இதற்காக இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்.. வீட்டில் இருந்தே செய்யலாம்..!

பொதுவாக பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். ஆன்லைனில் எப்படி செக்கினை ஸ்டாப் செய்வது? எப்படி புதியதாக அப்ளை செய்வது என்று?

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் செக் புத்தகம் என்பது வங்கி பரிமாற்றத்தின் அடிப்படையில் தான் கொடுப்பார்கள். அதோடு இதற்காக வங்கியில் சென்று எழுதிக் கொடுக்க வேண்டும்.

ஆனால் இன்றோ அப்படியில்லை. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் செய்யலாம். அந்தளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய முன்னணி வங்கியாளரான எஸ்பிஐ பல தொழில் நுட்பங்களை தனது வங்கி சேவையில் புகுத்தியுள்ளது. அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருப்பது, செக்கினை எப்படி ஆன்லைனிலும், ஆப் லைனிலும் ஸ்டாப் செய்வது? என்று தான்.

யோனோ ஆப்பில் எப்படி ஸ்டாப் செய்வது?

யோனோ ஆப்பில் எப்படி ஸ்டாப் செய்வது?

குறிப்பாக யோனோ ஆப்பினை பயன்படுத்தி எப்படி செக்கினை ஸ்டாப் செய்யலாம். வாருங்கள் பார்க்கலாம். நீங்கள் யோனோ ஆப்பினை பயன்படுத்தினால், அதனை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் Requests என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Cheque book என்பதை கிளிக் செய்யவும். அதில் stop cheque or Revoke stop cheque என்பதை கிளிக் செய்யவும்.

விவரங்கள் பதிவிட வேண்டும்

விவரங்கள் பதிவிட வேண்டும்

அதன் பிறகு அக்கவுண்ட் நம்பர் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு stop cheque விவரங்களை பதிவிட வேண்டும். அதில் ஆரம்ப செக் எண்னையும், முடிவு செக் நம்பரையும் பதிவிட வேண்டும். அதோடு ஒரு செக் லீப் எனில் நார்மல் எனவும், இதே பல செக்குகள் என்றால் மல்டி என்பதையும் மாற்ற வேண்டும். அதோடு எதற்காக அதனை ஸ்டாப் செய்கிறீர்கள் என்பதையும் மென்சன் செய்ய வேண்டும். ஆக சரியான பதிலை கொடுத்த பிறகு சப்மிட் செய்யவும். அதன் பிறகு உங்களுக்கு கன்பர்மேஷன் மெசேஜ் வரும்.

செக்கினை ரத்து செய்வது?

செக்கினை ரத்து செய்வது?

இதற்காகவும் எஸ்பிஐயின் யோனோ ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் Requests என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Cheque book என்பதை கிளிக் செய்யவும். அதில் Revoke stop check என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு அக்கவுண்ட் நம்பரை கொடுத்து, உங்களது செக் லீப்பினை விவரங்களை கொடுங்கள். அதன் பிறகு சப்மிட் செய்யுங்கள். இதனை சப்மிட் செய்த பிறகு உங்கள் காசோலையை ரத்து செய்தலுக்கான உறுதியும் கிடைக்கும்.

இணைய வங்கி மூலம் எப்படி ஸ்டாப் செய்வது?

இணைய வங்கி மூலம் எப்படி ஸ்டாப் செய்வது?

எஸ்பிஐயின் https://www.onlinesbi.com/ என்ற இணையத்தில், பர்சனல் பேங்கினை லாகின் செய்து கொள்ளுங்கள். இதில் Request & Enquiries என்பதை கிளிக் செய்யவும். அதில் ஸ்டாப் பேமெண்ட் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு செக் நம்பர், தேதி, பெயர் உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும். இதன் பிறகு டெர்ம்ஸ் & கண்டிசன்ஸை ஒகே என கொடுத்து சப்மிட் செய்யவும்.

ஆப் லைனில் எப்படி ஸ்டாப் செய்வது?

ஆப் லைனில் எப்படி ஸ்டாப் செய்வது?

மேற்கண்ட ஆப்சன்களை பயன்படுத்த இயலாது எனில், அதன் பிறகு நீங்கள் வங்கிக்கு நேரிடையாக சென்று ஸ்டாப் செய்து கொள்ளலாம். வங்கிக்கு சென்று இதற்காக சம்பந்த செக்கின் விவரங்களை கடிதமாக கொடுக்கலாம். இதற்காக வாடிக்கையாளருக்கு கட்டணம் விதிகப்படலாம். இது உங்களது செக்கின் மதிப்பினை பொறுத்து இருக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+