இந்தியாவில் மோட்டார் வாகனத்தை ஓட்டும் ஒவ்வொரு நபரும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை (டிரைவிங் லைசென்ஸ்) வைத்திருப்பது கட்டாயம். ட்ராஃபிக் லைட் சிக்னல்களைக் கடைப்பிடிப்பது, உங்கள் வாகனத்திற்கான செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் வைத்திருப்பது போன்றே, உங்கள் வாகனத்தின் டிரைவிங் லைசென்ஸ்-ஐ புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம்.
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல் (Driving Licence Renewal): ஓட்டுநர் உரிமம் சில வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும், அதன்பின் அது காலாவதியாகிவிடும். அதனால் ஓட்டுநர் உரிமம் காலாவதி ஆவதற்கு முன்பே அதனை புதுப்பிக்க வேண்டும். நீங்கள் தமிழ்நாட்டில் டிரைவிங் லைசென்ஸ்-ஐ புதுப்பிப்பதற்கு இந்த கட்டுரையை முழுமையாக படியுங்கள். தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் டிரைவிங் லைசென்ஸ்-ஐ புதுப்பிப்பிக்கும் செயல்முறை எப்படி என்பதைப் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் புதுப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய ஸ்டெப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் 1: ஆர்டிஓவின் ( RTO ) அதிகாரப்பூர்வ ஆன்லைன் இணையத்தளமான பரிவாஹன் போர்ட்டலின் உள்ளே செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: ஆன்லைன் சர்வீசஸ் பட்டியலிலிருந்து "Driving Licence Services" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: அதில் உங்களுடைய மாநிலப் பெயரை "தமிழ்நாடு" என்று தேர்ந்தெடுக்கவும். பின்பு "Apply for DL Renewal" என்பதைத் தேர்வு செய்யவும் .
ஸ்டெப் 4: அதில் கொடுக்கப்படும் வழிமுறைகளைப் நன்கு படித்து, "Continue " என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: தற்போது நீங்கள் வேறு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப் படுவீர்கள். அதில் உங்கள் ஓட்டுனர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 6: கேப்ட்சா கோட்-ஐ (captcha code) என்டர் செய்து "Get DL Details" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 7: அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து, டிரைவிங் லைசென்ஸ்ஸின் வகை, மாநிலம், RTO ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து, "proceed" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 8: தற்போது " DL Renewal" எனும் சேவையை தேர்ந்தெடுத்து ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்.
ஸ்டெப் 9: பின், அவர்கள் கேட்கும் ஆவணங்களைப் அந்த போர்ட்டலில் பதிவேற்றி, "Submit" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 10: இறுதியாக உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண்னுடன் ஒப்புகை ரசீது அனுப்பப்படும். உங்களுடைய எதிர்கால குறிப்புக்காக அந்த ஒப்புகை ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அந்த ரசீதை குறிப்பிட்ட தேதியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம், நீங்கள் குடியிருக்கும் முகவரிக்கே அனுப்பப்படும். மேற்கூறிய ஆன்லைன் முறையைப் பயன்படுத்தி, உங்கள் ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications