டீக்கடை வைத்து ரூ. 1 லட்சம் லாபம்.. எப்படி தெரியுமா? முதலீடு முதல் லாபம் வரை முழு விவரம்!

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான நபர்களுக்கு ஒரு கப் சூடான டீ இல்லாத நாளை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு டீ குடிப்பதற்கு ஃபேன் பேஸ் உள்ளது. இன்று தெருவுக்கு தெரு டீக்கடைகள் வந்தாலும், அவற்றின் மவுசு குறைவதே இல்லை. எனவே, இந்தப் பதிவில் ஒரு டீக்கடையை தொடங்குவதற்கு தேவைப்படும் முதலீடு முதல் அவற்றில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது வரை அனைத்து தகவல்களையும் விரிவாக பார்ப்போம்.

வேலைக்கு செல்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் காலையில் ஒரு முறை, 11 மணி அளவில் ஒரு முறை, மாலை வேளையில் ஒரு முறை என குறைந்தது 3 வேலையாவது டீ குடித்தால் தான் பொழுதே ஓடும்.

 டீக்கடை வைத்து ரூ. 1 லட்சம் லாபம்.. எப்படி தெரியுமா? முதலீடு முதல் லாபம் வரை முழு விவரம்!

இதுபோன்ற நபர்கள் இருக்கும் வரை டீக்கடை வைத்திருப்பவர்களுக்கு லாபம் ஒருபோதும் குறையாது. பலருக்கும் தாமாக ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பட்ஜெட் காரணமாக அவற்றை தள்ளி வைத்துக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்ற சிறு தொழிலை ஆரம்பிப்பதன், மூலம் பெரிய முதலீடின்றி அதிக லாபம் பெற முடியும். ஒரு டீக்கடை வைக்க எவ்வளவு முதலீடு தேவை? என்பதைப் பின்வருமாறு பார்ப்போம்.

டீக்கடை அமைப்பதற்கான முதலீடு என்பது கடை அமைக்கும் இடம், கடையின் அமைப்பு மற்றும் வழங்கப்பட இருக்கும் உணவு வகைகள் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம்.

தள்ளுவண்டி கடை: குறைந்தது ரூ. 20,000 முதல் ரூ.30,000 இருந்தால் தள்ளு வண்டியை வாங்கிவிடலாம். தேவையான அடுப்பு, டீ கேன், போன்றவற்றை வாங்குவதற்கு ரூ. 5000 முதல் ரூ. 6000 வரை செலவாகலாம். ஏற்கனவே தள்ளுவண்டி கடை வைத்து வேறு தொழில் செய்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு வண்டி வாங்கும் செலவு மிச்சம். மற்ற பொருட்களுக்கு மட்டுமே செலவிட வேண்டி இருக்கும்.

சிறு டீ கடை: சிறு டீக்கடையை அமைப்பதற்கு வீட்டிலேயே இடம் இருந்தால், இடம் கூட தேடத் தேவையில்லை. அப்படி இல்லாதவர்கள் குறைந்த வாடகையில் ஏதேனும் கடையை பிடித்துக் கொள்ளலாம். அதற்கு மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை செலவாகலாம். இந்த வாடகை செலவு நீங்கள் தேர்வு செய்யும் இடத்தை பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இடத்தை பிடிக்கும் போது ஒரு முக்கியமான விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்றால் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே கடையை திறக்க வேண்டும். அப்பொழுது தான் வாடிக்கையாளர்களின் கண்ணில் உங்களுடைய கடை படும்.

அதுவே பெரிய ஃபேஷன் டீக்கடை அமைக்க வேண்டும் என்றால் குறைந்தது ரூ. 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை செலவாகலாம். சரி டீக்கடையின் லாபத்தை பார்ப்போம்.

டீக்கடையில் வரக்கூடிய லாபம் விற்பனையின் அளவை பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக ஒரு கப் டீ-யின் விற்பனை விலை ரூ.10 என்று வைத்துக் கொள்வோம். அதில் லாபமாக 50 சதவீதம் கிடைக்கிறது. அதாவது 10 ரூபாயில் 5 ரூபாய் லாபமாக கிடைக்கிறது. இந்த கணக்குப்படி ஒரு நாளைக்கு 300 டீ விற்பனை செய்யப்பட்டால், ரூ. 3000 கிடைக்கும். அதில் லாபம் ரூ. 1500 ஆக இருக்கும்.

ஒரு நாளைக்கு லாபம் ரூ. 1500 எனில், ஒரு மாதத்திற்கு ரூ. 45,000 வரை உங்களால் சம்பாதிக்க முடியும். இது டீ விற்பனைக்கான லாபம் மட்டுமே. அதுவே மற்ற பொருட்களையும் சேர்த்து உங்கள் லாபத்தை யோசித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியருக்கு கூட அவ்வளவு சம்பளம் கிடைக்காது. சர்வ சாதாரணமாக ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூ. 1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும்.

சில இடங்களில் ஒரு டீ-யின் விலை ரூ. 12 முதல் ரூ. 15 ரூபாய் வரை கூட விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் பல்வேறு இடங்களின் அமைப்பை பொறுத்து மாறுபடும். உங்களுடைய விற்பனை அதிகரித்தால், இதைவிட அதிக லாபத்தை உங்களால் ஒரு நாளைக்கு பெற முடியும்.

இது வெறும் டீ விற்பனைக்கான லாபம் மட்டுமே. நீங்கள் மற்ற பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்வதை யோசித்துப் பாருங்கள். உதாரணமாக பஜ்ஜி, பக்கோடா, சமோசா, சாண்ட்விச் போன்ற பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்தால் லாபம் இன்னும் அதிகமாக இருக்கும்.

வெற்றிகரமாக டீக்கடை நடத்துவதற்கான சில உதவி குறிப்புகள்:

இடம்: நெரிசலான பகுதி, அலுவலகங்களுக்கு அருகில், கல்லூரிகளுக்கு அருகில் என நல்ல இடத்தைத் தேர்வு செய்து தொழிலை தொடங்குங்கள்.

பட்ஜெட்: தொழில் ஆரம்பிக்கும்போது பிறரை விட தரமானதாகவும், பட்ஜெட் விலையிலும் அறிமுக செய்ய வேண்டும். இது சாமானிய மக்களையும், உங்களுடைய கடையை நோக்கி ஈர்க்க வைக்கும்.

பல்வகைப்பட்ட உணவுகள்: டீ, காபி, பூஸ்ட் போன்றவற்றை விற்பனை செய்யும் போது பஜ்ஜி, பக்கோடா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளையும் சேர்த்து வழங்குங்கள்.

ஆனால் ஸ்நாக்ஸ் வகைகளை வழங்கும்போது, சுத்தமான எண்ணெயை பயன்படுத்துங்கள். குறைந்த அளவு எண்ணையை ஒரு நாளைக்கு உபயோகப்படுத்தினால், அன்றைய தினமே அவை தீர்ந்துவிடும். மறுநாள் மீண்டும் வேறு எண்ணெயை பயன்படுத்தி, இதுபோன்ற பொருட்களை தரமானதாக வழங்கலாம்.

உங்களுடைய தொழில் லாபம் பெற இது போன்ற சில யுக்திகளையும் பின்பற்றுவது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லது.

சுகாதாரம்: கடை நடத்துவோருக்கு சுகாதாரத்தை பேணிக்காப்பது அவசியமான ஒன்று. நீங்கள் வழங்கும் பொருட்கள் முதல் உங்களுடைய உடையிலிருந்து அனைத்தையும் சுத்தமாக வைத்திருங்கள். கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு விற்பனை செய்யுங்கள்.

மேற்கண்ட, அனைத்து தகவல்களும் ஒரு டீக்கடை நடத்தி வரும் லாபம் மற்றும் அதற்கு தேவையான முதலீடுகளின் தோராயமான கணக்கீடாகும். இதே போன்ற தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற ஆசைப்பட்டால் உங்களுடைய சுய விருப்பத்தின் பேரில் தொழிலை தொடங்கவும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+