ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள அதிரடி சலுகைகள்..!

நாட்டில் கொரோனாவுக்கு மத்தியிலும் ஒரு துறையினர் மட்டும் சம்பள உயர்வு, பதவி உயர்வு என கொண்டாட்டத்தில் இருந்தனர் என்றால் அது ஐடி துறையினர் தான்.

அதே நிலை தற்போது வரையில் தொடந்து கொண்டுள்ளது எனலாம். சொல்லப்போனால் இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

ஏனெனில் ஒரு புறம் தேவை என்பது உச்சம் தொட்டுக் கொண்டே வரும் நிலையில், மறுபுறம் ஐடி நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களையும் தொடர்ந்து பெற்று வருகின்றன.

கவலையளிக்கும் அட்ரிசன் விகிதம்

கவலையளிக்கும் அட்ரிசன் விகிதம்

இதனால் ஐடி துறையில் வேலை வாய்ப்புகள், பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. எனினும் ஐடி நிறுவனங்களுக்கு இந்த காலகட்டத்தில் மிக கவலையளிக்கும் விஷயமே அட்ரிசன் விகிதம் தான். ஏனெனில் தேவை உள்ள இந்த சமயத்தில், நிறுவனங்கள் சரியான நேரத்தில் எடுத்த ஆர்டர்களை செய்து முடிக்க திறன் வாய்ந்த ஊழியர்களையே நம்பியிருக்கின்றன.

எப்படி தக்க வைத்துக் கொள்கின்றன?

எப்படி தக்க வைத்துக் கொள்கின்றன?

ஆனால் தற்போது திறன் வாய்ந்தவர்களுக்கு தேவை அதிகம் உள்ள நிலையில், அட்ரிசன் விகிதமும் அதிகரித்துள்ளது. இதனால் திறன் வாய்ந்த ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சாதகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட முறை சம்பள உயர்வு, போனஸ் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகின்றன.

ஊழியர்களுக்கு என்னென்ன சலுகைகள்

ஊழியர்களுக்கு என்னென்ன சலுகைகள்

குறிப்பாக ஐடி துறையினர் மத்தியில் இது பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்து வருகின்றது. இதனால் நிறுவனங்கள் டாப் பெர்பார்மர்களை தக்க வைத்துக் கொள்ள, காலாண்டு ஊக்குவிப்பு சலுகைகள், ஸ்பெஷல் சம்பள உயர்வு, கலப்பின வேலை மாதிரி, எங்கிருந்து வேண்டுமானாலும் பணி புரியலாம், உயர் கல்விக்காக சலுகை அளித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சிகான வாய்ப்புகள் என பலவற்றையும் கொடுத்து வருகின்றன.

சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனங்கள்

சலுகைகளை வாரி வழங்கும் நிறுவனங்கள்

குறிப்பாக காக்னிசன்ட், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், டாடா ஸ்டீல்ம் ஆபிஜி குழுமம், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது அட்ரிசன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க என்ன செய்கின்றன என பார்க்கலாம். இதனால் ஐடி ஊழியர்களுக்கு எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன வாருங்கள் பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் ஆய்வு

மைக்ரோசாப்ட் ஆய்வு

மைக்ரோசாப்டின் சமீபத்திய ஆய்வில் சர்வதேச அளவில் சராசரியாக 41% ஊழியர்கள் தங்களது பணியினை மாற்றும் நோக்கத்தினை கொண்டுள்ளனராம். இதுவே இந்தியாவினை பொறுத்தவரையில் இந்த விகிதம் 62% ஆக உள்ளது. குறிப்பாக அட்ரிசன் விகிதம் ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு சராசரியாக அனைத்து துறைகளிலும் 20% அதிகரித்துள்ளது.

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்

பெர்சிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்த அட்ரிசன் விகிதம் பற்றி முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முக்கியமான நபர்களுக்கு சம்பள மாற்றங்களை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதே காலாண்டு ஊக்குவிப்புக்கு, மனித வள அதிகாரிகள் திறன் வாய்ந்த ஊழியர்களுடன் இணைந்துள்ளதாக கூறியிருந்தது. மேலும் புதிய ஊழியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேலை செய்வதற்கான கலப்பின அணுகுமுறையை கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.

கூடுதல் போனஸ்

கூடுதல் போனஸ்

மேலும் சிறப்பான திட்டங்களுக்கு திறன் வாய்ந்த முக்கிய ஊழியர்களுக்கு காம்பென்ஷேசன் மற்றும் கூடுதல் போனஸ்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிறந்த திறன் மிகுந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து இந்த விகிதம் மாற்றம் செய்யப்படுகின்றன என்று இந்த நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி சமீர் பிந்த்ரே தெரிவித்துள்ளார்.

காக்னிசண்ட் குழுமம்

காக்னிசண்ட் குழுமம்

குறிப்பாக நிறுவனங்கள் முக்கிய சில பகுதிகள் அட்ரிசன் விகிதத்தினை குறைக்க கவனம் செலுத்தி வருகின்றன. இதன் மூலம் முக்கிய பகுதிகளில் ஊக்குவிப்பு சலுகைகளை அளித்து வருவதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதோடு போனஸ், ப்ரோமேஷன்ஸ் சலுகையையும் அளித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்கள் மேற்கோண்டு படிப்படிபதற்கான கல்வித் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐடி நிறுவனங்கள் எப்படி?

ஐடி நிறுவனங்கள் எப்படி?

இதே ஆர்பிஜி குழுமம் அதிக தேவையுள்ள திறனுள்ள ஊழியர்களுக்கு, அதிக சம்பள உயர்வு கொடுத்து வருகின்றது. இப்படி ஒவ்வொரு நிறுவனமும் பல அதிரடியான சலுகையினை ஊழியர்களுக்கு கொடுத்து வருகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள பல சலுகைகளை கொடுத்து வருவதோடு, தொடர்ந்து பணியமர்த்தலையும் அதிகரித்து வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+