பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் அனைத்து பணத் தேவைகளையும் பூர்த்தி செய்ய மாதாந்திர சம்பளத்தை மட்டுமே நம்பி இருப்பது பலன் அளிக்கும் ஒன்றாக இருக்காது. வேலை செய்து கொண்டே கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்று ஆசைப்படும் நபர்களுக்கு தான் இந்தப் பதிவு. நீங்கள் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால் கூடுதலாக சில மணி நேரம் மட்டுமே ஒதுக்கி சூப் தயாரித்து விற்பனை செய்யலாம்.
இந்தத் தொழிலை தொடங்குவதற்கு பெரிய முதலீடு ஒன்றும் தேவைப்படாது. ஆனால் நல்ல லாபத்தை பெற முடியும். காலையில் ஜிம்முக்கு செல்பவர்கள்.. வாக்கிங் செல்பவர்கள் என பலரும் மூலிகை சூப்புகளை வாங்கி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டே வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களைத் தேர்வு செய்து அங்கு சூப் தொழிலை தொடங்கலாம்.

அதுவும் மழைக்காலங்களில் இந்த தொழிலுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். குளிரான பருவ மழைக்காலங்களில் சூடாக சாப்பிடுவது பலருக்கும் வழக்கம். இந்த தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்க முடியும். ஒரு சிறிய கடை அல்லது வீட்டில் கூட சூப் தொழிலை செய்யலாம். முக்கியமாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 மணி நேரம் செலவிட்டாலே போதுமானது. உங்களுடைய வேலையை செய்து விட்டு இந்த வேலையை கூடுதலாக செய்து பணம் ஈட்ட முடியும்.
சூப் தொழிலை எப்படி தொடங்குவது?: எந்த ஒரு தொழிலானாலும் அதற்கு இடம் தான் முக்கியம். அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தைத் தேர்வு செய்யும்போது உங்கள் கடை அவர்கள் கண்ணில் படும். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் கடையை வாடகைக்கு எடுப்பது அதிக செலவுக்கு வழிவகுக்கும் என்றாலும்.. அதிக விற்பனைக்கும் வாய்ப்பளிக்கும். எனவே அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க பரபரப்பான பகுதிகளில் உங்கள் கடையை ஆரம்பிக்கவும்.
வெரைட்டி மற்றும் டெஸ்ட்: வெவ்வேறு சுவைகளைக் கொண்ட பலவிதமான சூப்களை வழங்கலாம். உதாரணமாக முருங்கைக்கீரை சூப், கொள்ளு சூப், காளான் சூப் என வெரைட்டியை அதிகரிக்கலாம். அதுவே மாலை நேரங்களில் சூப் தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்தால் நான்வெஜ் வெரைட்டிகளிலும் சூப் தயாரித்து விற்பனை செய்யலாம். சுவை கூடுதலாக இருக்க எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ளுங்கள். பலவிதமான வெரைட்டிகளில் சூப் வழங்குவதே அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
முதலீடு: முதலில் குறைந்த முதலீட்டில் தொடங்கி.. அதன் பிறகு நீங்கள் சம்பாதிக்கும் லாபத்தை பொறுத்து படிப்படியாக உங்கள் தொழிலை விரிவு படுத்துங்கள். முதலில் மூலப் பொருள்களுக்கு செலவு செய்வதில் கவனம் செலுத்துங்கள். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு குறைந்த விலையில் சூப்களை வழங்குங்கள். பின்னர் உங்கள் தொழில் வளரும் போது விலையை சரி செய்து கொள்ளலாம்.
தரம்: தரமான தயாரிப்புகளை விற்பனை செய்யுங்கள். சில கடைகளில் சூப் செய்வதற்கு பிரிசர்வேட்டிவ் உடன் கூடிய பவுடர்களை உபயோகிக்கின்றனர். பெரும்பாலும் மக்கள் பேக்கேஜ்டு உணவுகளை விட இயற்கை உணவுகளை தான் அதிகம் விரும்புகின்றனர். எனவே பிரஷ்ஷான காய்கறிகள் அல்லது கறிகளைக் கொண்ட சூப்களைத் தயார் செய்யுங்கள்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: ஒரு பவுல் சூப் தயாரிப்பதற்கு 10 முதல் 20 ரூபாய் வரை செலவாகலாம். அப்படியானால் அவற்றை நீங்கள் 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். மீண்டும் மீண்டும் வாடிக்கையாளர்களை உங்கள் கடையின் பக்கம் திசை திருப்ப சுவை மற்றும் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். ஆரம்பகட்டத்தில் குறைந்த விலையில் வழங்கும்போது அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியும். ஒரு மாதத்திற்கு 2000 பவுல்கள் விற்பனை செய்தால் மாதத்திற்கு 1 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications