பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் எளிதாக 1 கோடி ரூபாய் என்று நிதி தொகுப்பை எட்டி விட முடியும். நமது அஞ்சல் அலுவலகங்கள் வழியாக அரசாங்கம் நடத்தி வரும் திட்டம் என்பதால் நம்முடைய மூலதனத்திற்கும் பாதுகாப்பு உண்டு அதே வேளையில் உறுதியான வருமானமும் கிடைக்கும் என்பதால் பாதுகாப்பான முதலீடு விரும்புபவர்கள் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை பொருத்தவரை இதில் நாம் செய்யும் முதலீடுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் ஒரு ஆண்டில் ஒரு நபர் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும், குறைந்தபட்சம் இதில் 500 ரூபாயிலிருந்து முதலீட்டினை தொடங்கலாம்.

இந்த திட்டத்தில் 15+5+5 ஃபார்முலாவை பின்பற்றினால் 25 ஆண்டுகளிலேயே ஒருவரால் 1 கோடி ரூபாய் என்ற தொகையை எட்டி விட முடியும். இந்த ஒரு கோடி ரூபாய் முதிர்வு தொகையில் வட்டி தொகையாக மட்டுமே சுமார் 65.58 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
15+5+5 ஃபார்முலா:
பிபிஎஃப் திட்டத்தில் ஆண்டு முதலீடு : ரூ. 1,50,000
ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டி : 7.1%
15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ. 22,50,000
15 ஆண்டுகளில் கிடைக்கும் வட்டி: ரூ.18,18,209
15 ஆண்டுகளில் கிடைக்கும் முதிர்வு தொகை: ரூ. 40,68,209
இப்படி 15 ஆண்டுகாலத்திற்கு முதலீடு செய்துவிட்டு 15 ஆண்டுகள் முடிந்த உடனே அந்த பணத்தை திருப்பி எடுத்து விடக் கூடாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும்.
எனவே மொத்தம் 20 ஆண்டுகளாகிவிடுகிறது. 20 ஆண்டுகள் முடியும் போது மேலும் 5 ஆண்டுகளுக்கு இதனை நீட்டித்து முதலீட்டை தொடர வேண்டும். எனவே மொத்தம் 25 ஆண்டுகள். இந்த 25 ஆண்டுகள் முடியும் போது
25 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு: ரூ. 37,50,000
25 ஆண்டுகளில் உங்களுக்கு கிடைத்த வட்டி : ரூ. 65,58,015
25 ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் முதிர்வு தொகை: ரூ. 1.03 கோடி
ஆண்டுக்கு 7.1% என்ற வட்டி விகிதத்தில் கணக்கிடும் போது இந்த தொகை கிடைக்கிறது.
அதுவே வட்டி உயர்த்தப்பட்டால் முதிர்வு தொகையும் அதிகரிக்கும். மத்திய அரசு அவ்வப்போது இந்த வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டால் 15 ஆண்டுகளுக்கு அந்த பணத்தை திரும்ப எடுக்க முடியாது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications