இந்தியாவில் காளான் வளர்ப்பு மிக வேகமாகப் பிரபலமடைந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. மேலும், இது ஒரு லாபகரமான தொழிலாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அவற்றின் வளமான ஊட்டச்சத்து மற்றும் சமையல் பல்துறைத்திறன் காரணமாக, காளான்கள் பல வீடுகளில் ஒரு பிரதான உணவாக மாறிவிட்டது. இந்த காளான் வளர்ப்பதற்கு ஏக்கர் கணக்கில் விவசாய நிலமோ அல்லது அதிக முதலீடுகளோ தேவையில்லை. உங்கள் வீட்டில் இருக்கும் வசதியை வைத்தே காளான் பண்ணை தொடங்க முடியும்.
இந்தியாவை பொறுத்தவரை முதன்மையாக 3 வகையான காளான்கள் பயிரிடப்படுகிறது. பட்டன் காளான்கள், சிப்பி காளான்கள் மற்றும் பால் காளான்கள். பட்டன் காளான்கள் என்பது குளிர்ந்த காலநிலையில் செழித்து வளரக் கூடியது. சிப்பி மற்றும் பால் காளான்கள் வெப்பமான சூழ்நிலையில் செழித்து வளரக் கூடியவை. இதனால் உங்கள் உள்ளூர் வானிலைக்கு ஏற்ற வகையை நீங்கள் எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.

மேலும், உங்களின் வெற்றிகரமான காளான் வளர்ப்புக்கு உரம் என்பது அடித்தளமாகும். அதேபோல், திரவம் குவிவதைத் தடுக்க, சரியான வடிகால் வசதியுடன் கூடிய தட்டையான தட்டுகளில் திறந்தவெளியில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. மழையில் இருந்து உரத்தைப் பாதுகாக்க, மூடப்பட்ட அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியை உறுதி செய்ய வேண்டும். இயற்கை அல்லது செயற்கை உரங்களை காளான் வளர்ப்புக்கு பயன்படுத்தலாம்.
செயற்கை உரம் என்பது கோதுமை வைக்கோல், தவிடு, யூரியா, ஜிப்சம் மற்றும் கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் அல்லது அம்மோனியம் சல்பேட் ஆகியவற்றை நன்கு கலந்து, காளான் மீது தெளிக்கலாம். இயற்கை உரங்களை பொறுத்தவரை கரிம விவசாயத்திற்கு ஏற்றது, கோதுமை வைக்கோல் மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை புதிய குதிரை சாணம் மற்றும் கோழி எருவுடன் இணைத்து பயன்படுத்தலாம். வைக்கோலின் மீது தண்ணீரைத் தெளித்து, நன்கு கலந்து நொதிக்க விட வேண்டும்.
காளான் வளர்ப்புக்கு 10x10 அடி அளவுள்ள அறை அல்லது குடில் போதுமானது. காளான்கள் வளர அதற்கு ஏற்ற வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உள்ள ஒரு இடம் அல்லது அறையை அமைப்பது அவசியமாகும். காளான் விதைகளை சரியான முறையில் தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது 23 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராகிவிடும். அதேபோல், இந்த காளான் வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு சார்பில் மானியங்களும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு யூனிட்டிற்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஹரியானாவின் "மஷ்ரூம் லேடி" என்று அழைக்கப்படும் டாக்டர் சோனியா தஹியா, காளான் வளர்ப்பு குறித்து ஜூலை 5 மற்றும் 6ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்க உள்ளார். இவர், காளான் பண்ணை நடத்தி வருகிறார். காளான் உற்பத்தியில் ஒரு பெரிய வணிகத்தை நிறுவியதோடு, கிராமப்புற பெண்களுக்கும் வேலைவாய்ப்பை கொடுத்து வருகிறார். மாதந்தோறும் 9 முதல் 10 டன் காளான்களை உற்பத்தி செய்து அசத்தி வருகிறார். இதன் மூலம் அவர், மாதம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கிறார்.
கொரோனா முழு ஊரடங்கின்போது, வீட்டிலிருந்த சோனியா தஹியா, தனது கணவர் உதவியுடன் காளான் பண்ணை அமைத்தார். இவர், ஏராளமான விமர்சனங்கள், தோல்வியை சந்தித்து தற்போது வெற்றிப் பெண்மணியாக திகழ்கிறார். தற்போது நாளொன்றுக்கு 50 கிலோ காளான்கள் வரை உற்பத்தி செய்கிறார். இதனை உணவு வழங்குபவர்கள், சமையல்காரர்கள், சிறிய உணவகங்கள், தாபாக்கள் மற்றும் திருமண விருந்துகளுக்கு கொடுத்து வழக்கமான தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்.
இந்நிலையில், டாக்டர் சோனியா காளான் வளர்ப்பு குறித்து ஆன்லைனில் பயிற்சி அளிக்க உள்ளார். ஜூன் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் இந்த பயிற்சி நடைபெறும் என்றும் இதில் ஆர்வமுள்ளவர்கள் https://lnkd.in/g3irS-NS மற்றும் +91 85848 71426 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயிற்சியானது பிற்பகல் 12 மணியில் இருந்து 2 மணி வரை நடைபெறவுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications