குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்குத்தான் ஐஸ்கிரீம் பிடிக்காது. அனைவருக்குமே பிடித்த ஒரு உணவுப்பொருள் என்றால் அது ஐஸ்கிரீம்கள் தான். அதுவும் கோடை நாட்களில் ஐஸ்கிரீம் நிறுவனங்கள் மற்றும் குளிர்பான நிறுவனங்களுக்கு கொண்டாட்டம் தான். வெயிலில் வெளியே சென்று விட்டாலே நமக்கு ஏதாவது குளுகுளுவென சாப்பிட்டால் இதமாக இருப்பது போல தோன்றும் அல்லவா? அதுவும் தற்போது திருமண விழாக்களிலும் ஐஸ்கிரீமை சேர்த்து வைப்பது வழக்கமான நடைமுறையாகி விட்டது.
இதிலிருந்தே ஐஸ்கிரீம்களுக்கு இருக்கும் ஃபேன் பேஸை நாம் தெரிந்து கொள்ளலாம். எனவே சுய தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருப்பவர்கள் ஐஸ்கிரீம் கோன் மற்றும் கப்புகளை விற்பனை செய்யலாம். இதன் மூலம் வீட்டிலிருந்து 1 நாளைக்கு 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை லாபம் பெற முடியும்.

வாடிக்கையாளர் தேவையை உணர்ந்து உங்களுடைய தொழில் இருக்க வேண்டும். ஐஸ்கிரீம் கப் மற்றும் கோன் தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப் பொருட்கள், செலவுகள், சந்தை விலைகள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஐஸ்கிரீம் கோன்கள் மற்றும் கப்களை தயாரிக்க தேவையான பொருட்களான மைதா, சர்க்கரை, நெய், பால் மற்றும் இதர பொருட்களையும் ஆராயுங்கள். இவற்றைப் பொறுத்து தான் உங்களுடைய பொருளின் தரம் இருக்கும். தரத்தில் எந்தவித குறைவும் இல்லாமல்.. அதே நேரத்தில் விலை குறைவான இடங்களில் பொருட்களை வாங்குங்கள்.
தேவையான பொருட்களை மொத்தமாக ஸ்டாக் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் எந்த ஒரு பொருளானாலும் மொத்தமாக வாங்கும்போது விலை சற்று குறையும். இதன் மூலம் உங்களுடைய லாபம் அதிகரிக்கலாம். அதன் பின் கோன்கள் மற்றும் கப்களை செய்த பிறகு பேக்கேஜிங் செலவுக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஆகலாம். இது தவிர மின்சாரம், எலக்ட்ரிசிட்டி, தண்ணீர், பணியாளர்களுக்கான சம்பளம் போன்ற இதர செலவுகளும் இதில் அடங்கும்.
சிறு தொழில் தொடங்க வங்கிகள் கடன் வழங்குகின்றன. நுன்கடன் நிறுவனங்கள் மூலமாகவும் நீங்கள் உங்கள் நிறுவனத்திற்கு தேவையான முதலீட்டைப் பெற முடியும். எந்த ஒரு உணவுப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனமாக இருந்தாலும் அதற்கு FSSAI உரிமம் முக்கியம்.
எனவே ஐஸ்கிரீம் கோன் மற்றும் கப் தயாரிக்கும் நிறுவனத்தை அமைக்க விரும்பினால் நீங்கள் FSSAI உரிமம் பெற வேண்டும். இது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அவற்றுடன் பஞ்சாயத்து அனுமதியும்.. ஒரு வேளை நகரத்தில் வசித்தால் நகராட்சி அனுமதியும் பெற்றிருக்க வேண்டும்.
ஐஸ்கிரீம் கோன் செய்யும் இயந்திரம் நிமிடத்திற்கு 10 முதல் 30 கோன்களை உற்பத்தி செய்கிறது. இதன் உற்பத்தி செலவு ஒரு கோனுக்கு 50 பைசா முதல் 2 ரூபாய் வரை இருக்கும். சந்தையில் ஒரு கோனை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். அதே போல ஐஸ்கிரீம் கப் தயாரிக்கும் போது கப் ஒன்றுக்கு 75 பைசா முதல் 2 ரூபாய் வரை செலவாகலாம். இவற்றை சந்தையில் 3 ரூபாய் வரை முதல் 6 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
அதுவே ஒரு கோன் 2 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்டால் அவற்றை சந்தையில் 5 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஒரு கோனுக்கு 3 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். மேலும் ஒரு கப்பை 2 ரூபாய் செலவில் தயாரித்தால்.. அவற்றை 6 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். அதாவது ஒரு கப்புக்கு 4 ரூபாய் லாபம் கிடைக்கும். இப்படி ஒரு நாளைக்கு 1000 கோன்கள் அல்லது கப்களை விற்பனை செய்தால் இதன் மூலம் 1000 முதல் 3000 ரூபாய் வரை லாபம் பெறலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications