ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் 7.6 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தேவைப்படும் புதுப்புது அம்சங்களை EPFO அமைப்பு தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது புதிதாக EPF ட்ரான்ஸ்ஃபர் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது EPF பணத்தை இன்னொரு நிறுவனத்திற்கு மாற்ற கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவைப்பட்டது. ஆனால் தற்போது ஆதார் OTP-ஐ பயன்படுத்தி எளிதில் EPF ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.
இந்த வசதி 2017-ஆம் ஆண்டின், அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு UAN பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கிறது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா சனிக்கிழமை இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தினார்.

தேவைப்படும் விவரங்கள்: ஆதார் இணைப்பை கொண்ட e-KYC EPF உறுப்பினர்கள் தங்கள் நிறுவனத்தின் தலையீடு இல்லாமல் இபிஎஃப் ட்ரான்ஸ்ஃபர் கோரிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். அதற்கு OTP வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால் இது கண்டிப்பாக 2017-ஆம் ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு UAN வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆதாருடன் UAN-ஐ இணைப்பது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் EPFO உறுப்பினர் e-Sewa என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: UAN நம்பரைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதாரையும், இபிஎஃப் கணக்கையும் இணைப்பதற்கு "மேனேஜ்" என்ற செக்ஷனுக்கு சென்று "கேஒய்சி" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: கேஒய்சி செக்ஷனில் உங்கள் 12 இலக்க ஆதார் நம்பரை வழங்கி ஆதார் கார்டில் உங்கள் பெயர் எப்படி இருக்கிறதோ அந்தப் பெயர் எழுதப்பட்டுள்ளதா? என்பதைச் சரி பார்க்கவும்
ஸ்டெப் 5: "சேவ்" என்பதை கிளிக் செய்தவுடன் வழங்கப்பட்ட விவரங்கள் UIDAI பதிவுகளுடன் ஒப்பிடப்படும். இந்த சரிபார்ப்பு செயல்முறை வெற்றிகரமாக முடிந்த பிறகு உங்கள் ஆதார் விவரங்களுடன் இபிஎப் கணக்கு இணைக்கப்படும். இபிஎப் ட்ரான்ஸ்பரை தடையற்றதாக செய்து முடிக்க ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை கண்டிப்பாக ஆதாருடன் இணைக்க வேண்டும். மற்றொரு சிறப்பம்சமாக EPFO உறுப்பினர்கள் இனி ஒரு நிறுவனத்தின் சரிபார்ப்பு செயல்முறையும் இல்லாமல் மற்றும் EPFO அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications