சென்னை: ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்குவது என்பது சில சூழ்நிலைகளில் அவசியமான ஒன்றாக உள்ளது. உதாரணமாக, ஒரு பெண் திருமணமாகி வேறு ஊருக்கு சென்று விட்டால், அவருடைய பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். அதன் பின் திருமணமான கணவரின் குடும்பத்தில் உள்ள ரேஷன் கார்டில் அவருடைய பெயர் சேர்க்கப்படும். இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் செய்யலாம். ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்குவது எப்படி? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை வழங்குவதற்காக அரசால் வழங்கப்பட்ட ஆவணம் தான் ரேஷன் கார்டு. அந்த கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படம் இருக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இருக்கும். ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

குடும்ப உறுப்பினரின் பெயரை எப்போது நீக்க வேண்டும்?: குடும்ப உறுப்பினரின் பெயரை நீக்குவதற்கு இரண்டு நிகழ்வுகள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
1. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் செய்தவர்கள் தனியாக ஒரு குடும்பத்தை தொடங்க வேண்டி இருக்கும். அப்போது அவர்கள் புதிய ரேஷன் கார்டை விண்ணப்பிக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அவருடைய பெயரை நாம் நீக்கிக் கொள்ளலாம்.
2. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால் ரேஷன் கார்டின் மூலம் வழங்கப்படும் பலன்கள் அந்த இறந்தவருக்கு செல்லாது. அதனால் அவரின் பெயரை நீக்குவது அவசியம்.
முன்பெல்லாம் ரேஷன் கார்டில் பெயர் நீக்கவும் அல்லது பெயர் சேர்க்கவோ தாலுக்கா அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை, நீங்கள் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே, இந்த செயல்முறைகளை எளிதில் செய்து முடிக்கலாம்.
ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்குவது எப்படி?: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்க பின்பற்ற வேண்டிய ஸ்டெப்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்டெப் 1: முதலில் https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும். (உங்கள் மாநிலத்தைப் பொறுத்து இந்த இணையதள முகவரி மாறுபடும். மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரி தமிழ்நாட்டுக்கு உரியது).
ஸ்டெப் 2: "பயனாளர் நுழைவு" என்பதைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 3: உங்கள் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை என்டர் செய்து கேப்ட்ச்சா குறியீட்டை கொடுத்து "பதிவு செய்" என்பதைக் கிளிக் செய்யவும்
ஸ்டெப் 4: தற்போது உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும்.
ஸ்டெப் 5: OTP-ஐ என்டர் செய்து உள்நுழையவும். அதன் பின் குடும்பத்தில் உள்ள நபர்கள், உங்களுடைய குடும்ப அட்டை நம்பர், பெரியவர்களின் எண்ணிக்கை, சிறியவர்களின் எண்ணிக்கை, மற்ற குடும்ப அட்டை விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.
ஸ்டெப் 6: "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்பதன் கீழ் "குடும்ப உறுப்பினர் நீக்க" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: எதற்காக ரேஷன் கார்டில் இருந்து குடும்ப உறுப்பினரின் பெயர் நீக்கம் செய்யப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவும்.
ஸ்டெப் 8: திருமணம் ஆகி வீட்டில் இருந்து, ஒரு பெண் வேறு வீட்டிற்கு சென்று இருந்தால் அவருடைய பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். அதற்கான ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நீங்கள் அப்லோட் செய்யும் சான்றிதழ்கள் 1 MB அளவில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெப் 9: அதன் பின்னர் 1 முதல் 3 நாட்களில் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். இதனை நீங்கள் ஆன்லைனில் சரி பார்த்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications