தற்போது இளைஞர்கள் மத்தியில் வேலைக்கு செல்வதை தாண்டி தாங்களே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளும் இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறுவதை தான் ஊக்குவிக்கின்றன.
இவ்வாறு தொழில் தொடங்க வரக்கூடிய பலருக்கும் அவர்கள் நினைத்த அளவு வெற்றி கிடைப்பது கிடையாது. ஏனெனில் உடனடியாக வெற்றி கிடைக்க வேண்டும் என அவர்கள் அவசரப்படுகிறார்கள். ஒரு தொழில் தொடங்கி வெற்றி பெறுவதற்கு மார்வாடிகள் பின்பற்றும் ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதை தான் தற்போது விரிவாக காண போகிறோம்.

வினீத் கே என்பவர் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர். இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு பதிவில் எப்படி 1000 நாட்கள் என்ற ஒரு ஃபார்முலா 3 மருந்து கடைகளுக்கு ஓனராக மாற்றியது என விவரித்து இருக்கிறார். அந்த பதிவில் நான் இன்று ஒரு மருந்து கடை உரிமையாளரை சந்தித்தேன் அவர் ஒரு மார்வாடி . அவர் அண்மையில் தான் தன்னுடைய மூன்றாவது மருந்தகத்தை திறந்து இருக்கிறார். அவர் தன்னுடைய தொழில் ரகசியம் குறித்து சுவாரசியமான ஒரு தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார் என தெரிவித்திருக்கிறார்.
மார்வாடி பாரம்பரிய முறைப்படி எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் அந்த தொழிலுக்கு 1000 நாட்கள் கொடுக்க வேண்டும். இந்த 1000 நாளில் அந்த தொழில் வெற்றி அடையுமா? அடையாதா? என்பதை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும் என கூறினாராம். அந்த வகையில் இவர் 2010 ஆம் ஆண்டு முதன் முதலில் ஒரு மருந்தகத்தை மும்பையில் திறந்து இருக்கிறார். ஆனால் அவர் நினைத்தபடி அந்த மருந்தகம் செயல்படவில்லை. மருந்துகள் விற்பனை ஆகாமல் அப்படியே கிடப்பிலிருந்தன. எனவே மருந்தகத்தை மூடிவிடலாமா என்று யோசனை அவருக்கு வந்ததாம்.
அப்போது தங்களுடைய குடும்பத்தில் கூறப்படும் 1000 நாட்கள் ஃபார்முலாவை பின்பற்றலாம் என முடிவெடுத்தாராம். அதாவது 1000 நாட்கள் கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கு இந்த மருந்தகத்தை தொடர்ந்து நடத்துவது. அதன் பின்னர் பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு அவர் மருந்தகம் தொடங்கினார். அடுத்த 3 ஆண்டுகளில் படிப்படியாக மருந்து கடை பிரபலமாக தொடங்கி இருக்கிறது மக்கள் நம்பிக்கையோடு வந்து மருந்தை வாங்கியிருக்கின்றனர்.
இந்த ஃபார்முலாவின் படி மூன்று ஆண்டுகள் அதாவ்து 1000 நாட்கள் முடிவில் மருந்தக லாபம் தர தொடங்கி இருந்ததாம். இதனை அடுத்து 8ஆவது ஆண்டில் இரண்டாவது கடை, 15 ஆவது ஆண்டில் மூன்றாவது கடை என தற்போது மூன்று மருந்தகங்களின் உரிமையாளராக இருக்கிறார். அது தவிர தனக்கென சொந்தமாக இரண்டு வீட்டையும் வாங்கி வைத்திருக்கிறார் ,சொகுசு காரில் பயணம் செய்கிறாராம். ஒழுக்கமான முறையில் ஒரு விஷயத்தை பின்பற்றினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக அவர் இருக்கிறார் என வினீத் கூறியுள்ளார்.
ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெற பெரிய பெரிய எம்பிஏ படிப்பெல்லாம் தேவையில்லை, பொறுப்பு, முயற்சி, அந்த தொழில் தளைக்க சிறிது காலம் ஆகியவை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதையே இவரது கதை நமக்கு உணர்த்துகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications