சென்னை: என்னதான் ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் அதிகரித்து இருந்தாலும், சிலர் பொருட்களை வாங்குவதற்கும் வேறு செலவுகளை மேற்கொள்வதற்கும் டிஜிட்டல் முறையை விட்டுப் பணத்தையே பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் ஏடிஎம்கள் மற்றும் பிறரிடம் இருந்து பெறக்கூடிய ரூபாய் நோட்டுகள் கிழிந்தோ அல்லது ஒட்டப்பட்டோ நம்மிடம் வந்துவிடும். அவ்வாறு நம்மிடம் இருக்கும் கிழிந்த நோட்டுகளை பேங்கில் எப்படி மாற்றிக்கொள்வது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சில நேரங்களில் பணப் பரிமாற்றங்களின் போது கிழிந்த ரூபாய் நோட்டுகள், பழுதடைந்த ரூபாய் நோட்டுகள், தீப்பொறிப் பட்ட ரூபாய் நோட்டுகள் தவறுதலாக நம்மிடம் வந்து சேர்ந்துவிடும். அவ்வாறு வந்த நோட்டுகளை சிலர் தெரியாமல் சந்தைகளிலோ அல்லது பிற கடைகளிலோ கொடுத்து பொருட்களை வாங்கி விடுவார்கள்.

ஆனால், அவ்வாறு செய்வது நல்ல நடைமுறை அல்ல. இதில் பலருக்கும் இது போன்ற சேதமடைந்த நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்பது பற்றி தெரியாமல் இருக்கிறது. அவர்களுக்குத்தான் இந்த பதிவு உங்களிடம் இதுபோன்ற சேதமடைந்த நோட்டுகள் இருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
இதுபோல சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஆர்பிஐ சில வழிமுறைகளைக் கூறியுள்ளது. அதனை பயன்படுத்தி உங்களிடம் உள்ள கிழிந்த ரூபாய் நோட்டுகளை நீங்கள் மாற்றிக் கொண்டு, புது ரூபாய் நோட்டுகளைப் பெற முடியும்.
சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவது எப்படி?: அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகள் இரண்டு துண்டுகளாக கிழிந்திருந்தாலும், முனைகளில் மட்டும் எண்களைக் கொண்ட நோட்டுகளாக இருந்தாலும், அழுக்கடைந்த நோட்டுகளாகக் கருதப்படும்.
ஆனால் அந்த ரூபாய் நோட்டுகளின் நம்பரில் எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தால், அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளிலோ அல்லது தனியார் துறை வங்கிகளிலோ சென்று மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவித விண்ணப்பப் படிவமும் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை.
சிதைந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது?: சிதைந்த ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும், அவற்றை நீங்கள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். ரூபாய் நோட்டுகளில் முக்கியமான பகுதிகளான அத்தாரிட்டி, கேரன்டி, ப்ராமிஸ் கிளாஸ், சிக்னேச்சர் மற்றும் அசோகா பில்லர் சின்னம், மகாத்மா காந்தியின் படம் மற்றும் வாட்டர் மார்க் இவற்றில் எந்தவித சிதைவு இருந்தாலும், நீங்கள் அவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும், RBIரூல்ஸ்-இன் படி, இதனை நீங்கள் மாற்றி புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் இதற்கு அருகில் உள்ள பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு செல்லலாம்.
டிஎல்ஆர் (டிரிபிள் லாக் ரிசெப்டக்கிள்): பொது மக்களின் வசதிக்காக, TLR (Triple Lock Receptacle) என்பதைப் பயன்படுத்தி கிழிந்த அல்லது சேதமடைந்த நோட்டுகளை மாற்றுவதற்கான வழி உள்ளது. ரிசர்வ் வங்கியில் உள்ள கவுன்டரில் இருந்து TLR கவரைப் பெறலாம். அதில் உங்கள் பெயர், முகவரி மற்றும் நீங்கள் டெபாசிட் செய்யும் நோட்டுகளின் மதிப்புகள் போன்ற விவரங்களை நிரப்பவும். பின்னர், TLR கவரை மூடி, டிரிபிள் லாக் ரெசிப்டக்கிள் என்ற பெட்டியில் போடவும். பதிலுக்கு உங்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படும்.
இந்த பெட்டிகள் ஒவ்வொரு ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் உள்ள விசாரணை கவுண்டரில் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் டெபாசிட் செய்த சேதமடைந்த நோட்டுகள் உங்களுக்கு பேங்க் ட்ராப்ட் அல்லது பெ-ஆர்டர் மூலமாக வழங்கப்படும். நீங்கள் சேதமடைந்த நோட்டுகளை எந்த ஆர்பிஐ அலுவலகத்திற்கு வேண்டுமானாலும் தபால் மூலமாக அனுப்பலாம்.
அதிகமாக சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?: அதிகப்படியாக அழுக்கடைந்த மற்றும் எரிந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் மட்டுமே மாற்ற முடியும். மேலும், இதுபோன்ற ரூபாய் நோட்டுகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டதாகவோ, கிழிக்கப்பட்டதாகவோ, மாற்றப்பட்டதாகவோ அல்லது சிதைக்கப்பட்டதாகவோ தெரிந்தால் அவை ரிசர்வ் வங்கியால் நிராகரிக்கப்படும்.
அங்குள்ள அதிகாரிகள் வேண்டுமென்றே வெட்டப்பட்ட நோட்டுகளை துல்லியமாக கண்டறிந்து விடுவார்கள். எனவே, அத்தகைய நோட்டுகளை உங்களால் மாற்ற முடியாது. மேலும் வேண்டுமென்றே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, பின்னர் ரூபாய் நோட்டுகளை மாற்ற நினைத்தால், அதனை ஆர்பிஐ நிராகரித்து விடும். அதிலும் அதிக அளவிலான நோட்டுகளை மாற்ற நினைத்தால் அவை எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ. 5000 ரூபாய், மதிப்புடைய சேதமடைந்த நோட்டுகளை இலவசமாக மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், அதே நேரத்தில் ரூ. 5000 ரூபாய்க்கு மேல் சேதமடைந்த நோட்டுகளை மாற்ற வேண்டுமென்றால், அதற்கு வங்கிகள் சேவை கட்டணங்களை விதிக்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications