அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (AAHL) தற்போது மும்பை, லக்னோ, அகமதாபாத், ஜெய்பூர், திருவனந்தபுரம் மற்றும் மங்களூரு போன்ற விமான நிலையங்களைச் சொந்தமாகக் கொண்டு இயக்கி வருகிறது. இங்கு உள்ள விமான நிலைய ஓய்வறைகளை தற்போது அனைத்து ஏர்போர்ட் லவுஞ்ச் அக்சஸ் கொண்ட முக்கிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்களும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த மாற்றம் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலைய ஓய்வறைகளை பயணிகள் எளிதாக பயன்படுத்த உதவும். ஒருவர் தங்களுடைய கிரெடிட் கார்டுகளுக்கு ஏர்போர்ட் லவுஞ்ச் ஆக்சஸ் வசதி இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

விமான நிலைய லவுஞ்ச் என்றால் என்ன?: விமான நிலைய லவுஞ்ச் என்பது பல விமான நிலையங்களில் வழங்கப்படும் ஒரு வசதி. விமான நிலைய ஓய்வறைகள் என்றும் சொல்லலாம். நீங்கள் ஒரு ஓய்வறைக்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் இலவச உணவு மற்றும் பானங்கள் மற்றும் உங்கள் சாதனங்களை சார்ஜ் செய்யலாம், வசதியான இடத்தில் உட்காரலாம், சில டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் அல்லது உங்கள் விமானத்திற்கு முன் கடைசி நிமிட வேலைகளைச் செய்யலாம். உயர்தர ஓய்வறைகளில் ஸ்பா, டைனிங் மற்றும் ஷவர் போன்ற வசதிகளும் இருக்கும்.
உங்களுடைய கிரெடிட் கார்டுக்கு இலவச விமான நிலைய லாஞ்ச் ஆக்சஸ் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?:
கிரெடிட் கார்டுடன் வந்த டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களை முழுவதுமாக படிக்கவும்: உங்களுடைய கிரெடிட் கார்டுக்கு வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரி பார்க்கவும். அதில் இலவச ஓய்வறையை பயன்படுத்தும் வசதி இருக்கிறதா? என்ற தகவல்கள் இருக்கும்.
அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் பிரத்தியேக இணையதளத்திற்கு சென்று நீங்கள் தேர்ந்தெடுத்த கிரெடிட் கார்டின் நன்மைகள், சலுகைகள் மற்றும் பலன்களை விவரிக்கும் பகுதிக்கு செல்லவும். அங்கு உங்களுடைய கிரெடிட் கார்டுக்கு இலவச விமான நிலைய ஓய்வறையை பயன்படுத்தும் வசதி இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும்: ஒரு வேலை உங்களால் ஆன்லைனில் தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கிரெடிட் கார்டு வழங்குபவரின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். வழக்கமாக கிரெடிட் கார்டின் பின்புறத்தில் வாடிக்கையாளர் சேவை எண் வழங்கப்பட்டிருக்கும். அதை வைத்து கால் செய்து கேட்கும் பட்சத்தில் அவர்கள் அந்த கிரெடிட் கார்டுக்கு விமான நிலைய ஓய்வறையைப் பயன்படுத்தும் வசதி உள்ளதா? என்பதைக் கூறிவிடுவார்கள்.
மொபைல் அப்ளிகேஷனைப் பார்க்கவும்: பல கிரெடிட் கார்டு நிறுவனங்கள் விமான நிலைய ஓய்வறை உட்பட அந்த அந்த கிரெடிட் கார்டின் நன்மைகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.
கிரெடிட் கார்டுகளின் ஐகானைச் சரி பாருங்கள்: சில கிரெடிட் கார்டுகளில் பிரையாரிட்டி பாஸ், லவுஞ்ச் கீ அல்லது குறிப்பிட்ட ஏர்லைனில் சின்னங்கள் போன்ற ஐகான்கள் இடம் பெற்றிருக்கும். இதை வைத்தே எளிதாக அந்த கிரெடிட் கார்டு விமான நிலைய லவுஞ்ச் வசதியை வழங்குகிறதா? என்பதை கண்டுபிடித்து விடலாம்.
உங்கள் கிரெடிட் கார்டு வழங்குனரிடம் இருந்து ஏதேனும் மின்னஞ்சல்கள் கடிதங்கள் அல்லது அறிவிப்புகள் வந்துள்ளதா? என்பதை சரி பாருங்கள். அதில் இது குறித்த அறிவிப்புகள் மற்றும் மாற்றங்கள் இருந்தால் உங்களுக்கு தெரியவரும். நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டின் வகை மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் விவரங்கள் இருக்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications