பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிஜிட்டல் இந்தியா என்ற சேவை தற்போது இந்திய மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.
வங்கிகளுக்கு சென்று பண பரிமாற்றம் செய்த காலம் போய், தற்போது ஸ்மார்ட்போன் மூலமே பண பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் இருந்தால் வீட்டில் இருந்துகொண்டே உலகில் எந்த மூலைக்கும் பண பரிமாற்றம் செய்யலாம் என்ற வசதி வந்துவிட்டது
ஆனால் அதே நேரத்தில் பட்டன் போன் வைத்திருப்பவர்களும் UPI மூலம் பண பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.
UPI UPI123பே சேவை
நாட்டில் பண பரிவர்த்தனைகளை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கியால் UPI வசதி தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணமில்லா பரிவர்த்தனைகள் UPI மூலம் செய்யப்படுகின்றன. UPI வசதியை பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட்போன் மற்றும் இணையம் தேவை. ஆனால் ஸ்மார்ட்போன் இல்லாமல் வெறும் பட்டன் போனில் UPI வசதியை பயன்படுத்தும் வழிமுறைகளை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கி UPI 123பே என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
UPI பரிவர்த்தனைகள்
UPI 123பே மூலம், மக்கள் இப்போது அனைத்து வகையான UPI பரிவர்த்தனைகளையும் தங்கள் பட்டன் போன்களின் உதவியுடன் பணப்பரிமாற்றம் செய்ய முடியும். அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தற்போது பார்ப்போம்
வழிமுறை
முதலில் உங்கள் வங்கிக் கணக்கை UPI 123பே வசதியுடன் இணைக்க வேண்டும். வங்கிக்கணக்கை இணைக்க முதலில் ஐவிஆர் எண்ணை (08045163666, 08045163581 அல்லது 6366200200) அழைக்க வேண்டும். இதனையடுத்து உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி UPI பின் நம்பரை உருவாக்க வேண்டும்.
IVR எண்
இந்த செயல்முறைக்குப் பிறகு, IVR எண்ணை அழைப்பதன் மூலம், பணப் பரிமாற்றம், LPG பில் அல்லது மின்சாரக் கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளின் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும். நீங்கள் யாருக்கு உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் அனுப்ப விரும்புகிறீர்களோ அந்த நபரின் போன் எண் மற்றும் சேவையை தேர்வு செய்து, பின்நம்பரை உள்ளிட வேண்டும்.
பணம் பரிமாற்றம்
இதனையடுத்து உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு நீங்கள் யாருக்கு பணம் அனுப்பினீர்களோ அவருடைய வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications