மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே.
பிக்சட் டிபாசிட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதை விட அதிக வருமானம் மற்றும் பாதுகாப்பு மியூச்சுவல் ஃபண்டில் உள்ளது என்பது கிட்டத்தட்ட அனைவரும் புரிந்து கொண்டனர்.
எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் தொகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் டிராக் ரிக்கார்டு என்றால் என்ன? ஒரு மியூச்சுவல் டிராக் ரிக்கார்டை பார்ப்பது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்
மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர் அந்த மியூச்சுவல் பண்ட் இதற்கு முன்னர் எந்தவகையான செயல்திறனை கொண்டது என்பதை பார்த்து அதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது நிதி ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது
செயல்திறன்
ஒரு திருமணம் செய்யும் முன்போ அல்லது கார் வாங்கும் முன்போ அது குறித்து போதுமான தகவல்களை திரட்டி அதன் பின்தான் ஒரு முடிவை எடுப்போம் என்பது தெரிந்ததே. அதேபோல்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் முன் அதன் செயல்திறன், கடந்த கால செயல்பாடு ஆகியவற்றை பார்த்து அதன் பின்னரே முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடதக்கது
ஒப்பீடு
தற்போதைய டெக்னாலஜி உலகில் ஒரு மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறனை பார்ப்பதற்கு பல வசதிகள் வந்துவிட்டது என்பதால் மிகவும் எளிதாக நிதி ஆலோசகர்களின் உதவி இல்லாமல் நாமே ஒரு மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறனையும் அதன் ஸ்கிம்களையும் பார்க்க முடியும். ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டின் டிராக் ரிக்கார்டு என்று கூறப்படும் செயல்திறனை பார்க்கவும், மற்ற மியூச்சுவல் ஃபண்ட் உடன் ஒப்பீடு செய்யவும் நம்பகமான சில இணையதளங்கள் உள்ளன.
இணையதளம்
நீங்கள் எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போகிறீர்களோ அதன் செயல்திறன், கடந்தகால செயல்பாடு ஆகிய அம்சங்களை இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒரே இணையதளத்தில் பல்வேறு நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட் செயல்திறனை மதிப்பீடு செய்யும் வகையில் www.mutualfundssahihai.com/schemeperformance என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்திற்கு நீங்கள் சென்றால் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறன் மற்றும் கடந்த காலத்தில் அந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு கொடுத்த லாபம் மற்றும் நஷ்டம் உள்ளிட்ட அனைத்து செயல்திறனையும் பார்க்கலாம்
விவரங்கள்
அதே போல் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் உடன் அதற்கு இணையான மற்றொரு மியூச்சுவல் ஃபண்டை ஒப்பிட்டு எந்த மியூச்சுவல் ஃபண்ட் அதிக வருவாய் கொடுத்திருக்கிறது? எந்த மியூச்சுவல் ஃபண்ட் ரிஸ்க் குறைவாக உள்ளது? என்பதையும் பார்த்து நாம் முதலீடு செய்யலாம். ஓவ்வொரு முதலீட்டாளரும் இந்த ஒப்பீட்டை முதலீட்டுக்கு முன் பார்த்து அதன் விவரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications