சென்னை: ஓய்வூதிய திட்டமிடல் ஒருவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. காலப்போக்கில் பணவீக்கமும் உயர்ந்து வருகிறது. மேலும் சேமிப்பில் மட்டுமே வாழ்வது ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையைத் திறம்பட கழிக்க உதவுமா.. என்றால் கேள்வி குறிதான். இந்தப் பதிவில் ஓய்வுக்குப் பிறகு ரூ. 40,000 பென்ஷன் பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (NPS): நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்று சொல்லப்படுகிற தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது நீங்கள் ஓய்வு பெறும் காலத்தில் தேவையான வருமானத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இதன் மூலம் ஒருவர் ஓய்வு பெறும் காலத்தில் பாதுகாப்பான வருமானம் பெற முடியும். பணியாளர்களாக இருக்கும் நபர் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் வருமானம் நின்று போகும் நாட்களை திறம்பட கழிக்க முடியும்.

நேஷனல் பென்ஷன் ஸ்கீம் முதிர்ச்சியடையும்போது வரையறுக்கப்பட்ட வருமானம் வரும் என்று நம்மால் கூற முடியாது. ஏனெனில், இந்த கார்பஸ் முழுவதுமாக பத்திரங்கள், பங்குகள் ஆகியவற்றின் செயல்திறனை பொறுத்தது. ஒரு நிலையான வருமானத்தை ஓய்வு காலத்தில் பெறவேண்டும் என்றால், அதற்கு முதலீடு செய்ய வேண்டும். உங்கள் முதலீட்டுத் தொகை மற்றும் முதலீட்டின் கால அளவை பொருத்து ஓய்வுக்குப் பின் உங்களுடைய வருமானம் அமைகிறது.
NPS கூட்டு வட்டி முறையில் வருமானத்தை வழங்குகிறது. இதனால் நீண்டகால முதலீட்டின் மூலம் அதிக வருமானத்தை பெற முடியும். உதாரணமாக ஒருவர் 20 வயதில் தன்னுடைய முதலீட்டை தொடங்குகிறார் என்றால், அவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பெரிய கால அளவு இருக்கும். எனவே, சிறிய முதலீடுகள் கூட அவர்கள் ஓய்வு பெறும் போது கணிசமான கார்பஸை உருவாக்க உதவும்.
ஓய்வுக்குப் பிறகு ரூ. 40,000 ரூபாய் பென்ஷனாக பெறுவது எப்படி?: நீங்கள் 21 வயதில் NPS திட்டத்தில் மாதத்திற்கு ரூ. 3,475 ரூபாய் முதலீடு செய்ய தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த 39 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 60 வயதிற்குள் மாதம் ரூ. 40,000 பென்ஷனாகப் பெற முடியும்.
இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் உங்களுக்கு 10 % வருடாந்திர வருமானம் கிடைத்தால் மொத்தமாக ரூ. 2,00,19,029 கார்ப்பஸை உருவாக்க முடியும்.
NPS கால்குலேட்டர்:
வயது: 21 ஆண்டுகள்
ஓய்வு பெறும் வயது: 60
முதலீடு: ரூ 3,475 மாதத்திற்கு
வட்டி விகிதம்: 10 %
மொத்த கார்பஸ்: ரூ.2,00,19,029
அந்த கார்பஸிலிருந்து நீங்கள் 60 சதவீதத்தைப் பெற முடியும். ஓய்வு பெறும் வயதில் நீங்கள் திரும்பப் பெறக்கூடிய அதிகபட்ச வரம்பு 60 சதவீதம் ஆகும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications