கடன் சலுகை: கூட்டு வட்டிக்கான ரீபண்ட் யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு மக்களுக்கு 6 மாதம் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த விலக்கு அளித்து இருந்தது. இந்தச் சலுகையைப் பயன்படுத்தியவர்களுக்கு மீது வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வட்டிக்கு வட்டி போட்டு வசூலிக்கக் காரணத்திற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு மக்களின் பிரச்சனையை உணர்ந்து நிலையான வட்டி (Simple Intrest) அளவிற்கும், கூட்டு வட்டி (comound intrest) போட்டு வசூலித்த தொகையின் வித்தியாசத்தை உடனடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதன் மூலம் ரிசர்வ் வங்கியும் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் நவம்பர் 5ஆம் தேதிக்குள் அதிகமாக வட்டி வசூலித்த வாடிக்கையாளர்கள் கணக்கிற்குப் பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

எனவே இன்று மாலைக்குள் தகுதியான அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகள் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்நிலையில் யார் தகுதியானவர்கள் என்பது எப்படித் தெரிந்துகொள்வது..?

2 கோடி ரூபாய்

2 கோடி ரூபாய்

வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் 2 கோடி ரூபாய்க்கும் குறைவாகக் கடன் வாங்கிய வியாபாரிகள் மற்றும் தனிநபர்கள் அனைவரும் மத்திய அரசின் கூட்டு வட்டி தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரீபண்ட் அல்லது கேஷ்பேக் பெறத் தகுதியானவர்கள்.

மேலும் அரசின் 6 மாத கடன் சலுகையைப் பெறாதவர்களுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கூட்டு வட்டி வசூலித்திருந்தால் அவர்களும் கூட்டு வட்டி தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரீபண்ட் அல்லது கேஷ்பேக் பெறத் தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வழக்கு

வழக்கு

அரசின் 6 மாத கடன் சலுகை காலத்தில் வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்த காரணத்திற்காகச் சுப்ரீம் கோர்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரீபண்ட் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில் மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான காலத்திற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலித்த வட்டியில், கூட்டு வட்டி தொகையில் (comound intrest), நிலையான வட்டி (Simple Intrest) தொகையைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகையை வாடிக்கையாளர் கணக்கிற்கு ரீபண்ட் அல்லது கேஷ்பேக் ஆகக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

 

குறுஞ்செய்தி

குறுஞ்செய்தி

ரீபண்ட் அல்லது கேஷ்பேக் பெற தகுதியான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வங்கி தரப்பில் இருந்து கடன் கணக்கிற்குத் தொடர்புடைய வாடிக்கையாளர் மொபைல் எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

தொகை

தொகை

மத்திய அரசின் கூட்டு வட்டி தள்ளுபடி திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு வங்கிகள் அனுப்படும் இந்தக் குறுஞ்செய்தியில் ரீபண்ட் அல்லது கேஷ்பேக் அளிக்கப்படும் தொகையைக் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இந்தத் தீட்டத்தின் கீழ் சில வங்கிகள் நவம்பர் 3ஆம் தேதி முதல் ரீபண்ட் கொடுக்கத் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

கடன் வகைகள்

கடன் வகைகள்

இந்த ரீபண்ட் திட்டம் வீட்டுக் கடன், கல்வி கடன், கிரெடிட் கார்டு கடன், வாகன கடன், MSME கடன்ஷ நுகர்வோர் கடன் மற்ரும் செலவின கடன் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

எனவே மேலே குறிப்பிட்ட கடன் வகைகளில் யார் எந்தக் கடன் வாங்கியிருந்தாலும், வங்கிகள் கூட்டு வட்டி வசூலிக்கப்பட்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் ரீபண்ட் பெறலாம்.

 

வங்கிகள்

வங்கிகள்

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் தகுதியான அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கூட்டு வட்டி தொகையை ரீபண்ட் செய்த பின்னர், இந்தத் தொகையை வங்கிகள் அரசிடம் இருந்து திரும்பப் பெறலாம். திரும்பப் பெறக் கடைசி நாள் டிசம்பர் 15.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+