இந்தியாவில் இருக்கும் பலர் நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், தங்களுக்கென்று ஒரு சுய தொழிலை செய்ய வேண்டும் என்ற யோசனையில் இருப்பீர்கள். அதிலும் சிலருக்கு பெட்ரோல் பங்க் திறக்க வேண்டும் என்ற சிந்தனையும் அவ்வப்போது வருவதுண்டு. நீங்கள் பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் அதற்கு தேவைப்படும் முதலீடு, விதிகள் மற்றும் நிதி தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பெட்ரோல் பம்பை திறப்பதற்கான தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது அல்லது 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பை கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சில்லறை விற்பனை நிலையம் அல்லது வேறு ஏதேனும் துறையை நடத்துவதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெட்ரோல் பங்க் அமைக்க இருக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.25 லட்ச ரூபாய் நிகர மதிப்பை கொண்டிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரரின் குடும்ப நிகர மதிப்பு ரூ50 லட்சத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது.

லைசென்ஸ்: இந்தியாவில் பெட்ரோல் பம்பைத் திறக்க, பெட்ரோல் நிறுவனத்திடம் இருந்து லைசென்ஸ் பெற வேண்டும். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் பெட்ரோல் பம்ப் செயல்பாடுகளுக்கு லைசென்ஸ் வழங்குகின்றன.
கிராமப் பகுதிகள்: கிராமப்புறங்களில் ஒரு பெட்ரோல் பங்க் அமைக்க ஒரு யூனிட்டுக்கு 800 சதுர மீட்டர் இடம் தேவைப்படும், அதுவே 2 யூனிட் அமைக்க வேண்டுமானால் 1200 சதுர மீட்டர் நிலம் தேவைப்படலாம்.
நகர்புற பகுதிகள்: நகர்ப்புறங்களில் ஒரு பெட்ரோல் பங்க் திறக்க 1 யூனிட்டுக்கு 500 சதுர மீட்டர் இடம் தேவைப்படும். ஆனால் 2 யூனிட் அமைப்பதற்கு 800 சதுர மீட்டர் நிலம் தேவைப்படலாம்.
நேஷனல் ஹைவேஸ்: தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்க் திறக்க 1 யூனிட்டுக்கு 1200 சதுர மீட்டர் இடம் தேவைப்படும். அதுவே 2 யூனிட் அமைத்தால் 2000 சதுர மீட்டர் நிலம் தேவைப்படலாம்.
பெட்ரோல் பங்க் திறக்க தேவைப்படும் முதலீடு:
நிலத்தின் விலை: நிலம் இருக்கும் இடம் மற்றும் அளவைப் பொறுத்த நிலத்தின் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கும்.
கட்டுமான செலவு: பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் பெட்ரோல் பம்பின் அளவை பொறுத்து ரூ.30 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகலாம். எரி பொருள் விநியோக யூனிட், சேமிப்புத் தொட்டிகள் மற்றும் பெட்ரோல் பம்பை இயக்குவதற்கு தேவையான பிற உபகரணங்களின் விலை ரூ. 20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இருக்கும்.
லைசென்ஸ் கட்டணம்: லைசென்ஸ் கட்டணங்களில் தேவையான அனுமதி அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறுவதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகலாம்.
விண்ணப்ப செயல்முறை: பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு ஆன்லைனிலேயே உங்களுடைய விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று "ரெஜிஸ்டர் நவ்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்த அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்வதன் மூலம் நீங்களும் பெட்ரோல் பம்புக்கு ஓனராகலாம். ஆன்லைன் அப்ளிகேஷனுக்கு 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு அப்ளிகேஷன் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பெட்ரோல் பம்ப் அமைப்பதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பது மேல் காணும் விவரங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது நீங்கள் பெட்ரோல் பங்க் அமைக்கும் இடத்தை பொறுத்து அமையும் அது மட்டும் இன்றி மக்கள் பெட்ரோல் டீசல்-இன் விலை உயர்வு காரணமாக EV வாகனங்களுக்கு மக்கள் மாறி வருவதால், இனி வரும் காலங்களிலும் EV வாகனங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே எந்த ஒரு முதலீட்டு முடிவும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதிய ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று முடிவெடுங்கள். மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு தேவைப்படும் விஷயங்கள் குறித்த தோராயமான மதிப்பீடு மட்டுமே. இதை வைத்து எந்த ஒரு முதலீட்டு முடிவும் எடுக்க வேண்டாம். உங்களுடைய நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பெயரில் பிசினஸ் தொடங்கவும்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications