சில காலமாக மோசடிகள் அதிகரித்து வரும் காரணத்தினால் அதை தடுக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி தான் ஒரு மெசேஜ் எங்கிருந்து வருகிறது என்று டிராக் செய்யும்படி டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.இதை நடைமுறைப்படுத்தினால் மோசடி அழைப்புகள் மற்றும் மோசடி OTP-களை வெகுவாக தடுக்க முடியும். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியதிலிருந்து வெவ்வேறு முறைகளை கையாண்டு அப்பாவி மக்களின் பணத்தை அபகரிக்கின்றனர். தற்போது சர்வதேச எண்களை பயன்படுத்தி அழைப்பு விடுக்கின்றனர்.
மோசடி செய்பவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மக்களை ஏமாற்றுவதற்காக +67 மற்றும் +670 போன்ற சர்வதேச எண்களைப் போலவே காண்பிக்கும் நம்பரில் இருந்து அழைப்புகளை விடுகின்றனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உஷாராக இருக்க வேண்டியது முக்கியம். இந்த பதிவில் உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

இந்த மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன?: மோசடிக்காரர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) இருந்து பேசுவதாக கூறி பேசத் தொடங்குகின்றனர். அதன் பிறகு ஒரு நபரை ஏமாற்றி அவருடைய நம்பர் பண மோசடிக்கு பயன்பட்டதாக கூறுகின்றனர். இதைக் கேட்கும் நபர்களும் செய்யாத குற்றத்திற்கு பலியாகி மோசடிக்காரர்கள் சொல்வதற்கிணங்க செயல்படத் தொடங்குகின்றனர்.
அப்படி மக்களை ஏமாற்றி ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி ஒரு தனி அறையில் வைத்து நடக்கும் விஷயங்கள் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி பணத்தை அனுப்பச் சொல்லி மிரட்டுகின்றனர். இப்படித்தான் பல லட்ச ரூபாயை மக்கள் இழந்துள்ளனர். இன்னும் சில நேரங்களில் மோசடியை உண்மையானது போல காண்பிக்க சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பேசத் தொடங்குகின்றனர். தெரியாதவர்கள் மட்டுமின்றி படித்த நபர்களையும் இது போன்ற மோசடிக்காரர்கள் ஏமாற்றுகின்றன.ர் அதன் பிறகு அவர்கள் ஆன்லைனில் தேடும் போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறைக்குச் சென்று புகார் அளிக்கின்றனர்.
மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்தி: இதில் பெரும்பாலான மோசடிகளில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்தி பயத்தை அதிகரிப்பது தான். பயத்தை அதிகரித்து அவசர உணர்வை ஏற்படுத்தி பணத்தை அபகரிக்கின்றனர். வழக்குகளில் இருந்து தப்பிக்க பணத்தை அனுப்பும்படி கூறி மிரட்டுகின்றனர். இது போன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் அவற்றை உடனடியாக புகார் அளியுங்கள்.
உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? தெரியாத நம்பரில் இருந்து அழைப்புகள் வந்தாலோ அல்லது சர்வதேச எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தாலோ பதில் அளிப்பதை தவிர்க்கவும் மற்றும் சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு உங்களுக்கு யாரேனும் தொடர்பு கொண்டாலும் அவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். ஏனெனில் எந்த ஒரு அரசாங்க அதிகாரிகலும் உங்களை நேரடியாக தொடர்பு கொண்டு விவரங்களை கேட்க மாட்டார்கள்.
புத்திசாலித்தனமாக செயல்படுங்கள்: லிங்குகளை கிளிக் செய்யும்படி கூறினால் அவற்றை அப்படியே விட்டுவிடுங்கள். ஏனெனில் இவை ஃபிஷிங் லிங்குகளாக இருக்கலாம். இதன் மூலம் உங்களுடைய அனைத்து விவரங்களையும் வைத்து உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை அப்படியே எடுத்து விடுவார்கள்.
சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்ற தந்திரங்களை உருவாக்கி வருகின்றனர். எனவே விழிப்புணர்வை தவிர இதை தடுப்பதற்கு வேறு வழி இல்லை. இது போன்ற மோசடிக்கு பலியாவதை தடுக்க எச்சரிக்கையுடன் இருங்கள். உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications