பொதுவாக தொழில் தொடங்க விரும்புவர்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கும் தொழிலை தொடங்கத்தான் விரும்புவார்கள். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு, குறைந்த முதலீட்டில் தயாரிக்கும் பொருள் உள்ளது. மேலும் அந்த பொருள் வீடு, கோயில், கடை , ஹோட்டல் மற்றும் ஹாஸ்பிட்டல் என எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பொருளை தயாரிக்க மத்திய அரசும் உதவுகிறது. நம்ம தீப்பெட்டி தாங்க அந்த பொருள். நெருப்பை உருவாக்க தீக்குச்சிகள் பயன்படுத்தப்டுகின்றன. இதற்கான தேவை எப்போதும் சந்தையில் இருந்துக்கொண்டே இருக்கும். இதனால் தைரியமாக தீப்பெட்டிகள் தயாரிப்பு தொழில் இறங்கலாம்

தீப்பெட்டி தொழிலை தொடங்க மத்திய அரசும் உதவுவதால் தொழிலையும் எளிதாக தொடங்கலாம். எந்தவொரு தொழிலை தொடங்க வேண்டுமானாலும் முதலில் இடம் வேண்டும். இந்த தொழிலை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 1,500 சதுர அடி தேவைப்படும்.
தீப்பெட்டி தயாரிப்பு தொழிலை தொடங்க, மரம், அட்டை, ரசாயனங்கள் மற்றும் (சிவப்பு பாஸ்பரஸ்) பிற பொருட்கள், காகிதம் மற்றும் பேக்கிங் பொருட்கள் ஆகிய அடிப்படை மூலப்பொருட்கள் தேவைப்படும். மேலும் உங்களின் வணிக அளவை பொறுத்து எந்திரங்கள் தேவைப்படும். சிறிய அளவில் தீப்பெட்டி ஆலையை தொடங்க முடிவு செய்தால், ஆட்டோமேடிவ் எந்திரத்தை விட தேவைப்படும் எந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் (கே.வி.ஐ.சி.) மதிப்பீட்டின்படி, தீப்பெட்டி தொழில் தொடங்க சுமார் ரூ.24.61 லட்சம் தேவைப்படும். உங்க சொந்த பணம் ரூ.2.46 லட்சத்தை மூலதனமாக போடுங்க. ரூ.15.55 லட்சம் கடன் வாங்கி முதலீடு செய்யுங்க. இது தவிர ஒர்க்கிங் கேபிடலாக ரூ.6.60 லட்சம் தேவைப்படும்.
தொழில் தொடங்குவதற்காக பிரதமர் மந்திரி முத்ரா திட்டத்தின்கீழ் வங்கிகளில் நீங்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனை பெற எந்த பிணையமும் தேவையில்லை என்பதால், எந்த பிரச்சினையும் இல்லாமல் பணம் வழங்கப்படும். தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் தொழிலை தொடங்கலாம்.
நீங்கள் உற்பத்தி செய்த தீப்பெட்டிகள் தனித்துவமான தரத்தை கொண்டிருந்தால் மற்றும் நீங்கள் அதை நன்றாக விளம்பரம் செய்தால் இந்த வணிகத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். உங்கள் தயாரிப்புகளை அருகிலுள்ள சந்தைகள், கடைகள், மற்றும் பிற சில்லரை விற்பனையாளர்களை தொடர்பு கொண்டு விற்பனை செய்யலாம். மேலும் ஆன்லைன் வர்த்தக தளங்களிலும் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம்.
உங்கள் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றால் காதி மதிப்பீட்டின்படி, முதல் ஆண்டில் உங்களுக்கு நிகர லாபமாக ரூ.2.25 லட்சம் கிடைக்கும். இரண்டாவது ஆண்டில் நிகர லாபம் ரூ.3.57 லட்சமாகவும், மூன்றவாது ஆண்டில் ரூ.6.63 லட்சமாகவும், நான்காவது ஆண்டில் ரூ.9.89 லட்சமாகவும், ஐந்தாவது ஆண்டில் ரூ.13.42 லட்சமாகவும் இருக்கும். எனவே குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தீப்பெட்டி தொழிலை தைரியமாக தொடங்கி வெற்றி பெறலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications