ரூ.18.5 லட்சம் சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. புதிய விதிகள் பற்றி தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பலர் அதிக சம்பளம் வாங்கினாலும், அதனுடன் வரி சுமையும் அதிகமாகும் என்பது பொதுவான நிலை. பல சமயங்களில், இந்த வரி சுமைதான் நிதி நிலையை கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருக்கும். இருப்பினும், புதிய வரி முறைப்படி, சில திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த சுமையை குறைத்து, சட்டப்பூர்வமாக வரி இல்லாத நிலையை பெறுவது கூட சாத்தியம்.

2025-26ஆம் ஆண்டுக்கான புதிய வரி முறையின் கீழ், ரூ.18.5 லட்சம் வரை வருமானம் இருந்தாலும், வரி செலுத்த வேண்டியதில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். புதிய வரி முறையில் பாரம்பரிய கழிவுகள் குறைக்கப்பட்டாலும், திட்டமிட்ட அலவான்ஸ்கள் மற்றும் சில சட்டப்பூர்வ விதிவிலக்குகள் இன்னும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி, இந்த சட்டபூர்வ வாய்ப்புகளை நுட்பமாக பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறைத்து, வரி கட்ட வேண்டிய நிலையை சுழற்றி விடலாம்.

ரூ.18.5 லட்சம் சம்பாதித்தாலும் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. புதிய விதிகள் பற்றி தெரியுமா?

புதிய வரி விதிப்படி, ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.18.5 லட்சம் இருந்தால், மொத்த வரி சுமை சுமார் ரூ.1.61 லட்சம் (செஸ் உட்பட) ஏற்படக்கூடும். இது எந்தவித விலகல்களும் பயன்படுத்தாமல் கணக்கிட்ட மதிப்பாகும். இப்போது, முதல் கட்டமாக அரசு வழங்கும் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் ரூ.75,000 கழிக்கப்பட்டால், வரி செலுத்த வேண்டிய வருமானம் ரூ.17.75 லட்சமாக குறையும்.

உங்கள் மொத்த வருமானம் ரூ.18.5 லட்சம் என்றால், அதில் அடிப்படை சம்பளம் ரூ.9.25 லட்சம் எனக் கருதலாம். இந்த அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில், நிறுவனத்தால் செய்யப்பட்ட NPS மற்றும் EPF பங்களிப்புகள் வரிவிலக்குக்குத் தகுந்தவை.

முதலில் Section 80CCD(2)ன் கீழ், அடிப்படை சம்பளத்தின் 14% வரை நிபந்தனைக்குட்பட்ட நிறுவன பங்களிப்பு வரிவிலக்குக்குத் தகுந்ததாகும். ரூ.9.25 லட்சத்தில் 14% என்றால், இது ரூ.1,29,500 வரை கழிவாகக் கொள்ளலாம். இதைப் போலவே, அடிப்படை சம்பளத்தின் 12% வரை நிறுவன பங்களிப்பு, EPF-க்கு செலுத்தப்படும் தொகையாக, வரிவிலக்குக்குத் தகுந்தது. இது ரூ.1,11,000 வரை அமையும். இந்த இரண்டையும் சேர்த்து, நீங்கள் பெறும் மொத்த கழிவு ரூ.2,40,500 ஆகும். பின்னர், உங்கள் வரிக்குட்பட்ட வருமானம் ரூ.15.34 லட்சமாக குறையும்.

பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி கணக்கு போன்ற அரசுப் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்தால், ரூ.17,500 வரை வரி விலக்கு பெற முடியும். இதனை பயன்படுத்தினால், உங்கள் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானம் ரூ.15.34 லட்சத்தில் இருந்து ரூ.15.17 லட்சமாக குறையும். அதனைத் தொடர்ந்து, அஞ்சல் இலாக்கா வட்டி வருவாயில் ரூ.3,500 வரை வரிவிலக்கு பெறலாம். இதைச் சேர்த்ததும், வரிக்குட்பட்ட வருமானம் மேலும் குறைந்து ரூ.15.13 லட்சமாக இருக்கும்.

உதாரணமாக, விருந்தினருக்கான செலவுகள் ரூ.30,000, போக்குவரத்து படிவம் ரூ.70,000, எரிபொருள் மற்றும் மொபைல் பில்கள் ரூ.35,000, ஊழியர் யூனிபார்ம் செலவுகள் ரூ.15,000.. இவற்றை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறும்போது, அவை அதிகாரப்பூர்வ செலவுகளாக வரிக்கழிவுக்குத் தகுந்தவையாக மாறுகின்றன.

அதேபோல், வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக்கு நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதன் வட்டி செலவுகள் உங்கள் வாடகை வருமானத்தை மிஞ்சினால், அந்த இழப்பை கழிவு செய்ய முடியும். வீட்டுக் கடன் வட்டி ரூ.2 லட்சம், ஆண்டு வாடகை வருமானம் ரூ.1 லட்சம், இழப்பு ரூ.1 லட்சம் ஆகும். இந்த ரூ.1 லட்சத்தையும் கழித்தால், உங்கள் வரிக்குட்பட்ட வருமானம் ரூ.12.63 லட்சம் ஆகும்.

மேலும், நீங்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால், ரூ.25,000 அல்லது மொத்த ஓய்வூதியத்தின் 1/3 (இரண்டும் குறைந்தது) வரை வரிவிலக்கு கிடைக்கும். இதை எடுத்தால், வரிக்குட்பட்ட வருமானம் ரூ.12.63 லட்சத்தில் இருந்து ரூ.12.38 லட்சமாக குறையும்.

மேலும், கல்விச்செலவுகள், மருத்துவ செலவுகள் மற்றும் பிற அரசு அங்கீகரித்த செலவுகள் மூலம், வரியை குறைத்து இதிலிருந்து முற்றிலும் விடுபடலாம். உங்கள் சம்பளம் ரூ.18.5 லட்சமாக இருந்தாலும், திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் வரி செலுத்தாமல் தப்பிக்க இது ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+