின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான தருணமாகும். இந்த நிகழ்வை சிறப்பாக நடத்த, உங்களுக்கு நிறைய பணம் தேவைப்படலாம். மண்டபத்தை முன்பதிவு செய்தல், பரிசுகளைத் தயாரித்தல், கேட்டரிங் சேவைகளை பெறுதல் மற்றும் பல பணிகளுக்கு நிதி அதிகமாக தேவைப்படும். அவ்வாறு தேவைப்படும் பட்சத்தில், பண பற்றாக்குறை ஏற்பட்டால் தங்கக் கடனைப் பெறுவது உங்களுக்கு பயன் அளிக்கும்.
இதுபோன்று பல விஷயங்களுக்கு தங்கக் கடன் பயன்படுகிறது, விடுமுறை நாட்களில் வெளியூர் செல்வதற்கு, கார் அல்லது பைக்கை புதுப்பிப்பதற்கு, வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் வாங்குவதற்கு, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
கிரெடிட் கார்டு கடன்கள், ஹோம் லோன் கடன்கள் மற்றும் கார் கடன்கள் ஆகியவற்றிற்கான வட்டியுடன் ஒப்பிடுகையில் தங்க நகை கடன்களுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்படுகிறது. மேலும் ஹோம் லோன்களை பெறும்போது யாரேனும் அரசாங்க ஊழியரின் கையெழுத்து தேவைப்படலாம். உங்கள் குடும்பத்திலேயே அரசாங்க ஊழியர் இருந்தால் கையெழுத்து பெறுவது சுலபமான ஒன்றாக இருக்கும். இல்லை எனில் ஒரு கையெழுத்திற்கு பிறரின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்படலாம். எனவே, பல்வேறு சிக்கல்கள் இல்லாமல் கடன்களை பெறுவது என்றால், அது நம் வீட்டில் இருக்கும் நகையை வைத்து பெரும் கடன்களே. மிகவும் எளிதில் கிடைக்கிறது என்பதற்காக வீண் செலவுகளை செய்யாமல் இருப்பது நமக்கும் நன்மை தானே!
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications