சென்னை: நம்மில் பெரும்பாலானவர்கள் கிழிந்த மற்றும் சிதைந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போம். இவற்றை கடைகளிலோ அல்லது வியாபாரிகளிடமோ நாம் மாற்றவே முடியாது. இதனை நீண்ட காலம் வைத்திருந்து செல்லாது என தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இந்த நோட்டுகளை நீங்கள் எளிதாக வங்கியில் சென்று மாற்றி விட முடியும் தெரியுமா?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்குவது தொடர்பாகவும், மக்கள் அவற்றை வங்கிகளில் ஒப்படைத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவது தொடர்பாகவும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டு இருக்கிறது. வங்கிகள் இந்த நடைமுறையின் படி தான் செயல்பட வேண்டும்.

இதன்படி உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை நீங்கள் வங்கிகளிலோ அல்லது ரிசர்வ் வங்கியின் அலுவலக கிளைகளிலோ கொடுத்து எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். ரூபாய் நோட்டு எவ்வளவு சிதைந்து இருக்கிறது அல்லது கிழிந்து இருக்கிறது என்ற தன்மையை பொறுத்து வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு கட்டணமாக விதிக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஒரு நபர் ஒரு முறை 20 நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் சென்று மாற்ற முடியும். அவற்றின் அதிகபட்ச மதிப்பு 5,000 ரூபாயாக இருக்க வேண்டும். 5,000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு வங்கிகள் உடனடியாகவே அவர்களின் கவுண்டரிலேயே உங்களுக்கு புதிய நோட்டுகளை வழங்கி விடுவார்கள். ஒரு வேலை 5 ,000 ரூபாய்க்கு மேலான தொகைக்கு நீங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றுகிறீர்கள் என வைத்துக்கொண்டால் உடனடியாக உங்கள் கைக்கு பணம் கிடைக்காது.
வங்கிகள் உங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அதனை முழுமையாக ஆய்வு செய்து அதற்கு ஏற்ற பணத்தை உங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கும். அனைத்து வகையான கிழிந்த அல்லது அழுக்கான அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுகளையும் வங்கிகள் உங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும். ஆனால் ரூபாய் நோட்டுகளின் பெரும்பாலான பகுதிகள் கிழிந்த நிலையில் இருந்தால் அதனை வங்கிகள் மாற்றிக் கொள்ளாது.
மேலும் ரூபாய் நோட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். மேலும் ஒட்டப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் கூட வங்கிகள் மாற்றிக் கொள்ளும். ஒருவேளை வங்கிகள் இப்படி ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்தால் மக்கள் ரிசர்வ் வங்கி கிளைகளில் சென்று மாற்றிக் கொள்ள முடியும். ரிசர்வ் வங்கியின் வழிமுறையின் படி வங்கிகள் உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுகளை வாங்க முடியாத அல்லது பரிமாற்றம் செய்ய முடியாது என கூறவே முடியாது.
1 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலான நோட்டுகளுக்கு நீங்கள் கொடுக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு அதில் உள்ள மதிப்பு முழுமையாக உங்களது கைக்கு வந்து சேரும். அதுவே 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையான ரூபாய் நோட்டுகள் மோசமான நிலையில் சிதைந்து இருந்தால் அதனை மாற்றிக் கொள்வதற்கு வங்கிகள் குறிப்பிட்ட கட்டணத்தை உங்களிடம் இருந்து வசூல் செய்யலாம்.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications