குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்.. அதுவும் எஸ்பிஐ-யில்.. விவரங்கள் இதோ..!

வங்கிகளில் கணக்கினை தொடங்கினால் அதற்கு குறைந்தபட்ச இருப்பு என்பது கட்டாயமாக அனைத்து வங்கிகளிலும் உண்டும். எனினும் அனைவரும் வங்கிக் கணக்கு வேண்டும் என்பதனை ஊக்கப்படுத்தும் விதமாக, சில திட்டங்கள் மூலம் வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கினையும் வழங்கி வரப்படுகிறது.

ஆனால் இந்த மினிமம் பேலன்ஸினை பலரும் வைக்க முடியாமல், அபராதத்தினை கட்டுவதாக கூறியிருப்பதை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம்.

இப்படி இருக்கையில் பெரியவர்கள் நமக்கே வங்கி கணக்கினை துவங்கி, அதில் மினிமம் பேலன்ஸினை வைக்க முடியாமல் தவிக்கிறோம். இதில் குழந்தைகளுக்கு மினிமம் பேலஸ் வைத்துக் கணக்கு தொடங்குவது என்பது இயலாத காரியம். சொல்லப்போனால் இன்று நம்மில் பலரும் குழந்தைகளுக்கு எதற்காக வங்கிக் கணக்கு என்று விட்டு விடுகிறோம். ஆனால் குழந்தைகளுக்கும் வங்கிக் கணக்கு அவசியம். அது குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்காக பயன்படும் என்று சில வங்கிகள் குழந்தைகளுக்கு என ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டினை கொடுத்து வருகின்றன.

குழந்தைகளுக்கான திட்டம்

குழந்தைகளுக்கான திட்டம்

அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ஒரு அதிரடி திட்டத்தினை வைத்துள்ளது. அது குழந்தைகளுக்கான உதவும் நோக்கில் எஸ்பிஐ ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்டினை கொடுத்துள்ளது. அது SBI's Pehla Kadam and Pehli Udaan savings accounts ஆகும். அதாவது பெஹ்லாகதம் மற்றும் பெஹ்லிஉதான் என்ற கணக்குகள் தான் அது.

பல வசதிகள் உண்டு

பல வசதிகள் உண்டு

இந்த ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு, வெறும் வங்கிக் கணக்காக மட்டும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அது குழந்தைகளுக்கு சேமிக்கும் பழக்கத்தினை கற்றுக் கொடுக்கிறது. இதில் மினிமம் என்பது பேலன்ஸ் என்பது இல்லை. ஆக இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு சூப்பரான திட்டமாகவும் உள்ளது. இந்த குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கில் போட்டோ பதித்த ஏடிஎம் கார்டு, ஸ்வீப் வசதி மற்றும் இணைய வங்கி வசதி உள்ளிட்ட பல வசதிகளும் இந்த சேமிப்பு கணக்கில் உண்டு.

இது பழைய திட்டம் தான்

இது பழைய திட்டம் தான்

இந்த திட்டம் பழையது என்றாலும், இன்றும் பலருக்கு தெரியாது. உண்மையில் இந்த திட்டமானது குழந்தைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். ஆக குழந்தைகளுக்காக நீங்கள் வங்கி கணக்கு துவங்க நினைத்தால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியை விட, வேறு சிறந்த ஆப்சன் இருக்க முடியாது.

இந்த வங்கிக் கணக்கினை திறக்க தகுதி என்ன?

இந்த வங்கிக் கணக்கினை திறக்க தகுதி என்ன?

Pehla Kadam: பெஹ்லா கதம் குழந்தைகளுக்கான ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கினை துவங்க, மைனர் வயதுடைய எந்த குழந்தையும் இதற்கு தகுதியானவர்கள் தான். ஆனால் இந்த கணக்கினை பெற்றோர் அல்லது சரியான பாதுகாவலருடன் தான் திறக்க முடியும்.

Pehli Udaan: பெஹ்லா உதான் இந்த கணக்கினை 10 வயதிற்கு மேற்பட்ட மைனரின் பெயரில் துவங்க முடியும். அவர்கள் ஒரே மாதிரியாக கையெழுத்திட வேண்டும்.

 

எவ்வளவு பரிமாற்றம் செய்யலாம்?

எவ்வளவு பரிமாற்றம் செய்யலாம்?

பெஹ்லா கதம் மற்றும் பெஹ்லா உதான் ஆகிய இரு கணக்கிலுமே ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதே இணைய வங்கி அல்லது மொபைல் வங்கியில் 2000 ரூபாய் வரையிலும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இதன் மூலம் உங்களது பில்களை செலுத்திக் கொள்ள முடியும். அதோடு இண்டர்பேங்க்கிற்குள்ளேயே நெஃப்ட் வசதியும் உண்டு. மேலும் இதன் மூலம் டிடி-யும் எடுத்து கொள்ளலாம்.

 

இந்த கணக்கிற்கு வட்டி எவ்வளவு?

இந்த கணக்கிற்கு வட்டி எவ்வளவு?

பெஹ்லா கதம் மற்றும் பெஹ்லாஉதான் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக பணம் வைத்திருந்தால் ஆண்டுக்கு சுமார் 3.25 சதவீதம் வட்டி கிடைக்கும். இதுவே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு சுமார் 3% வட்டி கிடைக்கும்.

எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ள முடியும்

எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ள முடியும்

பெஹ்லா கதம் கணக்கில் மூலம் குழந்தைகளின் புகைப்படம் பொறிக்கப்பட்ட ஏடிஎம் கார்டு மூலம் 5000 ரூபாய் வரையில் எடுத்துக் கொள்ள முடியும். இந்த கார்டில் குழந்தையின் பெயர் மற்றும் பாதுகாவலர் பெயர் இருக்கும்.

இதே பெஹ்லாஉதான் கணக்கிலும் 5000 ரூபாய் வரையில் நீங்கள் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த ஏடிஎம் கார்டும் குழந்தையின் படத்துடன், அவரின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கும்.

 

செக் புக் வசதி உண்டு

செக் புக் வசதி உண்டு

பெஹ்லா கதம் கணக்கிற்கு செக் புக் வசதியும் உண்டு. இதற்கு பாதுகாவலரின் பெயர் மற்றும் குழந்தையின் பெயர் இருக்கும். இதில் 10 காசோலைகள் இருக்கும்.

இதுவே பெஹ்லாஉதான் கணக்கில் குழந்தை ஒரே மாதிரியாக கையெப்பம் போட முடிந்தால், தனிப்பயனாக்கப்பட்ட 10 காசோலைகள் வழங்கப்படும்.

 

இன்னும் பல வசதிகள் உண்டு

இன்னும் பல வசதிகள் உண்டு

மேற்கண்ட வசதிகள் தவிர தொடர் வைப்புகள், டெர்ம் டெபாசிட்டுள், DD,IMP உள்ளிட்ட பல வசதிகள் உண்டு. இதன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒரு கணக்கினை தொடங்கி, அதன் மூலம் மாதம் ஒரு தொகையினை சேமிக்க தொடங்கலாம். அதோடு இது வங்கி என்பதால் பாதுகாப்பானது.
ஆக உங்கள் குழந்தைகளுக்கு கிஃப்டாக கூட கொடுக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+