ஒரு காலத்தில் விறகு அடுப்புகளே சமையல் செய்வதற்கு முதன்மையாக இருந்த காலம் மாறி தற்போது எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் பலராலும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு விறகு மற்றும் மாட்டு சாணம் கொண்ட ராட்டி கிராமப்புற பெண்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சிலருக்கு புகையினால் ஏற்படும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டது. தற்போது இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எல்பிஜி சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிலிண்டர்களில் இது போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றாலும்.. எல்பிஜி சிலிண்டர்கள் பயன்படுத்த பாதுகாப்பானதா? என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். அதற்கு உங்கள் எல்பிஜி சிலிண்டரின் எக்ஸ்பயரி தேதியைச் சரிபார்க்க வேண்டும்.
சிலிண்டரின் எக்ஸ்பயரி தேதியை எவ்வாறு கண்டுபிடிப்பது?: ஒவ்வொரு எல்பிஜி கேஸ் சிலிண்டரைச் சுற்றியும் 3 உலோகக் கம்பிகள் இருக்கும். இந்த கம்பிகளில் சிலிண்டரின் எக்ஸ்பயரி தேதி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இருக்கும். சிலிண்டரில் A-23, B-25, C-24 அல்லது D-23 போன்ற எழுத்து மற்றும் எண் எழுதியிருக்கும். இந்த அடையாளங்கள் பார்ப்பதற்கு குழப்பமானதாகத் தோன்றலாம்.

சிலிண்டரில் எழுதப்பட்டிருக்கும் A முதல் D வரையிலான எழுத்துக்கள் மாதங்களை குறிக்கிறது.
A: ஜனவரி முதல் மார்ச் வரை
B: ஏப்ரல் முதல் ஜூன் வரை
C: ஜூலை முதல் செப்டம்பர் வரை
D: அக்டோபர் முதல் டிசம்பர் வரை
A முதல் D வரையிலான எழுத்துக்களுக்கு பின்பு வரும் 24, 25 போன்ற எண்கள் எக்ஸ்பயரி ஆகும் ஆண்டைக் குறிக்கிறது. உதாரணமாக 24 என்பது 2024-ஆம் ஆண்டைக் குறிக்கிறது. 25 என்பது 2025-ஆம் ஆண்டைக் குறிக்கிறது
சரி இந்த எழுத்துக்களையும் எண்ணையும் வைத்து எப்படி சிலிண்டரின் எக்ஸ்பயரி தேதியை கண்டுபிடிக்கலாம் என்று பார்ப்போம். உதாரணமாக C:24 என்பதன் பொருள் 2024-ஆம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உங்களுடைய சிலிண்டர் எக்ஸ்பயரி ஆகிவிடும் என்பதை குறிக்கிறது. D:24 என்பதன் பொருள் 2024-ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் உங்களுடைய சிலிண்டர் எக்ஸ்பயரி ஆகிவிடும் என்பதைக் குறிக்கிறது.
உங்கள் கேஸ் சிலிண்டரின் எக்ஸ்பயரி தேதியைத் தவறாமல் சரி பார்ப்பது பாதுகாப்புக்கு மிக முக்கியமானது. சிலிண்டர் வெடித்து ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு சிலிண்டரில் எழுதப்பட்டிருக்கும் எக்ஸ்பயரி தேதியை தெரிந்து கொள்ள வேண்டும். எக்ஸ்பயரி தேதிக்குப் பிறகு ஒரு கேஸ் சிலிண்டரினை பயன்படுத்துவதால் எரிவாயு கசிவு அல்லது பிற ஆபத்துகள் ஏற்படலாம். பாதுகாப்பாக சமையல் செய்வதற்கு உங்கள் எரிவாயு சிலிண்டரின் எக்ஸ்பயரி தேதியை தெரிந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications