சென்னை: வளர்ந்து வரும் நவீன உலகில் டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் அதிகரித்துவிட்டன போகும் போக்கை பார்த்தால் இனி ரொக்க பணத்தை வைத்து செலவு செய்யும் நபர்கள் இரண்டு இலக்க எண்ணில் தான் இருப்பார்கள் போலும். அந்த அளவுக்கு டிஜிட்டல் யுகம் நம்மை ஆட்டி படைக்கிறது. இவை நல்லது என்றாலும், சில நேரங்களில் இது போன்ற பேமெண்ட் தளங்களால் நாம் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். எப்பொழுதாவது ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு பில் செலுத்தும் போது உங்களுடைய யுபிஐ பேமெண்ட் தளங்கள் மூலம் பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறீர்களா.. அப்படியானால் உங்களுக்குத் தான் இந்த பதிவு.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அறிமுகப்படுத்திய UPI சேவையானது, இணைய இணைப்பு இல்லாமலும் வங்கிச் சேவைகளை செய்ய அதன் பயனர்களை அனுமதிக்கிறது. *99# என்ற USSD code மூலம் ஆஃப்லைனில் இருந்து பயனர்கள் UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியும். இதன் மூலம் நீங்கள் உங்கள் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் விவரங்களைப் பார்ப்பது, UPI பின்னை அமைப்பது அல்லது மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.

UPI சேவையை எப்படி ஆஃப்லைனில் பெறுவது?: UPI ஆஃப்லைனைப் பயன்படுத்தி பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும். இன்டர்நெட் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்ய கீழ்க்கண்ட ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 1: உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து *99#-ஐ டயல் செய்யவும்.
ஸ்டெப் 2: அதன் பிறகு கீழ்க்கண்ட சேவைகள் ஸ்கிரீனில் காண்பிக்கப்படும்.
1. பணம் அனுப்புதல் (Send Money)
2. பணம் பெறுதல் (Request Money)
3. பேலன்ஸ் விவரங்களைப் பார்ப்பது (Check Balance)
4. சுயவிவரங்களைப் பார்ப்பது (My Profile)
5. பரிவர்த்தனைகள் (Transactions)
6. UPI பின் மாற்றுதல் (UPI Pin)
ஸ்டெப் 3: பணம் அனுப்ப நம்பர் 1-ஐ அழுத்தி "Send" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆனால் இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு, முன்னால் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் விவரங்களை கொடுக்க வேண்டும். அதன் பின்னரே உங்களால் பணம் அனுப்பவோ அல்லது பெறவும் முடியும்.
UPI லைட்-ஐ பயன்படுத்தி, எவ்வாறு பணம் அனுப்புவது?: UPI லைட்டை அமைக்க கீழ்க்காணும் ஸ்டேப்ஸ்களைப் பின்பற்றவும்.
ஸ்டெப் 1: முதலில் UPI லைட்-ஐ திறக்கவும்.
ஸ்டெப் 2: டேர்ம்ஸ் & கண்டிஷன்களை அக்செப்ட் செய்யவும்.
ஸ்டெப் 3: UPI லைட்டில் சுமார் ரூ. 2,000 வரையிலான தொகையை மட்டுமே போட முடியும்.
ஸ்டெப் 4: பணபரிவர்தனையை உறுதிப்படுத்த உங்கள் UPI பின்னை என்டர் செய்யவும்.
UPI லைட்டைப் பயன்படுத்துவது எப்படி?:
ஸ்டெப் 1: பணம் பெறுபவரின் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது பணம் பெறுபவரின் ஃபோன் நம்பரை என்டர் செய்யலாம்.
ஸ்டெப் 2: கட்டண முறைக்கு UPI லைட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: இதில் நீங்கள் பாஸ்வேர்டு போட வேண்டிய அவசியமின்றி, உங்கள் பரிவர்த்தனையை செய்யலாம்.
UPI Lite என்பது ரூ. 500க்கும் குறைவான கட்டணங்களுக்குப் பயன்படுத்தப்படும் முறையாகும். எனவே, இந்த செயல்முறையைப் பயன்படுத்தி பெரிய பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications