பிஸ்னஸ் ஆரம்பிப்பது உங்கள் கனவா? உங்களிடம் சூப்பர் பிஸ்னஸ் ஐடியா உள்ளதா? கண்டிப்பாக அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா? உங்கள் ஸ்டார்ட்அப்-ஐ தொடங்க நிதி தேவையா?
சந்தையில் சிறந்த ஸ்டார்ட்அப் ஐடியாக்களுக்கு தேவையான நிதியைத் திரட்ட பல வழிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி எப்படி உங்கள் ஸ்டார்ட்அப் பிஸ்னஸ் கனவை நனவாக்குவது எப்படி என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
சுய முதலீடு
ஸ்டார்ட்அப் தொடங்கும் போது முதலில் சொந்தமாகக் கொஞ்சம் முதலீட்டை வைத்து இருக்க வேண்டும். ஸ்டார்ட்அப் தொடங்க கடன் வேண்டி வங்கி, நிதி நிறுவனங்கள் அல்லது வெஞ்சர் கேபிட்டல் நிறுவனத்தை அணுகினால் உங்கள் முதலீடு எவ்வளவு என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் தங்களிடம் தேவைக்கும் அதிகமாக உள்ள சேமிப்பை முதலீடு செய்து ஸ்டார்ட்அப் பிஸ்னஸை தொடங்கிவிட்டு அது நிலையாகச் செல்லும் போது, கடனுக்கு விண்ணப்பித்தால் எளிதாக வணிக கடன் பெற முடியும்.
ஏஞ்சல் முதலீட்டாளர்கள்
தேவைக்கு அதிகமாகக் கையில் பணத்தை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பம் உள்ள தனிநபர்கள் தான் ஏஞ்சல் முதலீட்டாளர்கள். ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலம் கடன் நிதி பெறுவது வங்கிகளில் கடன் பெறுவதை விட சிக்கலானது மற்றும் அதிக லாபமும் எதிர்பார்ப்பார்கள். மும்பை ஏஞ்சல், இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் மற்றும் ஹைதராபாத் ஏஞ்சல் உள்ளிட்ட நிறுவனங்கள் இப்படிப்பட்ட முதலீட்டாளர்களுடன் தொடர்பில் இருப்பார்கள்.
கிரவுட் ஃபண்டிங்
கிரவுட் ஃபண்டிங் என்பது சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்கள் வழியாகப் பல முதலீட்டாளர்களிடமிருந்து வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிதி திரட்ட உதவும் ஒரு முறையாகும். ஆன்லைன் கிரவுட் ஃபண்டிங் இணையதளங்கள் சமூக காரணங்கள், தொண்டு நிறுவனங்கள், பேரிடர் நிவாரணம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக நிதி சேகரிக்க உதவுகின்றது. இவை மூலமாகப் பெறப்படும் நிதிக்கு கிரவுட் ஃபண்டிங் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு கட்டணங்களை வசூலிக்கும்.
ஸ்டார்ட்அப் பிஸ்னஸிற்கு கடன் வழங்கும் திட்டங்கள்
சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் உள்ளிட்ட நிறுவனங்களைத் தொடங்க மத்திய அரசு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, ஸ்டாண்ட் அப் இந்தியா உள்ளிட்ட கடன் திட்டங்களை மத்திய அரசு வங்கிகள் மூலம் வழங்குகிறது.
வங்கிகள்
ஒரு ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆன பிறகு முறையாக வருமான வரி போன்றவற்றைத் தாக்கல் செய்து இருந்தால், அரசு மற்றும் தனியார்த் துறை வங்கிகள் எளிதாக வணிக கடனை வழங்கும்.
வங்கி அல்லா நிதி நிறுவனங்கள்
ஒருவேலை உங்களது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகளில் கடன் பெற முடியாது. அது போல சூழலில் வங்கி அல்லா நிதி நிறுவனங்களில் கடன் பெறலாம். ஆனால் அவை வழங்கும் கடனுக்கு வங்கிகளை விட கூடுதல் வட்டி வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications