சென்னை: தகவல் தொழில் நுட் நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது என்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஆப்பிள், ஐபிஎம் ,இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சுமார் 27 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளன. நடப்பாண்டில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான டெக் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் ஒருவித அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். பொருளாதார மந்த நிலை, ஐடி சேவைகளுக்கான தேவை குறைந்தது உள்ளிட்டவை காரணமாக ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த தொடர் பணி நீக்கம் ஐடி துறையில் பணி புரிபவர்கள் மட்டுமல்லாமல் இந்த வேலைக்காக கல்லூரியில் பயின்று வருபவர்களுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தான் தங்களுடைய தொழில் சார்ந்த திறன்களின் மேம்படுத்திக் கொள்வது மட்டுமே ஒருவர் தன்னுடைய வேலையை பாதுகாக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளாதவர்கள் இது போன்ற பணி நீக்க புயலில் சிக்கி சின்னாபின்னம் ஆகி விடக்கூடும் என்கின்றனர்.
அண்மையில் படிப்பை முடித்துவிட்டு ஃபிரஷர்களாக வேலைக்கு சேர்பவர்கள் தங்களுடைய துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, எத்தகைய திறன்களுக்கு அதிக வேலை வாய்ப்பு இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றை கவனித்துக் கொண்டு அதற்கு ஏற்றபடி தங்களுடைய திறன்களை மேம்படுத்திக் கொள்வது அவசியம்.
ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக அல்லது சான்றிதழ் படிப்புகள் அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய பணி பாதுகாப்பை ஐடி ஊழியர்கள் உறுதி செய்து கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி பிரிவுகளில் தற்போது வேலை வாய்ப்புகளும் அதற்கான தேவையும் அதிகரித்திருப்பதால் இந்த துறை சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
புதுப்புது மாற்றங்களுக்கு ஏற்ப திறன்களை வளர்த்துக் கொண்டால் இந்த துறையில் நிலைத்து நிற்கலாம் என்றும் அடுத்தடுத்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றை பெறலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தற்போது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஐடி துறை நொடிக்கு நொடி மாற்றங்களை கண்டு வருகிறது எனவே ஐடித்துறையில் பணியாற்ற கூடியவர்கள் கற்றலில் தங்களது நேரத்தை செலவிட வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்.
இவ்வாறு திறன்களை வளர்த்துக் கொள்வதன் வாயிலாக வேலையில் நீடிக்க முடியும் என்பதை தாண்டி புது புது வேலைகளில் சேர முடியும் என்கிற கருத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர். Story written by: Devika


Click it and Unblock the Notifications