சென்னை: சுங்கச்சாவடிகளில் மாதந்திர பாஸ் வங்க யாருக்கெல்லாம் தகுதி இருக்கு. அதற்கு என்ன செய்திருக்க வேண்டும், எவ்வளவு சலுகை உண்டு என்பதை இப்போது பார்ப்போம்
சுங்கச்சாவடிகளில் தினமும் ஒரு முறை கடந்து சென்றவந்தாலே நம்முடைய பணம் நிறைய காலியாகிவிடும். ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை அதிகமாக உள்ள நிலையில் கார், மற்றும் கனரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் பெரும் தொல்லையாக இருக்கிறது.
இந்நிலையல் சுங்கச்சாவடிகளில் தினமும் பலமுறை சென்றாலும் சுங்சுச்சாவடியை ஒட்டி வசிக்கம் மக்களுக்கு கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது. அது எப்படி யாருக்கு என்ற விவரங்களை பார்க்கலாம்.
உள்ளூர் மக்கள்
சுங்கச்சாவடிகளுக்கு மிக அருகில் அதாவது 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் உள்ள ஊரில் உங்கள் வாகனத்தை பதிவு செய்திருந்தால் நீங்கள் உங்கள் ஊர் அருகே உள்ள சுங்கச்சாவடிகளில் மாத சலுகை அட்டை அதாவது மாத பாஸ் எடுக்க தகுதி ஆனவர் ஆவார்.
விண்ணப்பம்
சலுகை பெற விரும்புவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், இந்த வாகனம் உங்களுக்கானது என்பதற்கான சான்றிதழ், 20 கிலோமீட்டருக்குள் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனம் என்பதற்கான ஆர்சி புகல் நகல், உள்ளிட்டவற்றுடன், எல்ஆர்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உங்கள் ஊர் அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் அளிக்க வேண்டும்.
100க்கு ஸ்மார்ட் கார்டு
அதன்பிறகு நீங்கள் எத்தனை முறை வேண்டும் என்றாலும் பயணிக்கும் வகையில் மாத சலுகை அட்டை உங்களுக்கு கிடைக்கும். அங்கு 100 ரூபாய் கட்டி ஸ்மார்ட் கார்டு வாங்க வேண்டும்.
கூடுதல் சலுகை
அந்த சுமார் கார்டுக்கு ஒரு மாதத்திற்கான சலுகை கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இப்போது அரசு கமர்சியல் அல்லாத வாகனங்கள வைத்துள்ளவர்களுக்கு கட்டண சலுகை அளித்துள்ளது.எ னவே கமர்சியல் வாகனம் அல்ல என்றால் கொஞ்சம் கூடுதல் கட்டண குறைவு உங்களுக்கு கிடைக்கும்.
கட்டண விவரம்
லோடு ஆட்டோ மற்றும் டாக்ஸி உள்ளிட்ட உள்ளூர் வாகனங்களுக்கு மாதத்திற்கு 250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலகு ரக வாகனங்கள், ஜேசிபி மற்றும் கிரேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் லாரி மற்றும் கண்டெய்னர் லாரி உள்ளிட்ட பெரும் கனரக வாகனங்களுக்க மாதம் 900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை ஈசிஆர் சாலை தவிர மற்ற இடங்களில் மேல உள்ள கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை ஈசிஆர் சாலையில் மட்டும் கட்டணம் கொஞ்சம் மாறுபடும்.


Click it and Unblock the Notifications