நாட்டில் பலரும் தங்களுடைய சேமிப்பை பாதுகாப்பான வழியில் அதிகரிக்க வேண்டும் என்று சிந்திக்கின்றனர். அதற்கான நம்பகமான வழியை போஸ்ட் ஆபீஸ்கள் வழங்குகிறது. போஸ்ட் ஆபீஸ்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுடைய வருமானத்தை பாதுகாப்பான முறையில் அதிகரிக்க முடியும். இங்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் திட்டங்களில் ஒன்றுதான் பிக்சட் டெபாசிட்கள். போஸ்ட் ஆபீஸ்கள் மட்டுமின்றி வங்கிகளிலும் பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக முதலீடு என்று வரும்போது மக்கள் மனதில் முதலில் தோன்றுவது பிக்சட் டெபாசிட் என்னும் FD தான். இதன் மூலம் ரூ.10 லட்சம் பெறுவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண்டை பொறுத்து வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. உதாரணமாக 1 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு 6.9 சதவீதமும், 2 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு 7 சதவீதமும், மூன்று ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு 7.1 சதவீதமும், 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தை பயன்படுத்துபவர்கள் கூட்டு வட்டியின் மூலம் அதிக வருமானத்தைப் பெற முடியும்.
ரூ.10 லட்சம் வருமானம் பெறுவது எப்படி?: 5 வருட பிக்சட் டெபாசிட்டில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் இந்த வருமானம் சாத்தியமே. முதல் 5 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.5 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக 2,24,974 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் ஐந்தாண்டு கால முடிவில் ரூ.7,24,974 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
இதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக 3,26,201 ரூபாய் கிடைக்கும். ஏற்கனவே முதல் ஐந்து ஆண்டுகளுக்கு கிடைத்த ரூ.7,24,974 ரூபாய் உடன் 3,26,201 ரூபாய் வட்டியை சேர்த்து 10,51,175 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
வருமானத்தை அதிகரிப்பதற்கான தாரக மந்திரம் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதுதான். ஐந்தாண்டு காலமே அதிகம் என்று எண்ணுபவருக்கு இந்த வழி ஏற்புடையதாக இருக்காது. ஆனால் நீண்ட காலம் முதலீடு செய்தாலும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெறலாம். ஏனெனில் இதற்கு மேல் முதிர்வு காலம் கொண்ட திட்டங்களும் போஸ்ட் ஆபிஸ்களில் வழங்கப்படுகின்றன.
உதாரணமாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு 15 ஆண்டுகள் நீங்கள் முதலீடு செய்த தொகையை எடுக்க முடியாது. ஆனால் இதை பொறுத்தவரையில் வெறும் 10 ஆண்டுகள் வரை மட்டுமே உங்களுடைய பணம் லாக் செய்யப்பட்டிருக்கும்.
உங்கள் பிக்சட் டெபாசிட்டை நீட்டிக்க விரும்பினால், அதற்கு முன்கூட்டியே போஸ்ட் ஆபீஸ்களில் விண்ணப்பம் பெற்று தெரிவிக்க வேண்டும். 1 வருட பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்கள் 6 மாதத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும். 2 வருட FD-இல் முதலீடு செய்பவர்கள் 12 மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும். 3 வருடங்கள் மற்றும் 5 வருடங்கள் பிக்சட் டெபாசிட் முதலீடு செய்து அதை மீண்டும் நீட்டிக்க விரும்புவார்கள் 18 மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். இந்த காலக்கெடு மறந்துவிடும் என்று நினைப்பவர்கள் அக்கவுண்ட் திறக்கும்போது ஆட்டோமேட்டிக் நீட்டிப்பு வசதியின் மூலம் பலன் பெறலாம்.
குறைந்தபட்ச முதலீடு: போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் கிளையைப் பார்வையிடலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

ஈரோடு மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது!! இனி கோவை மக்கள் ஈரோடுக்கு படையெடுப்பாங்க!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்



Click it and Unblock the Notifications