ஓய்வுகாலத்திற்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கு, பெரும்பாலானோர் ரூ.10 கோடி corpus தொகையை உருவாக்குவதை இலக்கை நிர்ணயித்துக்கொள்கின்றனர். ஆனால், இந்த இலக்கை அடைவது, முதலீட்டைத் தொடங்குபவரின் வயதைப் பொறுத்தே அமைகிறது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நீங்கள் 40 வயதை எட்டியிருந்தால் இதுதான் உங்களது ஓய்வுக் காலத்துக்குத் தேவையான நிதியை சேமிப்பதற்கான சரியான தருணமாகும். 40 வயது நிரம்பிய ஒருவர் ரூ.10 கோடி ஓய்வு நிதித் தொகுப்பை அடைய அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,31,688 முதலீடு செய்ய வேண்டும்.

20 வயது ஆன ஒருவர் செலுத்த வேண்டிய தொகையைவிட 40 வயதானவர் அதிகம் செலுத்த வேண்டும். கூட்டு வட்டி முறையின் கீழ் ஓய்வூதியத் திட்டத்தில் தொடக்க வயது முக்கியமான விஷயமாக விளங்குகிறது. வருடம் 10% வருவாய் விகிதத்தில் மாதாந்திர முதலீடுகளுடன் குறிப்பிடத்தக்க கார்பஸைக் குவிக்க உதவுகிறது.
இளவயதில் தொடங்குவோர் சாதிக்கலாம்!: 20 வயதில் முதலீட்டைத் தொடங்குபவர், PPF, ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற குறைந்த ரிஸ்க் (ஆபத்து) கொண்ட திட்டங்களில் 7% முதல் 8% வரை லாபம் தரும் முதலீடுகளையும், சராசரியாக 12% லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளையும் தனது முதலீட்டுத் திட்டத்தில் சேர்த்துக்கொண்டால், அடுத்த 40 ஆண்டுகளில் மாதந்தோறும் ரூ.16,000 த்தைச் சேமிக்க வேண்டியது இருக்கும்.
நடுவயதில் தொடங்குவோருக்கு அதிக முதலீடு தேவை!: 40 வயதில் முதலீட்டைத் தொடங்குபவர் அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.10 கோடி corpus ஐ அடைய வேண்டுமென்றால், சராசரியாக 10% லாபம் தரும் முதலீடுகளில் மாதந்தோறும் ரூ.1,31,688 ஐச் சேமிக்க வேண்டியது இருக்கும். இது, 20 வயதில் தொடங்குபவரை விட கணிசமாக அதிகம்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) ஒரு அட்டவணையில் தொகுத்துள்ள டேட்டாவின்படி, வெவ்வேறு வயதுக் குழுக்களில் உள்ள தனிநபர்கள் ரூ. 10 கோடி ஓய்வு நிதி பெறுவதற்குத் தேவையான மாதாந்திர முதலீடுகள் மற்றும் சராசரி வருமானம் ஆகியவை சுட்டிக்கட்டப்பட்டுள்ளன.
அட்டவணையில் காட்டப்பட்டுள்ள வயதுக் குழுக்கள் 20 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள், முதலீட்டின் வருமானம் 5% முதல் 14% வரை இருக்கும்.
அதிக ஆபத்தை ஏற்க விரும்புவோருக்கு, 15% முதல் 25% வருவாய் விகிதங்களை இலக்காகக் கொண்ட முதலீட்டு உத்திகள் தேர்வு செய்து மாதாந்திர முதலீட்டு தொகையை வெகுவாகக் குறைக்கலாம்.
இந்த அணுகுமுறை 40 முதல் 55 வயது வரையிலான பிற்பகுதியில் தொடங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது அவர்களின் ஓய்வூதிய கார்பஸை விரைவாக வளர்க்க உதவுகிறது, இருப்பினும் பிஎஃப்ஆர்டிஏ இன் படி, அத்தகைய உயர்-வருமான முதலீடுகளுடன் தொடர்புடைய அதிக அபாயங்களை அறிந்து கொள்வது முக்கியம்.
அதிக ரிஸ்க் உள்ள போர்ட்போலியோக்களைத் தேர்வு செய்தால் அதிக அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்களது ஒய்வு நிதித் தொகுப்பை பாதிக்கலாம்.

குறைந்த ரிஸ்க் உள்ள போர்ட்போலியோக்கள் குறைவான வருவாயைத் தான் தரும். இதனால் உங்களது ஓய்வு நிதித் தொகுப்பான ரூ.10 கோடியை அடைவதற்கு மேலும் சில காலம் பிடிக்கலாம்.
எனவே பாதுகாப்பான வகையில் முதலீடு செய்து ஓய்வு நிதியைப் பெற்றால் உங்களது பிற்கால வாழ்க்கையில் நல்ல மன அமைதி இருக்கும். இதற்கு நீங்கள் உங்களது 40 வயதை எட்டுவதற்கு முன்னரே ஓய்வு நிதிக்காக முதலீட்டைச் செய்யத் தொடங்குவது சாலச் சிறந்ததாகும்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications