ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யும் போது கூடுதலாக பணத்தை செலுத்துகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும், புட் டெலிவரி சேவைகள் அறிமுகமான காலத்தில் 50 சதவீத தள்ளுபடி, 90 சதவீத தள்ளுபடி, பல நேரம் பலர் இலவசமாக உணவுகளை வாங்கிய காலம் கூட உண்டு. இப்படி இந்தியா முழுவதும் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களை சேர்த்துவிட்டது ஸ்விக்கி, சோமேட்டோ..
இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஸ்விக்கி, சோமேட்டோ மெல்ல மெல்ல தனது கட்டணத்தை உயர்த்த துவங்கியது. ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து பழகிவிட்டதால் கட்டணம் அதிகமானாலும் தொடர்ந்து வாங்கி வருகிறோம். தற்போது ஸ்விக்கி, சோமேட்டோ தளத்தில் வாங்கப்படும் உணவுக்கும், ஹோட்டலில் சென்று வாங்கப்படும் அதே உணவுக்கும் 30 -40 சதவீதம் வரையிலான கட்டண வித்தியாசம் இருக்கும்.

இந்த நிலையில் அனைத்து தரப்பு சிறு வணிகங்களையும் டிஜிட்டல் வர்த்தக துறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக மத்திய அரசின் DPIIT துறை 2021ல் Open Network for Digital Commerce (ONDC) என்ற தளத்தை அறிமுகம் செய்தது. இந்த தளம் தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாப்பி ஆக மாறியுள்ளது.
மத்திய அரசு உருவாக்கியுள்ள ONDC தளத்தில் McDonald's, Taco Bell, Behrouz Biryani, Wow Momo, Pizza Hut மற்றும் Cafe Coffee Day ஆகியவை இணைந்து தனது உணவுகளை விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
இந்த தளத்தில் இருந்து வாங்கும் அதே உணவை அதே உணவகத்தில் Swiggy மற்றும் Zomato மூலம் வாங்கும் போதும் விலை சுமார் 30-80 சதவீதம் வரையில் வித்தியாசம் வருகிறது. இது மட்டும் அல்லாமல் பல முன்னணி பிராண்டுகள் தள்ளுபடிகளும் கொடுக்கிறது.
ONDC தளத்தில் இருந்து உணவுகளை வாங்கும் போதும், Swiggy மற்றும் Zomato மூலம் வாங்கும் போதும் ஏற்படும் விலை வித்தியாசம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்க. இந்த டேட்டா-வை இன்க்42 திரட்டியுள்ளது.

ONDC தளத்தின் மூலம் உணவுகளை ஆர்டர் செய்ய வேண்டுமெனில் McDonald's, Taco Bell, Behrouz Biryani, Wow Momo, Pizza Hut மற்றும் Cafe Coffee Day போன்ற சில பிராண்டுகள் மட்டுமே தற்போது சேவையை துவங்கியுள்ளது. இதேபோல் ஒரு வாடிக்கையாளர் இந்த உணவகத்தில் இருந்து உணவை வாங்க வேண்டுமெனில் Paytm, Magicpin மற்றும் PhonePe ஆகிய செயலியில் இருந்து வாங்க முடியும்.
Paytm, Magicpin மற்றும் PhonePe ஆகிய 3 நிறுவனங்களும் ONDC தளத்தை பயன்படுத்தி தனது வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி சேவையை அளிக்கிறது. இதனால் Paytm, Magicpin மற்றும் PhonePe செயலியை பயன்படுத்துபவர்கள் ondc என் டைப் செய்தோ அல்லது FOOD என டைப் செய்து உணவுகளை ஆர்டர் செய்ய முடியும்.
ONDC platform பீட்டா டெஸ்டிங்-ஐ பெங்களூரில் சுமார் 16 பின்கோடு-க்கு மட்டுமே செய்து வெற்றி கண்ட நிலையில் தற்போது இந்தியாவில் பல நகரங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது.

ONDC platform-ல் இணைந்துள்ள உணவகங்கள் Paytm, Magicpin மற்றும் PhonePe செயலிகள் வாயிலாக ஆர்டர் பெற்று Shadowfax, Dunzo மற்றும் Loadshare போன்ற நிறுவனங்கள் இதை டெலிவரி செய்துவருகிறது. இப்படி தான் மளிகை பொருட்கள் முதல் மருந்து பொருட்கள் வரையில் டெலிவரி செய்யப்பட உள்ளது, 3 முனையில் இருக்கும் நிறுவனங்களும் ONDC platform-ல் இணைந்துள்ளதன் வாயிலாக இது சாத்தியமாகிறது.
இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இத்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. இந்திய ஈகாமர்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு உருவாக்கிய ஒரு தளம் தான் ONDC.
பெங்களூரில் மட்டுமே இயங்கி வந்த ondc தளம் தற்போது ஒரு நாளுக்கு 10000 ஆர்டர்களை பெற துவங்கியுள்ளது. Open Network for Digital Commerce என்பதன் சருக்கம் தான் இந்த ONDC, இத்தளத்தின் மூலம் சிறு ரீடைல் விற்பனையாளர்களையும் ஆன்லைன் விற்பனை தளத்திற்குக் கொண்டு வர முடியும் என்பது தான் மத்திய அரசின் அடிப்படை நோக்கம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications