சென்னை: வாட்ஸ் அப்பில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் என அனைவரோடும் தொடர்பில் இருக்கிறோம். ஆனால் போன் நம்பரை மாற்றும் சூழ்நிலை ஏற்படும் போது, வாட்ஸ் அப் சாட் ஹிஸ்டரி என்னவாகும்.. என்ற கவலை அனைவருக்கும் இருக்கும். கவலைப்பட வேண்டாம்! வாட்ஸ் அப்பில் உள்ள அற்புதமான அம்சத்தை கொண்டு உங்களுடைய சாட்டிங் ஹிஸ்டரி, குரூப் சாட் மற்றும் அக்கவுண்ட் விவரங்களை புதிய போன் நம்பருக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.
முக்கியமான பைல்கள், டாக்குமென்ட்கள் மற்றும் ஆடியோ ரெக்கார்டுகளை வாட்ஸ் அப் நம்பரை மாற்றும் பொழுது இழக்க நேரிடுமோ என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பழைய வாட்ஸ் அப் நம்பரில் உள்ள சாட்களை புதிய வாட்ஸ் அப் நம்பருக்கு எந்த ஒரு மாற்றமும் இன்றி நகர்த்தலாம்.

குறிப்பு: இந்த செயல்முறைக்கு, பழைய போனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். புதிய போனுக்கு மாறுகிறீர்கள் என்றால், பழைய போனில் லோக்கல் பேக்கப் (local backup) எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 1: உங்கள் பழைய மொபைல் போனைப் பயன்படுத்தி வாட்ஸ் அப்-ஐ திறக்கவும்.
ஸ்டெப் 2: ஆண்ட்ராய்டு மொபைலில் வாட்ஸ் அப்பை திறந்தவுடன் மேலே வலது பக்க மூலையில் மூன்று புள்ளிகள் இருக்கும், அதனை கிளிக் செய்யவும். அதில் "Settings" என்பதைக் கிளிக் செய்யவும். ஐபோனில் "Settings" கீழ் வலது மூலையில் இருக்கும்.
ஸ்டெப் 3: தற்போது "Account" என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் "Change Number" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 4: தற்போது ஸ்கிரீனில் காண்பிக்கும், தகவல்களைக் கவனமாகப் படிக்கவும். போன் நம்பரை மாற்றுவதன் காரணமாக, உங்களுடைய அனைத்து அக்கவுண்ட் விவரங்கள், சாட் ஹிஸ்டரி மற்றும் செட்டிங்ஸ் புதிய போனுக்கு மாற்றப்படும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது,
ஸ்டெப் 5: "Next" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், உங்களுடைய புதிய மற்றும் பழைய நம்பரை பதிவிடுமாறு கேட்கும். நீங்கள் உங்கள் நம்பரை என்டர் செய்த பிறகு, உங்கள் நம்பர் சரிபார்க்கப்படும்.
ஸ்டெப் 6: உங்கள் நண்பர்களுக்கு, நீங்கள் போன் நம்பர் மாற்றியதை எப்படித் தெரிவிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும். வாட்ஸ் அப்பில் இதற்கு 3 வழிகள் உள்ளன.
அனைத்து தொடர்புகளுக்கும் தெரிவித்தல் (Notify All Contacts): உங்கள் காண்டாக்ட்டில் (Contacts) உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் தானாகவே தகவல் அனுப்பப்படும்.
சாட்டிங் செய்தவர்களுக்கு தெரிவித்தல் (Notify People I've chatted with): நீங்கள் மெசேஜ் அனுப்பிய அல்லது பெற்ற நபர்களுக்கு மட்டும் தகவல் அனுப்பப்படும்.
தனிப்பட்டத் தேர்வு (Custom): எந்தெந்த தொடர்புகளுக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்பதைத் தனித்தனியாக தேர்வு செய்யலாம்.
ஸ்டெப் 7: இறுதியில் Done என்பதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications