ஆதார் தரவுகள் மூலம் வங்கி கணக்கில் பணம் திருட்டு.. உடனே இதை செய்யுங்க, இல்லாட்டி பெரும் இழப்பு தான்!

புதிய ஆதார் - செயல்படுத்தப்பட்ட பேமென்ட் சிஸ்டத்தில் (AePS) உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள், உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பேலென்ஸ் தொகையை மொத்தமாக வழித்து எடுத்து ஜீரோவாக குறைக்கும் புதிய மோசடிகள் நடப்பதை சமூக ஊடகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில் பிரபலமான யூடியூபரான புஷ்பேந்திர சிங் இத்தகைய மோசடியால் பாதிக்கப்பட்ட பின்பு இதுக்குறித்து மக்கள் அதிகம் பேச துவங்கியுள்ளனர். இந்த மோசடியில் கைரேகை தரவு, ஆதார் எண் மற்றும் வங்கியின் பெயரை ஆகிய முக்கியமான தரவுகளை மோசடியாளர்கள் கைப்பற்றுகின்றனர்.

ஆதார் தரவுகள் மூலம் வங்கி கணக்கில் பணம் திருட்டு.. உடனே இதை செய்யுங்க, இல்லாட்டி பெரும் இழப்பு தான்!

இந்த தரவுகள மூலம் எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் பணத்தைத் திருடப்படுகிறது, இதற்கு மோசடியாளர்களுக்கு OTP கூட தேவைப்படுவது இல்லை என்பது ஷாக்கான விஷயமாக உள்ளது. இத்தகைய மோசடிகளில் யாரும் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காக ஆதார் தரவுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த புதிய AePS மோசடியில் மிக மோசமான விஷயம் என்னவென்றால், உங்கள் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டதற்கான SMS கூட நீங்கள் பெறுவதில்லை என்பது தான். இண்டர்நெட் சென்டர், ஜெராக்ஸ் கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இருந்து ஆதார் எண்கள் திருடப்படுகிறது. பின்னர் மோசடி செய்பவர்கள் சேகரிக்கப்பட்ட ஆதார் விபரத்தில் இருக்கும் நபர்களின் வங்கி கணக்கின் பெயரைத் தெரிந்துகொள்ள பாதிக்கப்பட்டவர்களைப் பின்தொடர்கிறார்கள்.

வங்கி கணக்கு பெயர் தெரிந்துக்கொண்ட பின்பு, அவர்களின் கைரேகை விபரங்களை பெற மோசடியாளர்கள் நிலப் பதிவேடு மற்றும் பிற ஆதாரங்களைக் தேடி கண்டுபிடிக்கின்றனர். இந்த கைரேகை தரவுவை ஒரு சிலிக்கான் ஜெல் மூலம் அச்சு எடுக்கப்பட்டு அதை AePS ஐப் பயன்படுத்தி பணம் எடுக்கப் பயன்படுகின்றன.

இத்தகைய மோசடியில் இருந்து தப்பிக்க பின்வரும் வழிமுறைய பின்பற்றுங்கள்.

மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி:

  1. மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க, mAadhaar ஆப் அல்லது UIDAI இணையதளத்தைப் பயன்படுத்தி உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவைப் லாக் வேண்டும்.
  2. AePS ஐ முடக்க, முதலில் உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவைப் லாக் செய்ய வேண்டும். mAadhaar செயலியை பதிவிறக்கி, பதிவு செய்ய உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும்.
  3. உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்த்து, செயலியை பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்ய வேண்டும். உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் இந்த செயலியை பயன்படுத்தி பயோமெட்ரிக்ஸைத் திறக்கலாம்.

mAadhaar செயலி: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • உங்கள் மொபைலில் கூகுள் பிளே ஸ்டோரை திறந்து mAadhaar செயலியை இன்ஸ்டால் செய்யவும். ஐபோன்களுக்கு, ஆப் ஸ்டோரைப் பயன்படுத்தவும்.
  • mAadhaar செயலியைப் பதிவிறக்குவதற்குத் தேவையான அனுமதியை அனுமதிக்கவும்
  • உங்கள் மொபைலில் mAadhaar நிறுவப்பட்டதும், செயலிக்கான பாஸ்வோர்ட் அமைக்கவும்
  • கடவுச்சொல் 4 இலக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும் (அனைத்தும் எண்களாக இருக்க வேண்டும்).

mAadhaar ஆப் மூலம் பயோமெட்ரிக்-ஐ லாக் செய்வதற்கான வழிமுறை

  • mAadhaar செயலியை திறந்து, பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாக்இன் செய்யவும்.
  • சுயவிவரத்தை கிளிக் செய்யவும், அதாவது Profile
  • செயலியின் மேல் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ள மெனு விருப்பத்தைத் தட்டவும்
  • 'பயோமெட்ரிக் செட்டிங்ஸ்' என்பதைக் கிளிக் செய்யவும்
  • 'எனேபிள் பயோமெட்ரிக் லாக்' விருப்பத்தில் ஒரு டிக் செய்யவும்
  • அதன் பின்பு 'சரி' என்பதைத் தட்டவும், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்
  • OTP உள்ளிட்டவுடன், பயோமெட்ரிக் விவரங்கள் உடனடியாக பூட்டப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+