சிறு தொழில்முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை கடன்.. மத்திய அரசின் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி?

சென்னை: சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அப்படி சிறு குறு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து சிறு குறு தொழில்களை நடத்துபவர்கள் இந்த கடன் அட்டைகளை வாங்க முடியும். யாரெல்லாம் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சிறு தொழில்முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை கடன்.. மத்திய அரசின் கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி?

மத்திய அரசு ஏற்கனவே விவசாயிகளுக்கு கடன் வழங்க கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதே மாடல் தான் இந்த மைக்ரோ கிரெடிட் கார்டிலும் பின்பற்றப்படுகிறது. சிறு தொழில் முனைவோருக்காகவே இந்த பிரத்தியேக கடன் அட்டை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்திற்காக அரசு அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 30,000 கோடி ரூபாய் வரை ஒதுக்க உள்ளது.

சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும் தங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்கும் இந்த கடன் அட்டை மூலம் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

யாரெல்லாம் பயன்பெறலாம்?

எந்தவித சிறு தொழில் முனைவோரும் இந்த கடன் அட்டைகளை பயன்படுத்தி எளிமையாகவும் வேகமாகவும் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறு சிறு கடைகளை நடத்துபவர்கள், சிறு உற்பத்தி ஆலைகளை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் பயன் பெறலாம்.

தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் , ஆனால் அதற்கு முன்னதாக அவர்களுடைய வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் அவர்கள் தொழிலின் தற்போதைய நிலை ஆகியவை ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படக்கூடிய இந்த கிரெடிட் கார்டுகள் ஓராண்டு காலம் வேலிடிட்டி கொண்டவை.

ஆண்டுக்கு 10 - 25 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டும் சிறு தொழில் முனைவோர் அரசின் இந்த மைக்ரோ கிரெடிட் கார்டினை வாங்க முடியும் .

எப்படி விண்ணப்பம் செய்வது?:

மத்திய அரசின் உதயம் (Udyam portal) தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

உதயம் தளத்தின் msme.gov.in. என்ற அதிகாரபூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் Quick Links என்பதை கிளிக் செய்ய வேண்டும்

Udyam Registration என்பதை கொடுத்து அதில் கேட்கப்படும் தரவுகளை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடியவையாக சிறு நிறுவனங்கள் தான் இருக்கின்றன. எனவே தான் அரசு இவற்றை ஊக்குவிக்க பல சலுகைகளை வழங்குகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+