ரெப்போ வட்டி விகித உயர்வு... ஹோம் லோன் வாங்கியவர்கள் உடனே இதை செய்யுங்க..!

இந்திய ரிசர்வ் வங்கி நேற்று கடன் வட்டி விகிதத்தை மேலும் 50 புள்ளிகள் உயர்த்தியதை அடுத்து வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் கூடுதல் தவணைத்தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹோம் லோன் வாங்கியவர்கள் கூடுதல் தவணை காரணமாக தங்களுடைய கடனை குறைந்த வட்டியில் உள்ள வங்கிகளுக்கு மாற்றம் செய்து கொண்டால் அவர்களுடைய சுமை ஓரளவு குறையும்.

இந்த நிலையில் ஒரு வங்கியில் வாங்கிய ஹோம் லோனை, இன்னொரு வங்கிக்கு மாற்ற வேண்டியது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

வீட்டுக்கடன் மாற்றம்

வீட்டுக்கடன் மாற்றம்

அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக உங்கள் வீட்டுக்கடன் தவணைகள் செலுத்துவது கடினமாக இருந்தால், குறைந்த வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை கொண்ட வங்கிக்கு மாற்றம் செய்வது நல்ல யோசனையாக இருக்கும். .

 வீட்டுக் கடன் இருப்புப் பரிமாற்றம்

வீட்டுக் கடன் இருப்புப் பரிமாற்றம்

வீட்டுக் கடனின் நிலுவைத் தொகையை ஏற்கனவே கடன் வழங்கியவரிடம் இருந்து புதிய கடன் வழங்குபவருக்கு மாற்றுவது வீட்டுக்கடனின் இருப்பு பரிமாற்றம் எனப்படும். எளிமையாக சொல்வதானால் பழைய கடனை முழுவதுமாக செலுத்த புதிய கடன் வாங்குவது என்பதாகும். அதன் பிறகு புதிதாக கடன் வாங்கியவரிடம் மாதாந்திர தவணைகளை செலுத்தலாம்.

வீட்டுக்கடனை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்கடனை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

உங்கள் தற்போதைய கடனளிப்பவருக்கு முதலில் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஒரு கடிதம் அல்லது படிவத்தின் மூலம் நீங்கள் இருப்புப் பரிமாற்றத்தை விரும்புகிறீர்கள் என்று உங்கள் புதிய கடனாளிக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கான காரணங்களை பட்டியலிட வேண்டும்.

ஒப்புதல் கடிதம்

ஒப்புதல் கடிதம்

NOC அல்லது ஒப்புதல் கடிதத்தை, நீங்கள் விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் போது உங்களுக்கு புதிய கடன் கொடுப்பவரிடம் தர வேண்டும்.

ஆவணங்கள்

ஆவணங்கள்

உங்கள் புதிய கடன் வழங்குபவரை தொடர்புகொண்டு உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். NOC மற்றும் KYC ஆவணங்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களோடு, உங்கள் சொத்து ஆவணங்கள், கடன் இருப்பு, வட்டி அறிக்கைகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 பழைய கடன் வழங்குநரிடமிருந்து உறுதிப்படுத்தல் பெறவும்

பழைய கடன் வழங்குநரிடமிருந்து உறுதிப்படுத்தல் பெறவும்

உங்களின் அனைத்து ஆவணங்களையும் உங்கள் புதிய கடன் வழங்குநரிடம் சமர்ப்பித்த பிறகு, உங்கள் கடன் கணக்கை முடிப்பது தொடர்பான உங்கள் பழைய கடனாளியின் இறுதி உறுதிப்படுத்துதலை பெற வேண்டும். அதன்பின் புதிய கடன் வழங்குனருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தினால் உங்கள் வீட்டுக்கடன் இருப்பு பரிமாற்ற பணிகள் முடிந்துவிடும்.

புதிய கடன் ஒப்பந்தம்

புதிய கடன் ஒப்பந்தம்

இருப்பு பரிமாற்ற பணி முடிந்தவுடன் ஏற்கனவே கடன் கொடுத்தவருக்கும், புதிய கடன் வழங்குபவருக்கும் இடையே புதிய கடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். புதிய கடனளிப்பவர் நிலுவை தொகைக்கு சமமான காசோலையை பழைய கடனாளிக்கு வழங்குவார். இதனையடுத்து புதிய கடன் வழங்கியவரிடம் மாதத்தவணை செலுத்த வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+