வாகனம் வைத்திருப்பது என்பது அதை வாங்குவதோடு முடியும் ஒன்றல்ல. அதற்கு பராமரிப்பு செலவு செய்வது, அவ்வப்போது தேவையான அனுமதிச் சான்றுகளைப் பெறுவது என அதற்கு பின்பும் சில வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும். இதில் முக்கியமானவை 6 மாதங்களுக்கு ஒருமுறை பொல்யூஷன் சர்டிபிகேட், 1 ஆண்டுக்கு ஒருமுறை இன்சூரன்ஸ், மற்றும் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை RC புக் ரினிவல் ஆகியவற்றைப் பெற வேண்டும். எனவே இந்தப் பதிவில் RC புக் ரினிவல் செய்வது எப்படி? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
பெரும்பாலானவர்கள் 15 ஆண்டுகளுக்கு தங்கள் வாகனங்களை சொந்தமாக வைத்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற நபர்களுக்கு RC புக் ரினிவல் பற்றி பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், சிலர் தங்களுடைய வாகனங்களை 15 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற நபர்கள் வாகனத்தின் RC-ஐ எவ்வாறு புதுப்பிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். RC புக்கை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதுப்பிக்கலாம்.

RC புக்கை புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. ஒரிஜினல் ரெஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட்
2. படிவம் 25 (நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்டது)
3. வாகன இன்சூரன்ஸ்
4. மாசு கட்டுப்பாட்டின் கீழ் (PUC) சான்றிதழ்
5. பான் கார்டு ஜெராக்ஸ் அல்லது படிவம் 60 அல்லது படிவம் 61
6. இன்ஜின் மற்றும் சேஸ் நம்பர்
7. FC
8. சாலை வரி செலுத்தியதற்கான சான்று
9. வாகன உரிமையாளரின் கையொப்ப அடையாளம்
10. முகவரி சான்றிதழ்
11. அடையாளச் சான்றிதழ்
RC புக்கை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?:
ஸ்டெப் 1: வாகன பதிவு சான்றிதழை ஆன்லைனில் புதுப்பிக்க, Parivahan Sewa இணையதளத்திற்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Online Services" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: பின்னர் "Vehicle-Related Services" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: அடுத்து, மாநிலத்தைத் தேர்வு செய்யவும், ஏனெனில் அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் வாகன பதிவு சான்றிதழ் புதுப்பித்தல் சேவைகளை வழங்காது.
ஸ்டெப் 5: அடுத்து, அருகிலுள்ள RTO-ஐத் தேர்ந்தெடுத்து "Proceed" என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, லிஸ்ட்டில் இருந்து "RC-related Services" என்பதைத் தேர்ந்தெடுத்து பின்னர் "Renewal of Registration" என்பதைத் தேர்வு செய்யவும்.
ஸ்டெப் 6: இப்போது, RC புக் நம்பர் மற்றும் சேஸ் நம்பர் போன்ற கேட்கப்பட்ட விவரங்களை என்டர் செய்யவும். அடுத்து விவரங்களைச் சரிபார் என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பச் செயல்முறையை முடிக்கவும்.
RC புக்கை ஆஃப்லைனில் புதுப்பிப்பது எப்படி?: RC புக்கை ஆஃப்லைனில் புதுப்பிக்க, நீங்கள் முதலில் அருகிலுள்ள RTO-வைக் கண்டுபிடித்து, நேரில் பார்வையிட வேண்டும். RC புதுப்பித்தல் படிவத்தை வாங்கி, விவரங்களைப் பூர்த்தி செய்து, அவை சரியாக இருப்பதை உறுதிப்படுத்தவும். அடுத்து, RC புதுப்பித்தல் செயல்முறைக்கு கட்டணத்தைச் செலுத்தவும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications