நீங்கள் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் பெறுகிறீர்களா? பழைய வரி முறையின் கீழ் வரி சேமிப்பது எப்படி?

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் வரி செலுத்துபவர்களுக்கு பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதா? அல்லது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதா? என்ற குழப்பம் ஏற்படும். அரசின் சமீபத்திய வரி மாற்றங்களால் பலர் பலனடைந்துள்ளனர்.

ஏனெனில் சாமானியர்களுக்கு வரிச் சுமையை குறைக்கும் விதமாக ஆண்டு வருமானம் ரூ.12.75 லட்சம் வரை இருந்தாலும் வரி இல்லை என்ற புதிய வரி முறை அமலுக்கு வந்தது. ஆனாலும் பல சலுகைகள் மற்றும் கழிவுகள் காரணமாக இன்னும் சிலருக்கு பழைய வரி விதிப்பு முறைதான் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. உங்கள் ஆண்டு வருமானம் ரூ.18.5 லட்சமாக இருந்தாலும் பழைய வரி விதிப்பு முறையின் கீழ் வரி இல்லாததாக எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

நீங்கள் ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வருமானம் பெறுகிறீர்களா? பழைய வரி முறையின் கீழ் வரி சேமிப்பது எப்படி?

பழைய வரி முறை: பழைய வரி முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் பிரிவு 87A-இன் கீழ் வரித் தள்ளுபடி பெறலாம். இதனால் ரூ.5 லட்சம் வருமானம் முற்றிலும் வரி இல்லாததாக மாறும். இது இந்த வருமான வரம்பிற்குள் வரும் நபர்களுக்கு நன்மை அளிக்கும். பழைய வரி விதிப்பில் தனி நபர்களுக்கு பல்வேறு விலக்குகள் கிடைக்கிறது. இதுவும் பலர் பழைய வரி முறையைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம். பழைய வரி முறையின் கீழ் வரி செலுத்துவோர் கீழ்க்காணும் வரி விலக்குகளை பெறலாம்.

பிரிவு 80C: இது மிகவும் பிரபலமான வரி விலக்கு. இதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி சேமிக்க முடியும். EPF, PPF, ELSS, NSC போன்ற திட்டங்களின் பங்களிப்புகளுக்கு நீங்கள் இந்த விலக்குகளை பெறலாம்.

பிரிவு 80D: தங்களுக்காகவோ அல்லது தங்கள் குடும்பத்திற்காகவோ காப்பீட்டு பாலிசிகளுக்கு செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு கழிவுகளைக் கோரலாம். அதுவும் அதிகபட்சமாக ரூ.25,000 வரை கோரலாம். மூத்தக்குடிமக்களாக இருந்தால் ரூ. 50,000 வரை விலக்கு பெற முடியும்.

பிரிவு 24B: வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ. 2 லட்சம் வரையிலான விலக்கு கோர முடியும்.

நீங்கள் ஆண்டு வருமானமாக ரூ. 18.5 லட்சம் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொகையை எப்படி வரி இல்லாததாக பழைய வரி முறையின் கீழ் குறைப்பது என்பது குறித்து பார்ப்போம்.

சம்பளப் பிரிவு: உங்களுடைய மொத்த சம்பளம் ரூ.18.5 லட்சமாக இருந்தால் பிரிவு 80சி-யின் கீழ் வரி விலக்கு பெறலாம். இபிஎப் மற்றும் பிபிஎஃப் போன்ற முதலீடுகளில் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். இதனால் இந்த கழிவுகளுக்கு பிறகு உங்கள் வரி விதிக்கப்படும் வருமானம் ரூ. 17 லட்சமாக மாறும்.

மருத்துவ காப்பீடுகள்: அடுத்ததாக பிரிவு 80D-யின் கீழ் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு தனிநபர்களாக இருந்தால் ரூ.25,000 வரை விலக்கு பெற முடியும். இதனால் உங்கள் வரி விதிக்கப்படும் வருமானம் ரூ.16.75 லட்சமாகக் குறையும்.

பெற்றோருக்கு காப்பீடு: உங்கள் பெற்றோர் மூத்த குடிமக்களாக இருந்தால் அவர்களின் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு கூடுதலாக ரூ. 50,000 வரை வரி விலக்கு பெற முடியும். இதன் மூலம் உங்கள் வரி விதிக்கக் கூடிய வருமானம் ரூ.16.25 லட்சமாகக் குறையும்.

வீட்டுக் கடன் வட்டி: பிரிவு 24பி-இன் கீழ் வீட்டுக் கடன் வட்டிக்கு ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். இது உங்கள் வரி விதிக்கப்படும் வருமானத்தை ரூ.14.25 லட்சம் ஆக மாற்றும்.

கல்விக் கடன்: கல்வி கடன்களுக்கு பிரிவு80E-இன் கீழ் செலுத்தப்படும் வட்டிக்கு விலக்கு கிடைக்கும். உங்கள் கல்விக் கடன் வட்டி ரூ. 90,000 என்று வைத்துக் கொள்வோம், அப்படியானால் உங்கள் வரி விதிக்கப்படும் வருமானம் ரூ. 13.35 லட்சமாகக் குறையும்.

ஸ்டாண்டர்ட் டிடக்சன்: நிலையான விலக்குகள் என்று கூறப்படும் ஸ்டாண்டர்ட் டிடக்ஷனில் தனி நபர்களுக்கு ரூ.50,000 வரை விலக்க அளிக்கப்படுகிறது. இந்த விலக்கை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வரி விதிக்க கூடிய வருமானம் ரூ.12.85 லட்சமாக மாறும்.

NPS பங்களிப்புகள்: தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு நீங்களும் உங்கள் முதலாளியும் சேர்ந்து பங்களிப்பு செய்திருந்தால் பிரிவு 80சிசிடி-யின் கீழ் வரி விலக்கு பெறலாம். உங்களுடைய தனிப்பட்ட பங்களிப்புக்கு 50,000 ரூபாய், முதலாளியின் பங்களிப்புக்கு ரூ.1.08 லட்சமும் விலக்கு கிடைக்கும். இதனால் உங்கள் வரி விதிக்கக் கூடிய வருமானம் ரூ.11.27 லட்சமாகக் குறையும்.

வீட்டு வாடகை படி: நீங்கள் HRA பெற்றால், விலக்கு கோரலாம். நீங்கள் ரூ. 6 லட்சம் வாடகை செலுத்துகிறீர்கள்.. இதற்கு அதிகபட்சமாக ரூ. 4.8 லட்சம் வரை விலக்கு கோரலாம். இது உங்கள் வரி விதிக்கப்படும் வருமானத்தை ரூ. 6.47 லட்சமாகக் குறைக்கும்.

நன்கொடைகள்: பிரிவு 80G இன் கீழ், தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு, 10% வரை கழிவுகளைக் கோரலாம். உதாரணமாக, ரூ. 40,000 நன்கொடை வழகுகிறீர்கள் என்றால் உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ. 6.07 லட்சமாகக் குறையும்.

பிற படிகள்: உங்களுக்கு உணவு மற்றும் போக்குவரத்து போன்ற சலுகைகள் வழங்கப்பட்டால் அதற்கும் விலக்க பெற முடியும். இதனால் உங்கள் வரி விதிக்கப்படும் வருமானம் ரூ.4.82 லட்சமாகக் குறையும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விலக்குகளையும் பயன்படுத்திய பிறகு இறுதியாக உங்கள் வரி விதிக்கப்படும் வருமானம் ரூ. 4.82 லட்சமாக மாறியிருக்கும்.

பழைய வரி விதிப்பு முறையின் கீழ் ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி இல்லை. இந்தப் பதிவு வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. வரி ஆலோசனையாக இவற்றை கருதக்கூடாது. உங்களுடைய நிதி நலனுக்கு ஏற்ப ஆலோசனை பெறுவதற்கு வரி நிபுணர்களை அணுகுவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+